பட்டிமன்றம்-90 *நட்பிற்கு சுவை சேர்ப்பது முழுமையான பகிர்வா? இல்லை அளவான பகிர்வா? *

அறுசுவை அன்பு மக்களே அனைவருக்கும் வணக்கம், உங்களுக்கான "90"வதுபட்டிமன்ற தலைப்பு:***நட்பிற்கு சுவை சேர்ப்பது
முழுமையான பகிர்வா? இல்லை அளவான பகிர்வா? விரிவாக சொல்லணும்னா உங்களின்
இன்ப-துன்பங்களை நட்புகளுடன் முழுமையாக பகிர்ந்து கொள்வது சுவையா? இல்லை
அளவான அளவு பகிர்ந்து கொள்வது சுவையா? அருமையான தலைப்பை அளித்த **இளவரசி
மேடம்** அவர்களுக்கு மிக்க நன்றியுடன் இனிதே பட்டியை துவக்குவோம்,
பட்டிமன்ற விதிமுறைகள்:
1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது.
3. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
4. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.
5. அரட்டை... நிச்சயம் கூடாது.
இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.
வாங்க எல்லாரும்:)

நம் வாழ்க்கையின் மிக நெருக்கமான முக்கியமான ஒரு உறவு நட்பு. ஒரு மெழுகுவர்த்தி அறை முழுவதும் ஒளி தரும் ஆனால் நல்ல நண்பன் வாழ்க்கைக்கே அர்த்தம் தருகிறான்.தாய், தந்தையை விட நன் வாழ்வில் அதிக நேரம் நம்முடன் இருப்பவர்கள் நண்பர்களே!.
இந்த நவீன யுகத்தில் எல்லாமே விரைவாக நடக்கின்றன ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்க்கையை ஐம்பத்து ஆண்டுகள் கழித்து பார்த்தால் இதுவரை என்ன பெற்றிருக்கிறோம் என ஆராய்ந்தால் நண்பர்கள் தான் நினைவுக்கு வருவர்.இந்தமாதிரி நண்பர்கள் கிட்ட முழுமையான பகிர்தல் இல்லைனா அந்த நட்புல என்ன சுவை இருக்க முடியும்?
இப்ப எதிர் அணில முழுமையான பகிர்வு இல்லைன்னாலும் ஒரு நண்பன் இன்னொரு நண்பனோட கஸ்டத்தை உணர்ந்து உதவி செய்வான் அப்படின்னு சொல்றாங்க .ஏன் நடுவரே ஆனானப்பட்ட நம்ப கிருஷ்ணபரமாத்மாவே, அவருடய உயிர் நண்பரான குசேலர் அவர் வீடு தேடிவந்து அவரோட கஷ்டத்தை(வாய்மொழி மூலமா பகிர்தல் இல்லைனாலும்)தளர்வான நடை மூலமா உண்ர்த்துனதுக்கு அப்புறமாக தானே அந்த கடவுள்கிட்ட இருந்து உதவியே கிடைச்சுது, இதே அவர் தன்மான உணர்வோட என் நண்பனே என் வீட்டுக்கு வந்து உதவி செய்யட்டும்னு யோசிச்சிருந்தா அவரோட 27 குழந்தைகளும் பட்டினில துவண்டு போயிருக்க மாட்டாங்களா? எல்லாம் அறிந்த கடவுள்கூட தன் நண்பன் தன்கிட்ட எல்லாத்தையும் நேரடியா வந்து உணர்த்தரதுதான் நட்புக்கு அழகுன்னு அதுவரைக்கும் நடக்கிறத பேசாம பார்த்துட்டு தானே இருந்தாரு, அப்ப மனிதர்களான நம்பலும் அவரு வழில தானே போகனும்...:) அதனால முழுமையான பகிர்வு தான் நட்புக்கு சுவை மட்டும் இல்ல, கஷ்டகாலத்துல உதவவும் செய்யும், நடுவரே ஆயிரம் பேர நண்பனா பெற்றவனுக்கும் ஒரு உண்மயான உயிர் நண்பன் இருக்க தான் செய்வான், அவன்கிட்ட முழுமையான பகிர்வு கண்டிப்பா நம்ப எல்லொருக்கும் இருக்கும், எதிரணிகிட்ட இல்லைனு சொல்ல சொல்லுங்க பார்க்கலாம்? அவ்வளவு ஏங்க நம்ப அறுசுவைல எல்லொரும் முகம்றியா நட்புகள் தான், எனக்கு இவங்களை தெரியும், இவங்க என் தோழி அப்படின்னு சொல்லிக்கிறோம், ஆனா எல்லாருக்கும் எல்லாரப்பத்தியும் முழுமையா தெரியாது, ஆனா இந்த நட்பு வட்டத்துலேயே கண்டிப்பா ஒரு ஒருத்தருக்கு பிடித்த , நம்பிக்கையான உயித்தோழி கண்டிப்பாக இருப்பாங்க, அவங்ககிட்ட முழுமையான பகிர்வு நிச்சயமாக இருக்கும் நடுவரே, வாய் வார்த்தைக்கு வேனும்னா எல்லாத்தையும் சொல்ல முடியுமா? அப்படின்னு சொல்லலாம் , ஆனா நாம எல்லாம் மனுசங்க , அட்லீஸ்ட் ஒருத்தர்கிட்டயாவது நம்பள் பத்தின விசயங்களை பகிராம இருக்க முடியாது அப்படிங்கிறது தான் உண்மை.