பட்டிமன்றம் 89- தம்பதிகளுக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா ? வேண்டாமா?

அன்பு தோழி(ழர்)களுக்கு வணக்கம். நம்ப அறுசுவை பஞ்சாயத்து (பட்டிமன்றம்தேன்) நாட்டாமையாக மீண்டும் நானே வந்துட்டேன் :). அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. வேற வழியே இல்லை :)

நல்லா டிஷ்யூம் டிஷ்யூம் போடற தலைப்பாக இருக்கணுமே அப்பதானே நாரதருக்கு சிண்டு முடியும் வேலை சுலபமாக இருக்கும்னு பட்டிமன்ற தலைப்புகள் இழையில் "நாராயணா நாராயணா" ன்னு சொல்லிக்கிட்டே சுத்தி வந்தால் கரெக்டா சண்டையை பற்றியே ஒரு தலைப்பை நம் தோழி உதிரா கொடுத்திருந்தாங்க. கபால் னு தூக்கிட்டு வந்துட்டேன். நாரதர் மாதிரியே ஈரேழு உலகமும் சுற்றாமல் நேரடியா தலைப்பை சொல்லுன்னு நீங்க சொல்றது கேட்குது. சண்டை போடறதுக்கு என்னா அவசரம். தலைப்பு இதுதான்.....

********** கணவன் மனைவிக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா ? வேண்டாமா? .*********

வாங்க வாங்க சீக்கிரம் உங்கள் வாதப் பூக்களை அள்ளித் தெளியுங்கள். எடுத்து மாலையாக கோர்க்க காத்திருக்கிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்,

புதியவர்களுக்காக விதிமுறைகள் இங்கே.....

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.

அரசியல் அறவே பேசக்கூடாது.

அரட்டை அறவே கூடாது

ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.

நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும்.

வணக்கம் நடுவரே
எப்படித்தான் உங்களுக்கு இந்த தலைப்புகள் எல்லாம் தோணுதோ
ஆனா நல்ல தலைப்பு
கணவன் மனைவி பிரச்சினையை பெற்றோரிடம் சொல்ல கூடாது என்பது என் கருத்து
பெரிய பிரச்சினை நம்மால் தீர்க்க முடியவில்லை என்னும்போது ,சொல்லலாம்,முடிந்த வரை நாமே தான் தீர்த்து கொள்ள வேண்டும் ,பெற்றோரிடம் சொன்னால் அவர்களால் எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியாது ,தேவை இல்லாமல் அவர்களுக்கு வேதனை தான்,

வாங்க அருள். நீங்களும் சொல்லப்படாது அணியா!

பெரியவங்களிடம் பிரச்சினையை சொன்னால் அதுவே இன்னொரு பிரச்சினையாயிடும் அதனால் சொல்லவே கூடாதுன்னு சொல்லி சீட்டு புடிச்சு வச்சிருக்காங்க. அந்த சீட்டை விட்டுக் கொடுக்கறதும் புடிக்கறதும் அந்தப்பக்கம் வரவங்க கையில்தான் இருக்கு :)

இன்னும் விரிவான வாதங்களுடன் வாங்க அருள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க ஜெயா. நீங்களும் சொல்லவேப்படாதுன்னுதான் சொல்றீங்களா. அதுவும் கணவன் மனைவிக்கிடையே பெற்றோரே ஆனாலும் அந்நியர்தான்ன்னு நச்சுன்னு சொல்லிட்டாங்க. என்னப்பா சொல்லப்போறீங்க இதுக்கு?

மீண்டும் வாதங்களுடன் வாங்க ஜெயா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க பூர்ணிமா!

//எப்படித்தான் உங்களுக்கு இந்த தலைப்புகள் எல்லாம் தோணுதோ//

இது எனக்கு தோன்றிய தலைப்பு இல்லீங்க. தோழி உதிரா கொடுத்த தலைப்பு.

நீங்களும் சொல்லக்கூடாது அணிதானா! பெற்றோரிடம் சொன்னால் பிரச்சினையும் தீராது தேவையில்லாமல் அவங்களுக்கும் வேதனைதான் அப்படீங்கறாங்க.

எதிரணி வந்து என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்.

விரிவான வாதங்களுடன் மீண்டும் வாங்க பூர்ணிமா.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வணக்கம் நடுவர் அவர்களே!
தலைப்பு மிகவும் நன்றாக இருக்கிறது இன்று அணைத்து குடும்பங்களிலும் இது ஒரு பிரச்சனையாகவே உள்ளது. ஒரு சிலர் கணவன் மனைவிக்குள் நடக்கும் பிரச்சனையை, ஆண் / பெண் யாராக இருந்தாலும் அந்த பிரச்சனையை அவர்களின் பெற்றோருக்கு தெரிய படுத்துவது மிகவும் தேவையற்ற ஒன்று. கணவன் மனைவி இரண்டு பேரும் அவர்களுக்குள்ளாகவே பேசி தீர்த்து கொள்ளவேண்டும்.
****யாரவது ஒருவர் அட்ஜஸ்ட் செய்து பிரச்சனையை வெளிபடுத்தாமல் தீர்பதற்கான வழிகளை மேற்கொள்வதே சிறந்தது.
இதனை பெற்றோர்களிடம் கொண்டு சென்றால் அது மிகவும் பெரிய பிரச்சனையாக மாறிவிட வாய்ப்பு உண்டு. இரண்டு வீட்டாரும் அடித்து கொண்டு பஞ்சாயத்து வைத்து கொள்ளும் அளவுக்கு கூட போக வாய்ப்பு உண்டு.
அது மட்டுமின்றி இதனை அவர்கள் கௌரவ பிரச்சனையாக எடுத்து கொள்வார்கள். வேறு விதத்தில் தான் கொண்டுபோய் முடியும்.
"எனவே கணவன் மனைவி பிரச்சனையை பெற்றோரிடம் கொண்டு செல்வது கூடாது."

