பிரசவ அனுபவங்கள்......

தோழிகளே இது எனக்கு 9 வது மாதம்.உங்களுடைய பிரசவ அனுபவங்களை சொல்லுங்கள்.என்னை போன்றவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். உங்களுடைய மனநிலை,எதிர்பார்த்த, எதிர்பாராத நிகழ்வுகள்,முதன் முதலில் உங்கள் செல்லக் குழந்தையை பார்த்த அந்த உன்னதமான தருணம், பிரசவ வலி, அதை எதிர்கொண்ட விதம்,மருத்துவ சிகிச்சை இவற்றை எல்லாம் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

தளிகா நான் கூட முதலில் பிங்க் கலர்ல தான் டிரஸ்,சாக்ஸ்,கேப்,கிளவுஸ் எல்லாம் வாங்கினேன்.அது தான் முதலில் போட்டு விட ஆசை.குழந்தை பிறந்ததும் கண்டிப்பா சொல்வேன் தளிகா.உங்களுக்கு சொல்லாமையா?

மருத்துவர்கள் இப்படி மனசாட்சி இல்லாம நடந்துகிறது எவ்வளவு வருத்தமான விஷயம்.நம்பி வருகிறவர்களை ஏமாற்றாமல் சிகிச்சை அளிக்க வேண்டாமா?

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

வாழ்த்துக்கள் திவ்யா. எத்தனை மாதம் ஆகிறது. எத்தனை கனவுகளோடு இருக்கின்றீர்கள் என புரிகிறது.
தாளிகா, அதிரா உங்கள் அனுபவத்தை அழகாக பகிர்ந்துள்ளீர்கள். சில டாக்டர்கள் இப்படியும் இருக்கிறார்கள். தைரியம் சொல்லி நார்மலாய் பிறக்கவைக்கும் நல்ல டாக்டர்களுக் இருக்கிறார்கள்.

நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

திவ்யா,
இது ரொம்ப அருமையான திரெட்,எத்தனை விதமான அனுபவங்கள்.ரூபி,அதிரா அனுபவங்களை சொன்னது போல் எல்லோரும் வந்து சொல்லுங்கள்.குழந்தையின் முகத்தை முகத்தை பார்க்கும் அந்த தருணம்,ஆஹா,உலகில் மிக சந்தோஷமான நொடி அது தான்.

நானும்,என்னுடைய பதிவை போடரேன்,பிறகு........

திவ்யா,என்னுடைய வாழ்த்துக்கள்,நீங்கள் தாயாக பிரமோஷன் ஆவதற்க்கு..

அதிரா,தளிகா,
உங்கள் பிரசவகால அனுபவங்களை அழகாக,தெளிவாகவும் விளக்கி இருந்தது நன்றாக இருந்தது.விளக்கி இருந்த முறையில் சம்பவத்தை நேரில் பார்ப்பதைப் போல் காட்சிகள் கண் முன்னே விரிகிறது.சபாஷ்.
திவ்யா,நான் சென்னையில் தான் இருக்கிறேன்.
---ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹலொ All,

கொஞச நாட்கள் முன்பு தான் அருசுவை வளைதளம் பற்றி அறிந்து கொண்டேன்.

அஹா எத்தனை தோழிகள்........ எத்தனை அனுபவங்கள்......

ரொம்ப ஜாலியா இருக்கு பார்க்க... படிக்க...

இது தான் முதல் படிவம்.....

பூஜா

Love the heart that wounds U don't wound the heart that Loves U

திருமதி. திவ்யா அருண்

சுகப்ப்ரஸவம் ஆகி நல்லபடியாய் தாயும் சேயுமாய் ஆக வாழ்த்துக்க்ள் மற்றும் ப்ரார்த்தனைகள்.

என் மகளுக்கு 8 மாதங்கள் ஆகிறது. உண்மையில் நான் ஆசைப்பட்டது ஆண் குழந்தைக்கு. (ஆனால் அந்த எதிர்பார்ப்பு தவறான்து என்று இப்பொது உரைக்கிறது.)

எனக்கு சிசேரியன் என்று எனக்கு 5ம் மாதத்திலேயே முடிவாகிவிட்டது. காரணம். நான் சைட்டஸ் இன்வர்சிஸ் மதர். அப்படின்னா உடல் உறுப்புகல் (ஹார்ட், லிவர் உட்பட பொஸிஸன் மாறி அமைந்திருக்கும். மேலும் எனக்கும் ஹார்ட்டில் ஒரு சின்ன ஹோல் (இது எனக்கு 5 மாதத்தில் தான் தெரிந்தது.), மூச்சு கன்னா பின்னா வென்று வாங்கும்.