நல்ல நண்பர்கள் கண்ணாடி போன்றவர்கள் . முக அழகையும் காட்டுவர், அழுக்கையும் காட்டுவர் . பாராட்டும்போது பாராட்டுவர் . கண்டிக்கும்போது கண்டிப்பர் . கெட்ட நண்பர்கள் நம்மைப் புகழ்ந்து கொண்டே செயலைச் சாதித்துக் கொள்வர் . 'உன்னை விட உயர்வான மனிதரைத் தவிர மற்றவர்களோடு தொடர்பு கொள்ள வேண்டாம்' என்பார் சிந்தனையாளர் கன்பூஷியஸ் . நல்ல நண்பன் வெயில் காலத்தில் விசிறியாகவும் , குளிர்காலத்தில் குளிர்காயும் நெருப்பாகவும் இருப்பான் . இந்த மாதிரி எல்லாம் பகிர்ந்து கொள்ளும் நண்பர்கள் எனக்கு கிடைக்கல அப்படின்னு எதிர் அணி சொன்னா அந்த பிழை அவங்க நண்பர்கள் கிட்டக்க இல்லைங்க, இவங்க கிட்ட தான் இருக்கு. பலாச்சுளையே இனிப்பு தான் நடுவரே, ஆனா அதுக்கூட தேனும் கலந்தா சுவையை பத்தி சொல்லவே வேண்டாம் அதுபோல நல்ல நண்பர்களிடம் முழுமையான பகிர்தலே அந்த நட்புக்கு மேன்மேலும் சுவை கூட்டும் எனச் சொல்லி விடை பெறுகிறேன்.
இந்த பதிவுலேயும் ஏதுனா ப்யிண்டு கண்டு பிடிச்சு எதிரணி வந்தா அதுக்கு பதில் சொல்ல அப்புறம வர்ரேன்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அனைவர்க்கும் வணக்கம்!இதோ வந்துவிட்டேன் நடுவரே! வேலை இருந்ததால் தாமதமாகி விட்டது. பட்டி முடிவதற்குள் 1 பதிவாது போட வேண்டும் என்று நினைத்தேன்.
நடுவர் தம்பி ஆபத்பாண்டவருக்கு வணக்கம் & வாழ்த்துகள்
எதையும் அளவோடு பகிர்வதே நல்லது. "அளவுக்கு மீரிநாள் அமுதமும் நஞ்சு". நண்பர்களிடம் அனைத்தையும் கூறினால் ஒரு சுவாரசியமே இருக்காது. சில பல விசயங்களை வெளிபடையாக பேச கூடாது. இதற்கு சிறந்த உதாரணம் பட்டி -89. பலவற்றை குடும்பத்திலேயே பேசி பகிர்ந்து கொண்டால் மட்டுமே சிறப்பானதாக அமையும்.
மன கஷ்டங்களை & சந்தோசங்களை, தன் கணவன் -மனைவி , தாய் -தந்தை, சகோதரன் -சகோதரி, இவர்களுடன் பகிர்ந்து கொண்டால் குடும்பம் நல்லபடியாக இருக்கும். ஒருவருக்கொருவர் அன்பை இவரு பகிர்ந்து கொள்ளவேண்டும்.
நண்பர்கள் ஜாலியாக இருக்க மட்டுமே நினைப்பார்கள் பிறகு அவர்கள் வேலை, குடும்பம் அவர்கள் கஷ்ட நஷ்டங்கள் ஆவர்களுக்கு முக்கியமாக இருக்கும் .
நாம் அனைத்தையும் பகிரும்போது நமது குடும்பத்தை பற்றி தவறான எண்ணம் வர வாய்ப்பு உண்டு.
நம் மீது முழுமையான அன்பும் அக்கறையும் நம் குடும்பத்தினருக்கு மட்டுமே இருக்கும். பள்ளி, கல்லூரி வாழ்கைக்கு மட்டுமே நட்பு சிறந்ததாக இருக்கும். எதையும் அளவோடே பகிர வேண்டும்.
நாம் குடும்ப பிரச்னையை கூறும்போது மற்ற நண்பர் என்ன நினைப்பார் நானே ஏகபட்ட பிரச்சனைல இருக்கேன் இதுல இவன் வேற என்று மனதிற்குள் நினைப்பர்.எதற்கு அடுத்தவருக்கு நமது பிரச்சனைகள் "அவர் அவர் வழக்கை அவர் அவர் கையில்"
நண்பர் எதனை நாட்களுக்கு உதவுவார்கள்?
எனவே நடுவரே அளவான பகிர்வே சிறந்தது! சிறந்தது! சிறந்தது!

