பட்டிமன்றம் 91 :மாணவர்களிடையே தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகமாவதன் காரணம் வீட்டுசூழலா? சமூகச் சூழலா?

அன்பு அறுசுவை மக்களே வணக்கம். இன்றைய வாரம் பட்டிதலைப்பு :மாணவர்களிடையே தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகமாவதன் காரணம் வீட்டுசூழலா? சமூகச் சூழலா?

தேர்வு முடிவுகள் வெளியாகி பல மாணவர்களின் கனவுகள் மெய்ப்பட ஆரம்பிக்கும் நேரம் சிலமாணவர்களின் கனவுகள் சிதறியிருக்கும்.கனவுகள் சிதறிய கவலையில் வாழ்வை முடிக்க போகும் சூழ்நிலைக்கு போவதன் காரணம்?

வாதங்கள் தேர்வு முடிவை ஒட்டித்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. பொதுவாகவே இக்காலத்தில் சிறு தோல்வியையும் தாங்கும் மனநிலை இளம்வயதினரிடையே இல்லை.இதன் பின்னணி என்ன? மனவுறுதியும் தெளிவும் இல்லாமல் சிறுதோல்விக்கும் கோரமுடிவை எடுக்கும் கொடுமைக்கு காரணம்? இதிலிருந்து மாணவர்களைக் காக்கும் வழி? அப்படிப்பட்ட சூழலில் இவ்வாதம் பலருக்கும் ஒரு ஆரோக்யமான சிந்தனைத்தெளிவைத் தரும் என்னும் நம்பிக்கையில் இத்தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.
சமூக மாற்றங்களை தெளிவான கண்ணோட்டத்தில் பார்க்கும் நம் கவிசிவாவின் தலைப்பு இது. அவர்களுக்கு முதல் நன்றி. முதன் முறையாக பட்டித் தலைவர் பொறுப்பேற்றிருக்கும் என்னை மனமுவந்து ஏற்று சிந்தனையை செதுக்கி உங்கள் வாதங்களை வைப்பீர்.

பட்டிமன்ற விதிமுறைகள்:
1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.

2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது.

3. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.

4. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.

5. அரட்டை... நிச்சயம் கூடாது.
இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

வாருங்கள் மக்களே வந்து வாதங்களை பொழியுங்கள் :-)

இந்தா வந்துட்டோம்ல திரும்பவும்...

இப்பல்லாம் மாணவர்கள் நல்ல மார்க் வாங்கிட்டு,பேப்பர்,நியுஸ் நு எல்லாத்துலயும் பசங்க பெயர் வருது..

இதெல்லாம் நல்லா மதிப்பெண்வாங்காத பசங்க கிட்ட கம்பர் பண்ணி பார்க்கிறாங்க.வெற்றி அடைந்தவன கொண்டாடுற சமுகம் தோல்வி அடைந்தவனை கேலி ,கிண்டல் ,ஏன் இப்படினு பல கேள்வி கனைகளை தொடுத்து மன உளைச்சல்ல தள்ளி விட்டு தவறான முடிவுக்கு தள்ளுது..

பள்ளிக்கூடமும் இதுல பெரிய காரணகர்த்தாவா இருக்கு..இப்பல்லாம் பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் இருபாலருமினைந்து படிக்கிறாங்க..எதிர்பாலினர்க்கு எதிர்க்கவோ அல்லது அனைவரின் எதிர்க்கவும் வைத்து திட்டும் போது அவமானமா நினைச்சு இப்படிலாம் செய்றாங்க

பெற்றோரும் பிள்ளைகளுக்கு ஏன் அழுத்தம் குடுக்கறாங்க.சமுகத்தோட பார்வைல அவங்க கவுரமா இருக்கறதுக்கு..

எல்லா பிரச்சைக்கும் சமுகம் மறை முகமாகவோ அல்லது நேரடியாகவோ அழுத்தம் கொடுத்துக்குனுதான் இருக்கு..

Be simple be sample

இது என்னங்க கொடுமையா இருக்கு..எதிரனி சொல்லறது

மாணவர்கள் வீட்டுல பெற்றோர் சொல்லறதையே தாங்கிக்க மாட்டாங்களாம்.

ஆனா சமுகத்துல எல்லோரும் செய்யற கேலி ,கிண்டல் நு எல்லாத்தியும்துடைச்சி போட்டுவாங்களா..