10ம் மாதம் ஆரம்பித்தவுடன் டாக்டர் 4 நாளைக்கொரு முறை செக் அப் வர சொன்னார். 4வது செக் அப் முடிவில் ஸ்கேன் எடுக்க சொன்னார். ஸ்கேன் ரிசல்ட் வந்தவுடன் குழந்தை தலை பெரிதாக இருப்பதாகவும், உடனே ஆப்பரேஸன் பண்ணவேண்டும். என்ன செய்வது. அந்த நேரத்தில் டாக்டர்களைத்தான் தெய்வமாய் நம்ப வேண்டியிருக்கிறது. சொன்னதற்கெல்லாம் தலையாட்ட வேண்டியிருக்கிறது.

டாக்டரே காலண்டரை எடுத்து நல்ல நாள் கிழ்மை பார்த்து , நவம்பர் 24 (அன்றுதான் என் உயிரினும் மேலான எனது அமிர்தவர்ஷினி என் வயிற்றில் இருந்து இந்த பூமிக்கு வந்த நாள்) அன்று நிறைந்த பவுர்ணமி , கார்த்திகை அன்றே ஆப்ரேஸன் செய்யலாம் என்று சொன்னார். எனக்கு இதில் சற்றும் உடன்பாடு இல்லை. என்ன செய்வது. குழந்தையின் தலை பெரிதாய் இருக்கிறதே இதனால் அவளுக்கு ஏதாவது சிரமமாகி விட்டால் அதனால் ஒத்துக்கொண்டேன்.

நவம்பர் 23 இரவே ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகிவிடுங்கள். கையில் ப்லட் வெயினில் மூலமாக ஒரு இஞ்சக்ஸன் போடவேணும். ஏனெனில் எனக்கு ஹார்ட்டில் ஹோல் இருப்பதால் இன்பெக்ஸனை தடுக்க குறைந்தது ஆப்பரேசனுக்கு 7 மணி நேரத்திற்கு முன்னதாக போடவேண்டும்.
நான் டாக்டரிடம் சொல்லி விட்டேன். என்னால் ஹாஸ்பிட்டலில் இரவு பொழுது தங்க முடியாது. ஊசி போட்டு என்னை வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள் என்று. இரவு 10 1/2 மணிக்கு ஊசி போட்டு காலை 5 மணிக்கு அட்மிட் ஆகவேண்டும், 8 1/2 மணிக்கு ஆபரேஷன்.

எனக்கு இரவெல்லாம் தூக்கமில்லை. எனது அக்காவை எழுப்பி அழுப்பி மணி கேட்டு அவர்களையும் தூங்கவிட வில்லை. என் ஹஸ் பவுர்ணமி கிரிவலத்திற்கு சென்றுவிட்டார். அவரை 1/2, 1 மணி நேரத்திற்கு செல்போனில் தொடர்பு கொண்டு அவரை வேறு டென்ஷன் பண்ணிவிட்டேன்.

எப்போதடா 5 மணி ஆகும். ஹாஸ்பிட்டலுக்கு போவோம் என்றாகிவிட்டது. 4 1/2 மணி ஆனவுடன் குளித்துவிட்டு நானும் எனது அக்காவும் ஹாஸ்பிட்டலுக்கு போய்விட்டோம்.

8 மணிக்கு ஆபரேஸன் தியெட்டருக்கு போனேன். எனக்கு முதுகில் ஊசி போடவில்லை மாறாக அனஸ்தீஸியா கொடுத்தார்கள். அந்த அனஸ்தீஸிஸ்ட் என்னம்மா இதுதான் முதல் குழந்தையா என்று கேட்டார். ஆமாம் என்று சொல்லி முடிக்கும் முன்னரே மயக்க நிலைக்கு போயாகிவிட்டது. பின்னர் ஒரு 15 நிமிடம் கூட ஆகியிருக்காது. எங்கேயோ ஒரு குரல் எனது பெயர் சொல்லி அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. வந்து பாருங்கள் என்று. அப்போது என் காதையே என்னால் நம்ப முடியவில்லை. வலி வேறு உயிர் போகிறது. என் கணவர் என் பெண்னை என்னிடம் காட்டி பாரு "பையன் பையன்" ரொம்ப எதிர்பார்த்த இல்லை. நமக்கு பொண்ணு பொறந்திருக்கு, பாப்பா எவ்வளவு ரோஸா இருக்கா, குண்டா இருக்கா. அந்த ஒரு நிமிடம் கண்ணை திறந்து பார்த்து பின்பு மூடிகொண்டேன்.
அப்போது நான் பார்த்த எனது குழந்தையின் முகம் என் வலியினையெல்லாம் வாங்கிக்கொண்டது.