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

// அளவோடு நாம் நடப்பது 3 ஆம் மனிதரிடம் தான்.... நட்பில் ஏன் நாம் அப்படி பழக வேண்டும்???//
கரெக்டா கேட்டீங்க :)
// நட்பு என்பது எந்த இரத்த உறவும் இல்லாமல் வரும் சொந்தம்... அது நமக்கு எப்போதும் ஆதரவாக தான் இருக்கும்... அது தான் நட்பு... அதை விட்டு விட்டு அவன் துரோகியாக மாறும் வாய்ப்பு உள்ளது என்று சொல்வது தவறு....//
உண்மை, சில சூழ்நிலைகளில் மாறும் வாய்ப்பு உள்ளது :(
//உண்மையான தோழன் உயிர் போகும் சூழ்நிலையிலும் தன் நண்பனை விட்டு குடுக்க மாட்டான்....
எல்லோரையும் நம் நண்பர்களாக நினைத்து எல்லாவற்றையும் சொல்ல சொல்லவில்லை... நண்பன் என்பவன் நம்மை புரிந்து கொண்ட ஒருவன்... எல்லோரையும் நண்பன் என்ற பெயரில் அழைக்கலாம் ஆனால் அப்படி கூப்பிடும் எல்லோரும் நண்பர்களாக ஆகா முடியாது... உண்மையான நட்பு எந்த சூழ்நிலையிலும் மறையாது...//
தெளிவுபடுத்தினா நல்லாயிருக்கும்ங்க மேலும் பல விரிவான வாதங்களுடன் வாங்க :).

நட்புடன்
குணா

நீங்கள் மனதின் ரகசியங்களை உங்களின் தனிப்பட்ட டைரியில் எழுதாமல் உங்கள் நண்பரின் மனதில் எழுத நினைக்கிறீர்கள்.

டைரியோ உங்கள் கண் பார்வையில் இருக்கும்
உங்கள் நண்பரோ ????????
நடுவரே நீங்களே இதற்கு பதில் சொல்லுங்கள் .

ஒரு வேளை உங்கள் நண்பர் எதிரியாகிவிட்டால் (நினைத்து மட்டும் கொள்ளுங்கள் . உடனே நல்ல நண்பர் எதிரியாகிவிட்டால் அவர் நண்பரே கிடையாது. உங்களுக்கு நண்பரே தேர்ந்தெடுக்க தெரியவில்லை என்று பதில் சொல்ல வேண்டாம். ஒரு நல்ல நண்பரே கெட்டவர் ஆகி விட்டார் என அவர் கெட்டவர் ஆன பின்னால் தான் தெரியும் ) நீங்கள் போடும் சண்டை எப்படி இருக்கும்.