அவனவ்ன் முகபுத்தகத்துல ரிக்வெஸ்ட் கொடுத்துட்டு,ஏத்துக்கல ,இல்ல நாம அனுப்புன குறுஞ்செய்திக்கு திரும்ப பதில் வரலனாலே மனம் உடஞ்சு போறாங்கனு சமிபத்திய ஆராய்ச்சி முடிவு சொல்லுதுனு சொல்லறாங்க.. முகம் அறியா நட்புக்கே இப்படினா குடுப்ப சூழ்நிலைய விட சமுகத்துல அதிகமான நேரத்தை செலவிடற மாணவர்களுக்கு எப்படி பக்குவம் வரும்..
அதையும் சமுகம் தான் எடுத்துனு வரனும்..

Be simple be sample

உடம்புக்கு மிகவும் சரியில்லை. அதனால் தொடர்ந்து வரயியலவில்லை. மன்னியுங்கள் அனைவரும்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

பரவாயில்லை நடுவரே! முதலில் உடல் நலத்தை கவனிங்க. நாங்க சமத்தா சண்டை போட்டுக்கிட்டு இருக்கோம் :).

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சண்டை போடறனு சொன்ன எதிரணி யாரும் காணமே.....????

Be simple be sample

அன்பு நடுவருக்கும், பட்டிமன்றத்தில் பங்கு கொள்ளும் மற்றும் பார்வையிடும் அனைவருக்கும் வணக்கம்.

தலைப்பைப் படிக்கறப்பவே மனசில் ஒரு அழுத்தம், வேதனை. என்ன செய்யறது, உயிரின் மதிப்பு யாருக்கும் தெரிய மாட்டேங்குதே. உயிரின் விலை வெறும் மதிப்பெண்களின் டோட்டல்தானா. எத்தனையோ விஷயங்கள் முற்றிலுமாக ஒழிந்து போயிருக்கு. அது போல, இந்த மாதிரி நடப்புகளும் வெறும் கடந்த காலமாக ஆகிடணும்.

இந்தத் தலைப்பை இப்படிக் கேட்டுக்கோங்க - மாணவர்கள் தற்கொலை நடக்காமல் இருக்க - மாற வேண்டியது வீட்டு சூழலா, சமூகச் சூழலா? இப்படிக் கேட்டுகிட்டாலே உடனே பதில் கிடைச்சுடும் - நிச்சயமாக சமூகச் சூழல்தான்.

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது பழமொழி. என் குழந்தை படித்தால்தான் என்னோட இனிஷியல் போட்டுக்கணும் என்பது இல்லை. அதுவும் அதிகம் படிக்கணும், டாக்டர் ஆகணும் இஞ்ஜினீயர் ஆகணும் என்பது எல்லாம் வெறும் பேச்சு. பெற்றோர்களிடம் கேட்டுப் பாருங்கள் - உங்கள் குழந்தை தீர்க்காயுளுடன் இருந்து, நல்லதொரு பண்பு மிக்க சிட்டிசனாக இருக்கணுமா, இல்லை அதிகம் படித்து, அக்கம்பக்கத்தினர் வியக்கணுமா என்று? முதலில் சொன்னதைத்தான் சொல்வாங்க.

வெளி நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் ஒரு சொற்றொடரை சொல்றாங்க - PEER PRESSURE! அதாவது குழந்தை ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சதுமே பெற்றவர்களிடம் சொல்ல ஆரம்பிச்சுடுமாம் - ‘ என்னோட ரூமில் பின்க்/ப்ளூ கலரில் பெயிண்ட் பண்ணுங்க, பெரிய காரில் கொண்டு வந்து ட்ராப் பண்ணுங்க, ஏன்னா, என் ஃப்ரெண்ட்ஸ் வீட்டில் எல்லாம் இப்படித்தான் இருக்கு’ என்று.

இதேதான் இப்ப நம் நாட்டிலும் நடக்கிறது. அடுத்த வீட்டுக் குழந்தை என்ன படித்தால் என்ன, எத்தனை மார்க் வாங்கினால் என்ன. சும்மாவா இருக்கு இந்த சமூகம். நல்ல மார்க் வாங்கி, நல்ல காலேஜில் சேர்க்கலைன்னா - அடடா, அவங்க அம்மா அப்பாவுக்கு அக்கறையே இல்லையே, என்று ஒரு புலம்பல். கொஞ்சம் குறைச்சலாக மார்க் வாங்கினால் - அச்சச்சோ, இந்த மார்க்குக்கு எங்கே இடம் கிடைக்கும், வேலை கிடைக்கும் என்று பயமுறுத்தல்.

