ஹாய் ஹாய் ஹாய்.... ஒரே நாளில் பல பக்கம் ஓடி புது இழை எல்லாம் துவங்கிய காலம் போய் இப்படி அரட்டை இழையை ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை துவங்கும்படி ஆக்கிபுட்டீங்களே!!! மக்களே.... இங்குட்டு வாங்க. வணக்கம் போடுங்க. ;)
ஹாய் ஹாய் ஹாய்.... ஒரே நாளில் பல பக்கம் ஓடி புது இழை எல்லாம் துவங்கிய காலம் போய் இப்படி அரட்டை இழையை ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை துவங்கும்படி ஆக்கிபுட்டீங்களே!!! மக்களே.... இங்குட்டு வாங்க. வணக்கம் போடுங்க. ;)
அக்கா
இந்த இழையில் பிள்ளையார் சுழியே நீங்க தான் ;) காலை வணக்கம். ஒழுங்கா இழை தூங்காம பார்க்க வேண்டியது உங்க வேலை. ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
hallo vanitha
iam jeyendran
வணக்கம்... :-)
இதோ பாருடா யாருக்கோ திடீர்னு அக்கா ஞாபகம் எல்லாம் வந்திருக்கு...
இதில் பிந்துக்கு ஜாப் அசைன்மென்ட் வேற... ரொம்ப ஓவரா இருக்கே.... ஹ்ம்ம்...... என்ன பனிஷ்மெண்ட் கொடுக்கலாம்?????
சரி அதை யோசித்து முடிவு செய்றேன்... அதற்கு முன், அனைவருக்கும் மாலை / காலை வணக்கம்... :-)
Enjoy your evening / day :-)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
ஹாய் வனி, கவி, கனி, உமா, வித்யா, இமா, தேன், பிந்து
ஹாய் வனி, கவி, கனி, உமா, வித்யா, இமா, தேன், பிந்து, எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்
அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை
அனைவருக்கும் மாலை மற்றும்
அனைவருக்கும் மாலை மற்றும் காலை வணக்கம் தோழிகளே... வாங்க வாங்க யாரெல்லாம் இருக்கீங்க....
அன்புடன்,
லலிதா
ஹலோ!!!!
ஹலோ!!!!
யாரையும் காணும், எல்லோரும் ஸ்கூல் லீவ் என்ஜாயிங்கா????
ஹலோ தாமரை நான் நலம், நீங்கள் நலமா???? ஆமாம் தேன்'ன்னு யாரை கூப்பிடுறீங்க??? இல்லை என் friend ஒருத்தங்க அதே பேரில் இருக்காங்க அது தான் கேட்கிறேன் :-)
ஹாய் லலிதா... உங்க message பார்த்தேன், உடனே பதில் போஸ்ட் செய்ய முடியலை... வேலை!!!! ;-) நாளை அல்லது வீக்கெண்டில் முடிந்தால் இந்த பக்கம் வாங்க பேசுவோம் :-)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
ஹாய்
எல்லோருக்கும் வணக்கமுங்கோ :). எல்லா மக்களும் பிசி ஆயிட்டீங்களோ... அரட்டைப்பக்கம் யாரையும் காணோமே... சீக்கிரம் வாங்கோ
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
திரைப்பட பாடலை கண்டுபிடியுங்க ;-)
பேச நேரம் இல்லாதவர்கள் வாங்க வந்து இந்த விளையாட்டில் கலந்துக்கோங்க... இந்த தமிழ் திரைப்பட பாடல் வரிகள் இடம் பெற்ற பாடலின் முதல் வரியை சொல்லுங்க...
கொஞ்சம் கஷ்டம் தான்... எல்லா பாட்டையும் கண்டுபிடிக்க முடியுதா பார்ப்போம்... :)
1970/1980's
============
1. தூரிகை எரிகின்ற போது, இந்த தாள்களில் ஏதும் எழுதாது...
2. தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி போனது போக எது மீதம்...
3. உண்மை காதல் என்றும் கட்சி மாறி போகாதடா காதலின் வேதனை என்றும் தீராதடா...
4. அரும்பான என் காதல் மலராகுமோ, மலராகி வாழ்வில் மணம் வீசுமோ?
5. என் இதயம் உன் உடைமை உனக்கது புரியாதா? இன்னும் அதை நீ மிதித்தால் உனக்கது வலிக்காதா?
1990/2000+
==========
6. கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன்...
7. ராணியை போல் வச்சிருக்க ஆசை பட்டா குத்தமில்லை, தேனீயை போல் கொத்திபுட்டா சின்ன பொண்ணு தப்பும்மில்லை...
8. என் தேவனே தூக்கம் கொடு, மீண்டும் அந்த வாழ்க்கை கொடு...
9. கலங்கும் போது சேறு, அது தெளியும் போது நீரு... கடவுள் போட்ட கோடு, அதை திருத்த போவதாரு?
10. நான் கரையாவதும் இல்லை நுரையாவதும் வளர் பிறையாவதும் உன் சொல்லில் உள்ளதடி...
க்ளு - எல்லாம் சோக பாட்டு :D
2,4,6,8,10 ஈஸி... மற்றவை ம்ம்ம்ம்.... பார்ப்போம்...
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
:-)
அனைவருக்கும் இனிய காலை / இரவு வணக்கம்...
என்னிடம் சொல்லாமல் தூங்க போனவர்களுக்கும் (கூட) இனிய காலை வணக்கம் ;-)
இந்த நாள் இனிமையானதாக அமைய வாழ்த்துக்கள்...
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
அக்கா
இரவு வணக்கம் :)
வரேன்... பிள்ளைகளை ஸ்கூல் அனுப்பிட்டு வந்து பார்க்கறேன் பாட்டெல்லாம்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா