குலாஸ் என்னும் உணவு கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

என் கணவர் அவரது 10 - 15 வயது வரை (1980 - 1985) மாலத்தீவில் இருந்தார்களாம். அப்போது அங்கு இந்த குலாஸ் என்னும் உணவு வகையை சாப்பிட்டு இருக்கிறார்கள். இதை ஸ்ரீலங்கன் உணவு என்று சொல்கிறார்கள். இந்த உணவு குறிப்பு யாருக்கேனும் தெரியுமா? நான் பிற நாடுகள் மற்றும் ஸ்ரீலங்கா என்னும் தலைப்பில் உள்ள குறிப்புகளை பார்த்து விட்டேன். எனக்கு கிடைக்க வில்லை.

இது மைதா மாவை தேய்த்து அதில் டூனா மீன் உள்ளே வைத்து சிறிய உருண்டைகளாக செய்து எண்ணையில் பொரித்து எடுக்கும் உணவு.

இது ஸ்ரீலங்கன் உணவா அல்லது மாலத்தீவு உணவா என்ற குழப்பமும் உள்ளது. தயவு செய்து என் சந்தேகத்தை தீர்த்து வைக்கவும். செய்முறையும் தெரிய படுத்தவும்.

Gulha (குலா) இது மாலத்தீவின் பிரபலமான உணவு வகை. ஆனால் இதுக்கு பூர்வீகம் இலங்கையாக இருக்க வாய்ப்பு உண்டு. காரணம் இவர்களின் உணவு பழக்கமே மசால வகை இல்லாதது தான். வெறும் உப்பு போட்டு வேக வைத்த மீன் தான் இவர்களின் பழங்கால உணவு. அதன் பின் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளின் உணவுகளை இவர்கள் பழகியதாக சில நாள் முன் மாலத்தீவு நண்பர் ஒருவர் சொல்லி கேட்டேன்.

குறிப்பு கொடுத்திருக்கனா நினைவில்லை. ஆனால் தெரியும்... சொல்கிறேன்.

http://arusuvai.com/tamil/node/25040 - இது தான் ரெசிபி. முடிஞ்சா அடுத்த வாரத்தில் படம் எடுத்து அனுப்ப பார்க்கிறேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா ,
மிக்க நன்றி. நான் நீங்கள் கூறிய மசாலாக்களை வதக்கி செய்வேன். மைதாவுடன் தேங்காய் சேர்த்து பிசைவேன். நீங்கள் சொல்லி உள்ளது போல செய்து பார்க்கிறேன். உடன் பதிலலித்ததற்கு நன்றி. உங்களின் பிற மாலத்தீவு உணவு வகைகளை நான் படித்தேன். கட்டாயம் செய்து பார்க்கிறேன்.
அன்புடன்,
சங்கரி.

Love is God.
அன்பே சிவம்.

இங்கே எதையுமே வதக்கி ஸ்டஃப் பண்ண மாட்டாங்க. டின் டூனா கூட அப்படியே தான் ஸ்அஃப் பண்ணுவாங்க. ஆனா மைதாவுடன் தேங்காய் துருவல் சேர்த்து பிசைவது இங்கும் உண்டு. ஒரு சிலர் அப்படியும் செய்வாங்க. குலா, மஸ் ஹுனி ரோஷி போன்றவைக்கு அது போல் சேர்த்து பிசைவாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்