நீ என்ன ரொம்ப யோக்கியமோ ........................................................தெரியாது
உன் தங்கை .....................................................................பத்தி ...............................தெரியாது (Fill in the blanks)

குடும்பமே நாறி போய் விடும்

நம்ம அழுக்கு நம்ம வீட்டு செப்டிக் டாங்கில் இருக்கிற வரைக்கும் தான் வீட்டுக்குள் நடமாட முடியும். வெளியே வந்துட்டா எல்லாரும் மூக்கை பொத்திக்க வேண்டியதுதான்

இது தேவையா நடுவரே

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

'//உன்னை விட உயர்வான மனிதரைத் தவிர மற்றவர்களோடு தொடர்பு கொள்ள வேண்டாம்' என்பார் சிந்தனையாளர் கன்பூஷியஸ் . நல்ல நண்பன் வெயில் காலத்தில் விசிறியாகவும் , குளிர்காலத்தில் குளிர்காயும் நெருப்பாகவும் இருப்பான் . இந்த மாதிரி எல்லாம் பகிர்ந்து கொள்ளும் நண்பர்கள் எனக்கு கிடைக்கல அப்படின்னு எதிர் அணி சொன்னா அந்த பிழை அவங்க நண்பர்கள் கிட்டக்க இல்லைங்க, இவங்க கிட்ட தான் இருக்கு. பலாச்சுளையே இனிப்பு தான் நடுவரே, ஆனா அதுக்கூட தேனும் கலந்தா சுவையை பத்தி சொல்லவே வேண்டாம் அதுபோல நல்ல நண்பர்களிடம் முழுமையான பகிர்தலே அந்த நட்புக்கு மேன்மேலும் சுவை கூட்டும்//
அருமையான கருத்து,
//இந்த பதிவுலேயும் ஏதுனா ப்யிண்டு கண்டு பிடிச்சு எதிரணி வந்தா அதுக்கு பதில் சொல்ல அப்புறம வர்ரேன்.//
அடுத்த கட்ட வாதங்களுடன் வாங்க :)

நட்புடன்
குணா

வாங்க வணக்கம், நீங்க அளவான பகிர்தல் அணியா.!! மகிழ்ச்சிங்க,
// நண்பர்கள் ஜாலியாக இருக்க மட்டுமே நினைப்பார்கள் பிறகு அவர்கள் வேலை, குடும்பம் அவர்கள் கஷ்ட நஷ்டங்கள் ஆவர்களுக்கு முக்கியமாக இருக்கும் .//
//நாம் குடும்ப பிரச்னையை கூறும்போது மற்ற நண்பர் என்ன நினைப்பார் நானே ஏகபட்ட பிரச்சனைல இருக்கேன் இதுல இவன் வேற என்று மனதிற்குள் நினைப்பர்.எதற்கு அடுத்தவருக்கு நமது பிரச்சனைகள் "அவர் அவர் வழக்கை அவர் அவர் கையில்"
நண்பர் எதனை நாட்களுக்கு உதவுவார்கள்?//
கண்டிப்பாக யோசிக்க வேண்டிய விஷயம், எதிரணியினர் என்ன சொல்றாங்கனு பார்ப்போம் :-) அடுத்த கட்ட வாதங்களுடன் வாங்க :)

நட்புடன்
குணா

//டைரியோ உங்கள் கண் பார்வையில் இருக்கும்
உங்கள் நண்பரோ ????????//
யோசிக்க வேண்டிய விஷயம்ங்க, :)

//ஒரு வேளை உங்கள் நண்பர் எதிரியாகிவிட்டால் (நினைத்து மட்டும் கொள்ளுங்கள் . உடனே நல்ல நண்பர் எதிரியாகிவிட்டால் அவர் நண்பரே கிடையாது. உங்களுக்கு நண்பரே தேர்ந்தெடுக்க தெரியவில்லை என்று பதில் சொல்ல வேண்டாம். ஒரு நல்ல நண்பரே கெட்டவர் ஆகி விட்டார் என அவர் கெட்டவர் ஆன பின்னால் தான் தெரியும் ) நீங்கள் போடும் சண்டை எப்படி இருக்கும்.//
:))) ஆஹா,,

//நம்ம அழுக்கு நம்ம வீட்டு செப்டிக் டாங்கில் இருக்கிற வரைக்கும் தான் வீட்டுக்குள் நடமாட முடியும். வெளியே வந்துட்டா எல்லாரும் மூக்கை பொத்திக்க வேண்டியதுதான்//
உண்மை உண்மை,எதிரணியினர் என்ன சொல்றாங்கனு பார்ப்போம் :-) அடுத்த கட்ட வாதங்களுடன் வாங்க

நட்புடன்
குணா

எதிர் அணில சொல்றாங்க...//நம்ம அழுக்கு நம்ம வீட்டு செப்டிக் டாங்கில் இருக்கிற வரைக்கும் தான் வீட்டுக்குள் நடமாட முடியும். வெளியே வந்துட்டா எல்லாரும் மூக்கை பொத்திக்க வேண்டியதுதான்..// நம்ப மனமும் ஒரு செப்டிக்டாங்கு மாறி ஆகக் கூடாதுன்னு தான் ஒரு நண்பர்கிட்டயாவது எல்லா விசயத்தையும் பகிரிந்துக்க சொல்றோம், அப்படி இவங்க பகிர்ந்துருந்தால் நம்ப மனம் அப்படிங்கிறசெப்டிக் டேங்குல அழுக்கு சேர்ரதயே நட்பு தடுத்திருக்கும், அப்படி அழுக்கு சேர்ந்த பின்னாடி பகிர்ந்தா கூட அந்த அழுக்க எப்படி வெளியேத்தலாம்ன்னு தான் நட்பு ஆரய்ந்து வழி சொல்லி கொடுக்கும் நடுவரே.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

// நம்ப மனமும் ஒரு செப்டிக்டாங்கு மாறி ஆகக்கூடாதுன்னு தான் ஒரு நண்பர்கிட்டயாவது எல்லா விசயத்தையும் பகிர்ந்துக்க சொல்றோம், அப்ப இவங்க பகிர்ந்துருந்தால் நம்ப மனம் அப்படிங்கிற செப்டிக்டாங்கு'ல அழுக்கு சேர்ரதயே நட்பு தடுத்திருக்கும் //
சபாஷ்.! சரியான போட்டிங்க, முழுபகிர்வே முக்கியம்னு சொல்றீங்க, பேஷ் :-) அளவுபகிர்வு அணியினர் என்ன சொல்றாங்கனு பார்போம், மேலும் அடுத்தகட்ட வாதத்தோட வாங்க :-)

நட்புடன்
குணா

நட்பு நல்லா போயிகிட்டு இருக்கிறவரைக்கும் முழு பகிர்வு நல்லதுன்னு சொல்லுற நீங்க, ஒரு முறிவுன்னு வர்றப்ப என்ன நினைப்பு வரும் தெரியுமா.

"இவர் கிட்ட போய் எல்லாத்தையும் சொல்லிட்டோமே. அப்போ நமக்கு நிறைய கஷ்டம் இருந்தது. நம்ம மனசுக்கு ஆறுதலா இருக்கும், எல்லாத்துக்கும் தீர்வு கிடைக்கும்ன்னு நினைச்சேன்.
நம்ம மேல இருக்குற கோபத்திலே நம்ம ரகசியத்தெல்லாம் வெளியே சொல்லிட்டா என்ன பண்றது ?????????
யாருக்கு முன்னாடியவது நம்மள குத்தி பேசுவாரோ????????
இப்படி எல்லாத்தையும் ஓட்ட வாய் மாதிரி உளறி கொட்டுனதுக்கு நம்ம காலிலே இருக்கிறதே கழட்டி நம்மளையே அடிச்சுக்கலாம்.
இனி என்ன நடக்க போவுதோ, இல்லன்னா நம்மள பத்தி வெளியிலே சொல்லாமல் இருக்க அவ கிட்ட சும்மாவாச்சும் நட்பு வச்சுக்கலாமா ??????????????????"
இந்த மாதிரி கேள்விக்குறி நிறைய வரும்

நீங்க எப்படி நடுவரே ????????

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

மேலும் சில பதிவுகள்