சைனீஸ் கோஸ் ஃப்ரை

தேதி: February 5, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கோஸ் - 200 கிராம்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 2 பல்
முட்டை - ஒன்று
மிளகு - கால் தேக்கரண்டி
வெங்காயத் தழை - சிறிது (விரும்பினால்)
ஃபிஷ் சாஸ் - ஒரு மேசைக்கரண்டி (விரும்பினால்)
சோயா சாஸ் - ஒரு மேசைக்கரண்டி
மல்லித் தழை - சிறிது
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். கோஸை மெல்லிய நீள துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், வெங்காயத் தழை, மல்லித் தழையை நறுக்கி வைக்கவும். பூண்டு, பச்சை மிளகாயை தட்டி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தட்டிய பூண்டு, பச்சை மிளகாய் போட்டு தாளித்து, வெங்காயம், வெங்காயத் தழை போட்டு வதக்கவும்.
பின் மல்லித் தழை சேர்த்து, முட்டையை உடைத்து ஊற்றவும்.
அனைத்தும் ஒன்று சேர நன்கு வதக்கவும்.
பின் கோஸ், உப்பு சேர்த்து வதக்கவும்.
பாதி வெந்ததும் சோயா சாஸ், ஃபிஷ் சாஸ் சேர்த்து, கொர கொரப்பாக பொடித்த மிளகு தூவி முக்கால் பாகம் வேக விடவும்.
சுவையான சைனீஸ் கோஸ் ஃப்ரை தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

முசி அக்கா சைனீஸ் கோஸ் ஃப்ரை ஈஸி அன்ட் டேஸ்ட்டி டிஷ் சூப்பர் குறிப்பு அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

முசி சைனீஸ் கோஸ் ஃப்ரை நல்லாருக்கு வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் முசி சைனீஸ் கோஸ் ஃப்ரை ரொம்ப சூப்பராவும் ஈஸியாவும் வித்தியாசமாகவும் இருக்கு.. வாழ்த்துகள்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

முசினா நானும் முட்டைகோஸ் இப்படி செய்வதுண்டு,ஆனால் பிஷ் சாஸ் சேர்த்தது இல்லை.சேர்த்து பார்க்கிறேன்.

ரொம்ப அருமையா இருக்குங்க... வித்தியாசமாவும் இருக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முதலா வந்து பதிவிடும் உங்கள் அன்பிர்க்கு,மிக்க நன்றி.கனி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க நன்றி.சுவர்ணா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ரேவதி வாழ்த்திர்க்கு ரொம்ப நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பதிவிர்க்கு ரொம்ப நன்றி.,அவசியம் செய்து பாரு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு ரொம்ப நன்றி...

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அஸ்ஸலாமு அலைக்கும் முஹ்சினா கோஸ் ஃப்ரை ரொம்ப நல்லா செய்து இருக்கிங்கமா ... நாங்க கொஞ்சம் வேற மாதிரி செய்வோம்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

முசி புதுமையா நல்லா இருக்கு குறிப்பு வாழ்த்துக்கள்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

முஹசீனா வித்தியாசமான குறிப்பு.நிச்சயம் செய்து பார்கிறேன்.வாழ்த்துக்கள் :)

Kalai

வ அலைக்கும் சலாம்,மிக்க நன்றி.ஹலிலா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ரொம்ப நன்றி.,அருள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.