help pls.kannerudan kelvi

vanakam.enaku mariage agi 2 yrs achi baby ilai.en husband ku problem. semen check pannanga bt.
bt no sperm nu result.so testicular biopsy seinum nu solitdanga.netru antha
opration seithachu.enaku kulanthai piraka chance iruka pls,terinthavgrgal sollunga

அன்புச் சகோதரி, நல்ல நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும். நேர்மறை எண்ணங்கள் தான் வாழ்க்கையை வளமாக்கும். உங்களுக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம்

அன்புடன்,
ஹலீமா

rombe rombe nadri,ungga vartai rombe aruthal tarugirathu.

varuthapadatginga ella proplelkum oru theervu undu nambringala kandipa unga proplemkum oru mudivu undu athudhan unga baby unga husbanda manasu nohama sandhosama pathukonga avanga nalla fruits nuts kudunga ninga avaruku mattu vudai val attu kal ithalam vangi soup pottu kudunga avokoda fruit kudunga badham casew pista ella nutsayum arachi milkla mix panni kudunga ka dont manasula ava nambikayaum kulapathaum vidunga kandipa ungaluku babyruku dont feel

God's gift everyone

naan nambikaiyudan iruken bt enge kulanthai pirakamal poidumo endra bayam robhave iruku enna panrathunu terila kasdama iruku.smile panna kuda mudiyala

முதலில் கவலையை விடுங்கள் தோழி.எல்லாம் நல்ல படியாவே நடக்கும்.எதையும் நினைச்சு கவலை படாம சிரிச்சி பேசுங்க.மற்றதை கடவுள் பார்த்துப்பார்.இன்னும் கொஞ்ச நாளில் நல்ல செய்தியோடு வருவீர்கள் பாருங்கள்.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

Rombe nadri.enakum serthu pray pannunga

kandippa pray pannuvom sister neenka manasa thairiyam nambikaiyudan vachukoka .... unka husband da feel pannama parthukonka . sila neram tension la hospital lalocation changes naaala antha maathiri ayidukalam neraya trtment vanthutuchu so dont worry kulanthai varamme naama santhosama irukka than atha ninaichu feel pannatheenka santhosama irunka naama positive va ninaipom kadavul unkalukku kandippa poositive aana result koodiya seekiram kuduppar .... appa enkaluku sweet tharuveenkala

Ninga solrathu pola nallathu nadanthal kandipa sweet tharu
ven sis tq

Hi, friends am new

enaku marriage agi 28 years agudhu. 27 vayathil magal irukiral. En magal nalla velayil irukkiral. nanum fat aga iripen en magal nalla hight konjam fat. innum thirumanam agavillai.varubavar ellam manadhai parpathilaiye en. fat aga irrundhal nalla decipline num nalla manamum irukadha. function ponal en thirumanam agavillai kettu kettu en manam salladaiyaga ulladhu.

முதல்லயே சொல்றேன்... உங்களை மனம் நோக வைக்கும் எண்ணம் எனக்கு இல்லை. கேள்வி கேட்டு இருக்கீங்க. என் பதில் உங்களைக் கொஞ்சமாவது யோசிக்க வைச்சா சந்தோஷப்படுவேன்.

பேசித் திருமணம் செய்து கொடுக்க நினைத்தால் இதையெல்லாம் ஃபேஸ் பண்ணித்தான் ஆகணும்.
//nalla velayil irukkiral// அது மட்டும் போதுமா!

உங்களை, வரப்போகும் மாப்பிள்ளையின் தாய் இடத்தில் வைத்து கொஞ்சம் யோசித்துப் பாருங்க. உங்க பையனுக்கு பொண்ணு பாக்குறீங்க. என்னென்ன க்வாலிட்டீஸ் எதிர்பார்ப்பீங்க! 'மனசு நல்லா இருந்து பொண்ணு நல்ல வேலைலயும் இருந்தா மட்டும் போதும். மீதி... எப்படி இருந்தாலும் பரவாயில்லை,' என்று நினைப்பீங்களா?

நீங்களே உங்க பொண்ணை, "konjam fat" என்று சொல்றீங்களே! கவலையா இல்லையா! ;( சரிசெய்ய ஏன் முயற்சி செய்யவில்லை! அவங்க உங்க பொண்ணு. கலியாண சமயம் இப்படி ஒரு பிரச்சினை வரலாம் என்று தெரியும்தானே!

//fat aga irrundhal nalla decipline num nalla manamum irukadha.// நல்ல மனம் எல்லோருக்கும் இருக்கும். டிசிப்ளின்... அளவுக்கு சாப்பிடுறது, ஒழுங்கா எக்சர்சைஸ் பண்றது, உடம்பை அளவோட வைச்சிருக்கிறது, ஹெல்த்தை கவனிச்சு பிரச்சினை இருந்தா சரியான நேரத்துல கவனிக்கிறது கூட ஒரு வகைல டிஸிப்ளின் தான் - செல்ஃப் டிசிப்ளின் இது. தோற்றம் - 'இதுல்லாம் இங்கே மைனஸ்,' என்று சொல்லாமல் சொல்லிக் காட்டும்.

