சிக்கன் ஷவர்மா

தேதி: February 8, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

ஷவர்மா ரொட்டி / குபூஸ் / டார்டிலாஸ் - 2
எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ
வெங்காயம் - பாதி
வெள்ளரிக்காய் - பாதி
கேரட் - பாதி
கோஸ் - சிறிது
மயோனிஸ் / தயிர் - தேவைக்கு
ஆலீவ் ஆயில் - சிறிது
வினிகர் / எலுமிச்சை சாறு - சிறிது
உப்பு
ஊற வைக்க:
தயிர் - 2 மேசைக்கரண்டி
மிளகு தூள் - அரை - ஒரு தேக்கரண்டி
பூண்டு விழுது - ஒரு பல்
உப்பு
தஹினி சாஸ் (Tahini Sauce) செய்ய:
வெள்ளை எள் - 3 மேசைக்கரண்டி
எண்ணெய் - சிறிது


 

சிக்கனுடன் ஊற வைக்க கொடுத்தவற்றை சேர்த்து கலந்து பிரட்டி 4 - 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்த சிக்கனை க்ரில் செய்தோ (அ) தவாவில் சிறிது எண்ணெய் விட்டு பொரித்தோ எடுத்து சின்ன துண்டுகளாக நறுக்கி வைக்கவும். (கொத்த வேண்டாம்).
காய்களை விரல் அளவு துண்டுகளாக்கி, உப்பு மற்றும் வினிகர் / எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி 2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் ஊற விடவும்.
கடாயில் எள்ளை பொரித்து (சிவக்க வறுத்து விட கூடாது) மிக்சியில் அதனை பொடிக்கவும். பின் 2 தேக்கரண்டி / தேவைக்கு சிறிது சிறிதாக வெஜிடபிள் ஆயில் சேர்த்து மயோனிஸ் பதத்திற்கு அரைக்கவும். தஹினி சாஸ் (Tahini Sauce) தயார்.
தயிர் பயன்படுத்தினால் அதனுடன் உப்பும், மிளகு தூளும் கலந்து ஸ்மூத்தாக அடித்து வைக்கவும். மயோனிஸ் எனில் ஏதும் தேவை இல்லை. இப்போது ரொட்டியின் நடுவே உப்பு மற்றும் வினிகர் / எலுமிச்சை சாறில் ஊறிய காய்களை நீரின்றி பிழிந்து எடுத்து விரும்பும் அளவுக்கு வைக்கவும்.
அத்துடன் தஹினி சாஸ் வைக்கவும். விரும்பினால் சிறிது ஃப்ரென்ச் ஃப்ரைஸ் கூட வைக்கலாம்.
பின் தயிர் கலவை / மயோனிஸ் வைத்து சிக்கன் துண்டுகள் விரும்பும் அளவுக்கு வைக்கவும்.
விரும்பினால் மேலே சிறிது ஆலீவ் ஆயில் விடலாம். அடியில் சிறிது ரொட்டியை மடித்து ஸ்டஃபிங் மேல் மூடும் படி வைத்து பின் ஒரு பக்கம் இருப்பதை மடித்து சுருட்டவும்.
சுவையான சிக்கன் ஷவர்மா தயார். பொதுவாக கடைகளில் இதை பட்டர் பேப்பரில் சுற்றியே கொடுப்பார்கள். நான் அலுமினியம் ஃபாயிலில் சுற்றி இருக்கிறேன். சிந்தாமல் சாப்பிட, சுருட்டியது பிரியாமல் இருக்க இப்படி ஏதேனும் சுற்றி வைத்தால் நல்லது.

இதற்கு ஸ்பெஷலாக ரொட்டி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நாம் சாதாரணமாக மைதாவுடன் சூடான நீர் விட்டு பிசைந்து செய்யும் ரொட்டியையே சற்று பெரிதாக செய்தால் போதுமானது. அப்படியே அரபு நாடுகளில் கிடைப்பது போல் செய்ய விரும்பினால் குபூஸ் பயன்படுத்தலாம். பொதுவாக இதில் அளவு என்பது ஏதும் கிடையாது. நம் விருப்பம், நம் சுவைக்கு ஏற்றபடி எல்லாம் கூடவோ குறையவோ வைக்கலாம்.

கூடவே இதில் விரல் அளவு Pickled Vegetables தான் பயன்படுத்துவார்கள். அது வினிகரில் போடப்படும் ஊறுகாய் வகை. அந்த புளிப்பும், உப்பும் கிடைப்பதற்காக தான் நான் எலுமிச்சை / வினிகரில் உப்பு கலந்து 2 மணி நேரம் ஊற வைக்க சொல்லி இருக்கிறேன். நீங்கள் விரும்பினால் கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும் இது போன்ற காய்கறி ஊறுகாய் வாங்கி பயன்படுத்தலாம். வீட்டிலேயும் சுலபமாக போடலாம். சிலர் இதில் சாலட் இலைகள் கூட வைப்பார்கள்.