ஆகவே நடுவரே இந்த பிரச்சனைக்கு எனக்கு சாதகமான ஒரு நல்ல தீர்ப்பை கொண்டுங்கள்.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

வாங்க சங்கீதனா! நீங்களும் சொல்லக்கூடாது அணிதானா

//இதனை பெற்றோர்களிடம் கொண்டு சென்றால் அது மிகவும் பெரிய பிரச்சனையாக மாறிவிட வாய்ப்பு உண்டு. இரண்டு வீட்டாரும் அடித்து கொண்டு பஞ்சாயத்து வைத்து கொள்ளும் அளவுக்கு கூட போக வாய்ப்பு உண்டு.
அது மட்டுமின்றி இதனை அவர்கள் கௌரவ பிரச்சனையாக எடுத்து கொள்வார்கள். வேறு விதத்தில் தான் கொண்டுபோய் முடியும்.//
பிரச்சினையை பெற்றோரிடம் சொன்னால் அது பஞ்சாயத்து வைக்கர அளவுக்கு போயிடும் கவுரவப் பிரச்சினையா மாறிடும்னு சொல்றாங்க. நியாயமாத்தான் தெரியுது. அந்தப்பக்கம் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்.

தீர்ப்பு இன்னும் ஒரு வாரத்தில் வரும். யாருக்கு சாதகமா இருக்கும்னு ரெண்டு அணியினரின் வாதம்தான் முடிவு செய்யும் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பெற்றோரிடம் நம்முடைய பிரச்சினையை கொண்டு செல்வதால் ந பிரச்சினை போதாதென்று பெரியவர்களிடையே பிரச்சினைகள் வரும்,பிறகு நம் பிரச்சினை சரியானாலும் அவர்கள் பிரச்சினை சரியாகாது,அதுவே நமக்கு காலத்திற்கும் வேதனை ஆகி விடும்.நம் பெற்றோரும் அனைத்தையும் கேட்டு விட்டு சரி அட்ஜஸ்ட் செஞ்சிட்டு போ தானா எல்லாம் சரி ஆகிடும் அப்படினு சொல்லுவாங்க,இத விட நாம முதல்லயே அட்ஜஸ்ட் பண்ணோம்னா தானா சரியாயிடும்,இதுக்கு எதுக்கு அவங்க கிட்ட சொல்லணு தேவயே இல்ல.எல்லாத்துக்க் மேல நாலு செவத்துக்கு நடுவுல இருந்தாதான் அது கணவன் மனைவி பிரச்சினை ,வெலிய வந்தா அது பங்சாயத்து
மீண்டு வருகிறேன்

//பிறகு நம் பிரச்சினை சரியானாலும் அவர்கள் பிரச்சினை சரியாகாது,அதுவே நமக்கு காலத்திற்கும் வேதனை ஆகி விடும்//

பெற்றொரிடம் பிரச்சினையை கொண்டு போனால் அப்புறம் அவங்களுக்கு இடையே வரும் பிரச்சினை நமக்கு தலைவலி ஆகிடும்னு சொல்றாங்க. தலைவலை போய் திருகுவலி வந்தது போல தேவையா இதுங்கறாங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மக்களே எதிரணின்னு ஒன்னு இருக்கா.... நடுவருக்கு வேலையே இல்லாமல் ஈசியா தீர்ப்பு சொல்ல வச்சிடுவீங்க போல இருக்கே!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவரே ! இப்போதான் எனக்கு புரிந்தது இந்த தலைப்பை ஏன் தேர்ந்து எடுத்தீர்கள் என்று.
உங்களுக்கு வேலையே இல்லையே , இந்த தலைப்புல
MY DEAR நடுவரே, மருமகளோ / மருமகனோ ஒரு பிரச்னையை அவர்களின் பெற்றோர்களிடம் கூறி முடிவு எடுக்கும்போது மீண்டும் பிரச்சனை வரும்போது
அது இரண்டு வீட்டையும் பாதிக்கும் . மீண்டும் தலை தூக்கும் .
வாழ்நாள் வரை அது தொடரும்.
ஒருவரை பற்றி ஒருவர் புரளி பேசிக்கொண்டே ......................... இருப்பார்கள் .
அதன் பிறகு ஒருவர் நல்லதே செய்தாலும் அது அடுத்தவர்களுக்கு தவறாகவே தெரியும் .

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

மேலும் சில பதிவுகள்