நீஙகளும் இந்த பேரின்பத்தை வெகு விரைவில் நலமாய் எதிர்கொள்ள எனது வாழ்த்துக்கள்.

(தளிகா, அதிரா சீனியர்ஸ் உங்களின் எழுத்துக்கள் பார்த்தபின்பு தான் நான் எழுத துணிந்தேன். மிக நன்றி. நீங்கள் பதிவிட்ட விதம் அருமையாக இருந்தது.)

ஜீவா கிருஷ்ணன் சீக்கிரமே நல்ல செய்தி சொல்ல வாழ்த்துக்கள்.

அன்புள்ள திவ்யா இப்படி ஒரு த்ரெட் நீ தொடங்கியதில் ஒரு பெருமை உண்டு.
ஆங்கிலத்தில் நிறைய தளங்களில் பேர்த் ஸ்டோரீஸ் டயரீ இருக்கும் ஆனால் உலகிலேயே எனக்கு தெரிந்து முதன் முறையாக இங்கு தான் தமிழில் நாம் நமது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளப் போகிறோம்.
ஆம் ரொம்ப சரி எனக்கு என்னை இரண்டாக கிழிப்பதாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் என்னிடம் அனுமதி கேட்டு செய்தால் கவலைப் படமாட்டேன்..ஆனால் என்னிடம் மருத்துவர் சொல்கிறார் நிறிய பெண்கள் சொல்வார்களாம் அய்யோ டாக்டர் என்கிட்ட எதுவும் சொல்லாதீங்க நிங்களே எதுவாவது செய்யுங்க எனகு டென்ஷன் வேண்டாமென்று அதனால் நாங்கள் சொல்வதில்லை என்று..அது ஒரு நொண்டி சாக்கு.
நான் கர்ப்பமாக இருக்கும்பொழுது செக் அப்கு போகும்பொழுதே திருத்தமான எனது தேவைகளை சொல்லி விட்டேன்
1)எனக்கு நார்மல் டெலிவெரி ஆக முழு முயற்சி எடுக்க வேண்டும்
2)பிரசவம் பார்ப்பது ஆண் மருத்துவர்களாக இருக்க கூடாது
என்பது தான் என் நிபந்தனைகள்
இதுவெல்லாம் அவர் நிவர்த்தி செய்து தந்தார்.எனக்கு உண்மையில் லேபர் பெயினெல்லம் ஒன்னும் ப்ரச்சனை இல்லை..அதை சஹிச்சுக்கலாம்..ஆனால் எல்லம் முடிந்து குழந்தையோடு ரூமுக்கு வந்து பார்த்தால் கைய்யில் ஐவி போட்டிருபார்கள்..அதில் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்கும்...அதன் பின் 3 நாட்கள் தொடர்ந்து காலை மாலை ஒரு இஞெக்ஷன் பன்னுவார்கள் ஐவி வழியே..கடவுளே முதல் மூன்று நாட்கள் குழந்தையை தூக்க முடியவில்லை..கை வீங்கி கை நீல நிறமாகி நான் கெஞ்சி கூத்தாடியும் அதை அவிழ்க்க விடவில்லை.
மூன்றாவது நாள் ஒரே முடிவில் இறங்கினேன்..இந்த ஐவியை நீங்கள் கழற்றாவிட்டால் நாளை என் கைய்யை முறிக்க வேண்டி வரும் கை நீல நிறமாகி விட்டது எல்லாத்துக்கும் நீங்க தான் பொறுப்பு என்று திட்டிவிட்டேன்...அப்பொழுது தான் பயந்து கொண்டு அதனை கழற்றிநார்கள்.
கைய்யில் ரத்தம் கட்டி கட்டி அதன் வழியாகவே பொடி மருந்தை கலக்கி ஊசி போட்டால் பின்ன வலிக்காம என்ன செய்யும்..அப்பா எனக்கு மறக்க முடியாத அனுபவம்..இரவு நான் மூன்று நாட்கள் இந்த வலியால் தூங்கவே இல்லை ...திவ்யா உனக்கது போல ஐவி போட்டு விட்டு வலியோ அல்லது அனாவசியமாக எதுவாவது தாங்க முடியாத வலி என்றால் உடனடியாக மருத்துவரிடம் சொல்லி அதற்கு தீர்வு காண வேண்டும்
எனக்கு அதன் பின் கைய்யில் நேரடியாகவே தான் ஊசி ஏற்றிநார்கள் அப்ப கூட வலி கம்மி தான்.
ஷார்தா இப்படி ஒரு டேர்ம் நான் இப்பொழுது தான் கேள்விப் படுகிறேன்..ப்ரேவ் மோம்மி