எலும்பில்லாத கறி நல்லது. நான் குறைவாக செய்ததால் எலும்போடு க்ரில் செய்த கறியிலிருந்து எலும்பை நீக்கி இருக்கிறேன். இதே போல் மட்டன் ஷவர்மாவும் செய்யலாம். வெஜிடேரியனாக செய்ய ஃபளாஃபில் (Falafel) செய்து வைக்கலாம் கறிக்கு பதிலாக. இதே போல் ரொட்டி இல்லாமல் உள்ளே வைக்கும் கலவை எல்லாம் அப்படியே தயாரித்து ஒன்றாக கலந்து ப்ரெட் நடுவே வைத்து ஷவர்மா சாண்ட்விச்சும் செய்யலாம். இவையும் சுவையாக இருக்கும். அரேபியர்கள் சுமக் (Sumac) என்ற ஒரு வகை ஸ்பைஸ் மிக சிறிய அளவில் பயன்படுத்துவார்கள். சில நாடுகளில் இதில் Oregano, Parsley பயன்படுத்துவார்கள்.

இது அப்படியே ஒரிஜினல் ஷவர்மா ரெசிபி இல்லை. சிரியாவில் இருந்த போது அவர்கள் எல்லாவற்றையும் தனி தனி கப்பில் வைத்து நாம் கேட்ட பின் தான் கலந்து செய்து கொடுப்பார்கள். அதை தினமும் மாலை நேரத்தில் சாப்பிடும் வழக்கம் எனக்கு உண்டு. அப்படி அவர்கள் செய்வதை பார்த்து கற்றுக்கொண்டதையே கொடுத்திருக்கிறேன். சிக்கன் ஊற வைக்க, தயிர் கலவை எல்லாம் என்ன சேர்க்கிறார்கள் என்பது எனக்கு சரியாக தெரியாது. தெரிந்தவரையில் சுவைக்கு ஏற்றபடி சேர்த்து நான் செய்வதை இங்கே சொல்லி இருக்கிறேன். ஏனெனில் ஷவர்மா என்பது இது போன்ற மிடில் ஈஸ்ட் நாடுகளில் பிரபலம் என்றாலும், நாட்டுக்கு நாடு ஊருக்கு ஊரே இவை செய்யும் விதம் மாறுபடும். ஜார்டனில் கிடைக்கும் ஷவர்மாவுக்கும், சிரியாவில் கிடைக்கும் ஷவர்மாவுக்குமே ஏக வித்தியாசம் சொல்லலாம்.

குபூஸ் செய்ய: <a href="/tamil/node/6215"> குபூஸ் </a>

ஷவர்மா ரொட்டி செய்ய: <a href="/tamil/node/24488"> ஷவர்மா ரொட்டி </a>


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வனி அக்கா சிக்கன் ஷவர்மா நா பர்ஸ்ட் டைம் இந்த மாதிறி ரெசிபி பாக்ரேன் அக்கா ரொம்ப புதுமையா தான் அக்கா இருக்கு ,
செய்முறை கூட ஈஸியா தான் அக்கா இருக்கு நிச்சயமா பார்டி டைம் ஸ்பெஷல் ரெசிபி அக்கா நல்ல குறிப்பு அக்கா :-)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வனி அக்கா சிக்கன் ஷவர்மா,சூப்பர்.பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு.

இதெல்லாம் கூட வீட்ல இவ்ளோ ஈசியா செய்ய முடியுமானு தோனுது.சூப்பர்.வாழ்த்துகள்.

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

வனி சிக்கன் ஷவர்மா... பார்த்ததுமே நாக்கில ஷவர்(மா)ங்க:))
வித்யாசமான குறிப்பினை கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள் வனி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வனி சிக்கன் ஷவர்மா,ஓரிஜினலா நல்லா இருக்கு.சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வனி அட்டகாசமான குறிப்பு அப்படியே எடுத்து சுவைக்கனும்னு தோணுது :) வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சிக்கன் ஷவர்மா நல்லா செய்துருக்கீங்க வனிதா நானும் செய்து பார்க்கிறேன்

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

அஸ்ஸலாமு அலைக்கும்
நல்ல நபிமொழி

குறிப்பும் அதற்குறிய விளக்கமு எக்ஸலன்ட்... பிக்னிக் குறிப்பு இது எனக்கு. மன்ச்சி பாக உன்டாயி வனிதாகாரு...

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) ஏற்கனவே இதில் சுலபமான முறை ஒன்னு சமீஹா கொடுத்தாங்களே கனி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) //பார்த்ததுமே நாக்கில ஷவர்(மா)ங்க:))// - ஹஹஹ்ஹா... எப்படி இப்படி அருள்??? பயங்கரமா யோசிக்கறீங்க. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) ட்ரை பண்ணி பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஷவர்மா நல்லா இருக்கு..செய்து பார்கிறேன். வாழ்த்துக்கள் :)

Kalai

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா