அறுசுவை தோழிகள் அனைவருக்கும் வணக்கம் .
நான் பட்டர்ப்ளை மிக்சி உபயோக படுத்தி வருகிறேன் அதில் உள்ள ஜார்க்கு குக்கர் போலவே காஸ் கட் போட வேண்டும். எனக்கு அந்த காஸ் கட் ஒரு வாரத்திற்குள் மிகவும் லூசாக ஆகி விடுகிறது. இது வரை பல முறை மாற்றி பார்த்து விட்டேன் . லூசாக ஆகி விட்டால் பிறகு அதை மூடி போட்டு அரைக்க முடியாமல் போகிறது. இதை தவிர்க்க எதாவது வழி இருக்கிறதா? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.
நன்றி,
மகாசங்கர்
Mahasankar
குக்கர் காஸ்கட்டை உபயோகப் படுத்தாத மற்ற நேரங்களில் தண்ணீருக்குள் அல்லது ஃப்ரீஸரில் போட்டு வைப்பதுண்டு, அதையே இதற்க்கும் பின் பற்றிப் பார்க்கலாமே.
மகாசங்கர்
வேலை முடிந்த உடனே வெளியே எடுக்காமல் கொஞ்சம் ஆற விட்டு எடுத்துப் பாருங்கள்.
//ஃப்ரீஸரில் போட்டு வைப்பதுண்டு// வாணி ஃப்ரிஜ்ஜைத்தான் சொல்றாங்க என்று நினைக்கிறேன். நானும் இதைச் சொல்ல நினைத்தேன்.
அல்லது... கழுவிய உடனே துடைத்துவிட்டு திரும்ப மாட்டி வைக்கலாம்.
அடுத்த தடவை வாங்கும் போது இதே அளவில் வேற ப்ராண்ட் கிடைக்குமா என்று பாருங்கள்.
- இமா க்றிஸ்
குக்கர் காஸ்கட்டை நான்
குக்கர் காஸ்கட்டை நான் ஃபிரீஸரில் தான் போட்டு வைப்பதுண்டு,என் மாமியார் எனக்கு சொல்லிக் கொடுத்தது, ரொம்ப காலத்திற்க்கு உழைக்கிறது.
gasket
cooker gasket & mixi gasket erandaium fridgeill vaikkaum. appadi vaitthal athu veaku natkaluku upayohappaduththalam
மிக்ஸி
ஹாய் மஹா., நானும் இதே மிக்ஸி தான் வத்திருக்கிறேன்.. எனக்கும் இதே பிரச்சனைத்தான்.. நானும் சர்வீஸ் சென்டரில் விசாரித்தபோது இந்த கம்பெனி மிக்ஸியில் எல்லோருக்கும் இதே ப்ராப்ளம் என்று சொன்னார்கள்...
இது மிகவும் மெல்லியதாக உள்ளதால் கழற்றி வைக்கும்போது லூசாகி விட வாய்ப்புள்ளது..
ஆனால் கடைசியாக வாங்கும் போது கம்பெனியில் புதிய கஸ்கெட் போட்டிருந்தார்கள்.. வாங்கி 6 மாதத்திற்கு மேலாகிறது...இன்னும் ஒரு ப்ராப்ளம் இல்லை.. நீங்களும் ப்ரான்டட் வாங்கிப் பாருங்கள் ப்ரச்சனை வராது ...
God bless us.