திரும்ப யோசியுங்க. நீங்க பையன் அம்மா... 'பொண்ணு வேலை செய்யாம ஒரே இடத்துல உட்கார்ந்து இருப்பாங்களோ!', 'ஏதாவது உடம்புல பிரச்சினை இருக்குமோ!' 'குழந்தை கிடைக்கும் சமயம் பிரச்சினையாகுமோ!' 'நாளை நம்ம பையன் ட்ரீட்மண்ட் என்று கூட்டிட்டு அலையணுமோ!!' யோசிக்க மாட்டீங்களா நீங்க!! கண்ணை மூடிட்டு கட்டிக் கொடுப்பீங்களா!

அவங்களுக்கும் இதே மாதிரி சந்தேகம் வரலாம். நியாயம்தானே!

சரி, வரவங்க உடம்பைப் பார்க்காம மனசை மட்டும் பார்த்து கட்டிக்கறாங்கன்னு வைங்க. பின்னால யாராவது ஏதாவது சொல்லி அவங்க மனசு 'சல்லடை' ஆகுற சமயம் 'ட்ரீட்மண்ட் அழைச்சுப் போகலாம்,' என்று அவங்க நினைத்தாலும் உங்களுக்கு நிச்சயம் துக்கம் வரும். 'என்னடா, நம்ம பொண்ணை இப்படி சொல்லிட்டாங்களே!' என்று இருக்கும்.

குள்ளமா இருக்கிறது, நெட்டையா இருக்கிறது, கலரா இருக்கிறது, கலர் கம்மியா இருக்கிறது... இப்பிடியான விஷயம் எல்லாம் பிறப்பில் வருவது. மாற்ற முடியாது. இது வாழ்க்கைக்கு பிரச்சினையா இல்லாம இருந்தா ஓகே. பிரச்சினை ஆகும் போல இருந்தால் கூட சமாளிக்க என்ன வழின்னு பார்க்கணும். மனசைத் தைரியமா வைச்சுட்டு ஃபேஸ் பண்ணணும்.

நீங்க சொல்ற பிரச்சினை வேற. நீங்க பருமனா இருக்கிறதால பொண்ணும் அப்படித்தான் இருக்க வேணும் என்கிறது இல்லை. சரியாக்கி இருக்கலாம் எப்பவோ. கவனிச்சு இருக்கணும்.

//en manam salladaiyaga ulladhu.// கர்ர்... தப்பு. 'சல்லடை' உள்ளே ஊற்றும் நீர் கீழே கொட்டிரும். அப்படி இருக்கக் கூடாது நீங்க. அவங்க சொல்றதை அப்புடியே இறுக்கிப் புடிச்சுக்கங்க. அடுத்த தடவை அவங்க உங்களைப் பார்க்கும் போது, எல்லாம் சரியாகி இருக்கணும். நடத்திக் காட்டுவேன்னு ஒரு வைராக்கியம் வரணும் மனசுல.

என்ன காரணத்தால் உங்க உடம்பு பருமனா இருக்கு! சாப்பாடா! உங்க தினப்படி நடவடிக்கைகளாலயா! இல்ல ஹெல்த் பிரச்சினையா! மூன்றுல எதுவானாலும் மாற்று இருக்கு இல்ல! கவனிக்கணும் நீங்க. உங்க பொண்ணு உங்களையே ரோல் மாடலா எடுத்து இருக்காங்கன்னு நினைக்கிறேன்.

பருமனாக இருப்பவர்களுக்கு ஹெல்த் பிரச்சினை ரிஸ்க் அதிகம் என்கிறது நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஓபிஸிட்டி பற்றி, அதனால் என்னென்ன பிரச்சினைகள் எல்லாம் வாழ்க்கைல வரக்கூடும் என்பது பற்றி அறிந்திருப்பீர்கள். குழந்தைப் பேறும் பிரச்சினையாகலாம். இப்ப கூட லேட் இல்ல. நீங்க இருவரும் முழு மனசா இன்றைக்கு தொடங்கினாலும் கொஞ்சம் கொஞ்சமா வெய்ட் குறைக்கலாம். பொண்ணுக்கு கலியாணமாக நீங்க ஏன் குறைக்கணும் என்று நினைக்கிறீங்களா? காரணம் இருக்கு. அடுத்த போஸ்ட்ல சொல்றேன். இப்ப நேரம் பத்தல.

எடை குறைக்கிறது ஆரம்பத்துல கஷ்டமா இருக்கலாம். சிரமம் எல்லாம் பொறுத்துக்கணும். பருமன் குறையும்போது நீங்களே இலகுவாக உணருவீர்கள். ஃபிட்டாக ஃபீல் பண்ணுவீங்க. மூச்சு விட, நடக்க எல்லாம் ஈசியா இருக்கும். களைப்பு குறைவா இருக்கும். ஸ்டைலா ட்ரெஸ் பண்ணிக்கலாம். வாழ்க்கை இன்னும் ரசனையானதாக மாறும்.

உங்களுக்கு என்ன வயசு இப்போ? கலியாணமாகி இத்தனை வருஷம்னு மட்டும் சொல்லி இருக்கீங்க? எத்தனை வயசுல கலியாணம் ஆச்சு என்று சொல்லல. :-) சொல்லுங்க. இன்னும் கொஞ்சம் மிரட்டணும் உங்களை. :-)

வேற ஏதாவது கேட்க இருந்தாலும் கேளுங்க. பதில் சொல்றேன்.

//varubavar ellam manadhai parpathilaiye en// ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி. கேள்வி கேட்டுட்டு இருக்கிறதுல எதுவும் மாறப் போறது இல்லை. என்ன பண்ணணும் என்கிறதை மட்டும் பாருங்க இனி.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்