கிளிஞ்சல் ஆந்தை

தேதி: March 16, 2013

5
Average: 4.8 (12 votes)

 

கிளிஞ்சல்கள்
ஃபெவிக்கால்
ஃபெவி ஸ்டிக்
ஆரஞ்சு நிற ஆர்காமி பேப்பர்
மார்க்கர்

 

ஒரே மாதிரியாக 2 கிளிஞ்சல்களை எடுத்துக் கொள்ளவும். படத்தில் உள்ளவாறு இரண்டு கிளிஞ்சல்களையும் சேர்த்து ஃபெவிக்கால் தடவி ஒட்டவும். அதனை சிறிது நேரம் கைகளாலேயே அழுத்தி பிடித்துக் கொண்டு ஃபெவிக்கால் தடவிய இடத்தின் மேல் ஃபெவி ஸ்டிக்கை சிறிது தடவி காய விடவும்.
காய்ந்த பிறகு அதன் மேல் பகுதியில் ஏற்கனவே ஒட்டியதைவிட சற்று சிறிய கிளிஞ்சலை படத்தில் காட்டியுள்ளபடி முன்பக்கம் தெரிவதுபோல் ஃபெவிக்கால் மற்றும் ஃபெவி ஸ்டிக் தடவி ஒட்டி காய விடவும்.
ஒரு பெரிய க்ளிஞ்சலை எடுத்து ஏற்கனவே ஒட்டி வைத்திருக்கும் கிளிஞ்சல்களை அதன் மேல் வைத்து ஒட்டவும். சிறிது நேரம் காய விடவும்.
பிறகு ஆரஞ்சு நிற ஆர்காமி பேப்பரில் படத்தில் உள்ளவாறு கால் மற்றும் மூக்கு பகுதியை வரைந்து அதனை தனியே நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
படத்தில் உள்ளவாறு முக்கோண வடிவில் உள்ள பேப்பரை மூக்கு பகுதிக்கு ஃபெவிக்கால் தடவி ஒட்டவும். நடுபகுதியில் உள்ள இரண்டு கிளிஞ்சல்களின் அடியில் கால் பகுதியை ஒட்டவும். கண்களுக்கு மார்க்கர் கொண்டு வரைந்து விடவும். கிளிஞ்சல்களில் செய்த எளிமையான ஆந்தை தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

டீமுக்கு வாழ்த்துக்கள். அருமையான முயற்சி.பொதுவா நான் ஆந்தையைக்கண்டால் அலறுவேன். அது 360 டிகிரியில் தலையை திருப்புவதுபோல் தோன்றும். ஆனா இந்த வெள்ளை பக்ஷி கியூட்டா இருக்கே. எனக்கு அனுப்ப மாட்டீங்களா?

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

க்யூட்டாக இருக்கிறார் டீம்.

‍- இமா க்றிஸ்

very nice ...

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

ரொம்ப ரொம்ப அழகான ஒன்னு... என்னிடம் சிரியாவில் வாங்கிய எலி ஜோடி இருக்கு இது போல சங்கு, சிப்பி வைத்து செய்திருந்தாங்க. உங்க கைவண்ணம் அழகோ அழகு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப அழகா இருக்கார் ஆந்தையார்.வாழ்த்துக்கள் டீம் :)

Kalai

ஃபெவி ஸ்டிக் என்றால் என்ன? சப்ஸ்டிட்யூட் கிடைக்கும் எனக்கு.
இருந்தாலும் அறிந்துகொள்ளக் கேட்கிறேன், ஹாட் க்ளூ ஸ்டிக்கா அது!!! எப்படி இருக்கும்?

‍- இமா க்றிஸ்