பூஜா வாருங்கள் உங்களை அறுசுவை வரவேற்கிறது.கலக்குங்கள்.

ASIA WAVOO.M.S.
PEACE BE ON EARTH

hhijk

எப்படிம்மா இருக்கே. என் முதல் தோழியே. முதலில் நல்ல முறையில் பிரசவிக்க வாழ்த்துக்கள்.

என் அனுபவம்
முதல் பிரசவம்.
என் பையன் பிறந்தது. 27.03.1984. 24 வரை ஆபீஸ் சென்றேன். 26 அன்றும் சென்றிருப்பேன். ஆனால் என் பெரிய மைத்துனருக்கும் குழந்தை பிறந்திருந்தைப் பார்க்க என் மாமியார் சென்னை வந்ததால் திங்கள் முதல் லீவ் போட்டேன். செவ்வாய் அன்று பிறந்து விட்டான். திங்கள் இரவு பாத்ரூமில் போய் உட்கார்ந்து கொண்டேன். என் அம்மா பாத்ரூம் வாசலில். வேளியே வா, இல்லைன்னா அங்கேயே குழந்தை பிறந்துடும்ன்னுன்னு தவித்துக் கொண்டிருந்தார்கள். திங்கள் இரவு 9 மணிக்கு வலி வர ஆரம்பித்து உடனே ஆந்திர மஹில சபா ஆஸ்பத்திருக்கு அழைத்துச் சென்றார்கள் இரவு 12 மணிக்கு. செவ்வாய் மதியம் 2.45க்கு பிறந்தான். முதலிலிருந்தே பெரிய வலி வந்துவிட்டது. ஆஸ்பத்திரி வாசலில் என் அம்மா, மாமியார், மைத்துனர்கள், என் கணவர் என்று ஒரு பெரிய படை. ரோஜாப் பூ போல் இருந்த பிள்ளையைக் காண்பித்தார்கள். வலி எல்லாம் மறந்து போச்சு. உறவினர்கள் எல்லாம் குழந்தையைப் பார்க்க என்னவர் மட்டும் நர்ஸிடம் ஜெயந்தி எப்படி இருக்கிறாள் என்று கேட்டாராம். இன்றும் அதை நினைத்து சந்தோசப்படுவார் என் அம்மா.
முதல் திருமண நாள் அன்று கையில் ஒரு மாதக் குழந்தை.

இரண்டாவது பிரசவம்
நன்றாக அனுபவித்து ரசித்து பெற்றுக் கொண்டேன். பெண்ணுக்கு புதன் காலை ஆஸ்பத்திருக்குச் சென்றோம். லேட்டாகத்தான் வலி வந்தது. வியாழன் விடிகாலை 2 மணிக்கு சந்தியா தேவியார் வெளியே வந்தார்.
இரண்டாவது குழந்தைக்கு என்னைவிட என் பையன் தான் ஆவலாகக் காத்திருந்தான். ஆனால் அவன் பையன் கேட்டான். அப்புறம் தங்கையின் மேல் இன்று வரை ரொம்ப ஆசையாக இருக்கிறான்.
கடவுள் புண்ணியத்தில் இரண்டும் நார்மல் டெலிவரிதான்.

திவ்யா உங்களுக்கும் நார்மல் டெலிவரியாக இறைவனை ப்ரார்த்திக்கிறேன்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

உங்க பெயர் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நல்ல தமிழ் எழுதறீங்க. நல்லது. எப்பவும் தமிழைலேயே எழுதுங்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

மேலும் சில பதிவுகள்