சரி, ரொம்ப நல்ல மார்க் வாங்கி மருத்துவம்/பொறியியல் சேர்ந்தவங்களையும் சும்மா விட்டுடுவாங்களா என்ன? அட்டா, இந்தக் காலேஜில் எல்லாம் இப்ப காம்பஸ் இண்டர்வியூவே கிடையாது, இண்டர்னேஷனல் லெவலில் 95வது இடத்தில் இருந்த இந்த காலேஜ், இப்ப 135வது(!) இடத்துக்கு வந்துடுச்சு என்று - இன்று ஒரு தகவல் - - இப்படி மாணவர்களை எப்படியெல்லாம் மன பலத்தைக் குறைக்க முடியுமோ அப்படியெல்லாம் செய்யறாங்க.

என் குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்த ஒரு ஆசிரியத் தம்பதி - மிக அருமையான கவுன்சிலிங் கொடுப்பாங்க. அவங்களே அவங்க பையன் +2 வந்த போது, மிகவும் மனம் தளர்ந்து போனாங்க. அந்த ஆசிரியை சொன்னது இன்னும் காதில் ஒலிக்குது. ‘பையன் என்ன மார்க் வாங்குவான் என்பதைப் பற்றி எங்களுக்கு ரொம்பவும் கவலை எதுவும் இல்லை, ஆனால் வீட்டுக்கு வர்ற சொந்தக்காரங்க/தெரிஞ்சவங்க பேசறதுதான் பையனை ரொம்பவும் புல் டவுன் செய்கிறது’ என்று சொன்னாங்க.

அடுத்த பதிவில் ஒரு சின்னக் கதை

அன்புடன்

சீதாலஷ்மி

அனைவருக்கும் வணக்கம்.

நமக்குள்ளேயே இருக்கும் மன நிம்மதியை எப்படி எல்லாம் இந்த சமூகம் போகிற போக்கில் சிதைத்து விட்டுப் போகிறது என்பதற்கு ஒரு சின்னக் கதை:

ஒரு அப்பாவும் மகனும் தங்களுடைய கழுதையை சந்தையில் விற்பதற்காக ஓட்டிக்கிட்டுப் போனாங்களாம்.

வழியில் அவங்களைப் பார்த்த ஒருவர் - அடடா, எதுக்கு ரெண்டு பேரும் நடந்து வர்றீங்க, யாராவது ஒருத்தர் கழுதை மேல உக்காந்து போகலாமே என்று சொன்னார்.

உடனே, மகனை, கழுதை மேல் உட்கார வைத்து, கூடவே நடந்தார் அப்பா. கொஞ்ச தூரம் போனதும், எதிர்பட்ட இன்னொருவர் - என்னப்பா இது, அவன் இள வயசு நடக்க முடியும், வயதான நீ அல்லவா கழுதை மேல் உட்கார்ந்து வரணும் என்றார்.

சரிதான் என்று மகன் கீழே இறங்கிக் கொண்டு, அப்பாவை கழுதை மேல் உட்கார வைத்து, போனார்கள்.

சிறிது தூரம் போனதும் அடடா, இந்த அப்பாவுக்கு கொஞ்சம் கூட மகன் மேல பாசமே இல்லையே, சின்ன வயதுப் பையனை இரக்கமே இல்லாமல் நடக்க வைச்சு, இவர் சொகுசாக உட்கார்ந்து போறாரே, என்று போகிற போக்கில் ஒருவர் சொல்லிட்டுப் போனார்.

இதேதடா வம்பாப் போச்சு என்று கலங்கிய இருவருமே கழுதையின் மேல் உட்கார்ந்து சிறிது தூரம் போனார்கள். அவ்வளவுதான், கழுதை ஒரேயடியாக போய்ச் சேர்ந்து விட்டது.

பிறகென்ன - செத்துப் போன கழுதையை அப்பாவும் மகனுமாக தோளில் சுமந்து கொண்டு சந்தைக்குப் போனார்கள்.

இன்றைய சமூகமும் அப்படித்தான் இருக்கிறது. அடுத்தவர்களது வாழ்க்கையையும், அவர்களது நிலையையும் முடிவுகளையும் விமரிசனம் செய்தே, மன அழுத்தத்தை அதிகரிக்கிறது.

அன்புடன்

சீதாலஷ்மி

அனைவருக்கும் வணக்கம்.

ஒரு பிரச்னையைப் பற்றி பேசுகிற போது, அதற்கான தீர்வையும் சிந்தித்துப் பார்ப்போமே.

சமூகம் என்பது நாலு பேர் என்று சொல்வாங்க. அந்த நாலு பேரை நாம் நம் தினசரி வாழ்வில் சந்திக்கிறோம். நம்மையறியாமலே நாமும் அந்த நாலு பேரில் ஒருத்தராக இருக்கிறோம்.

இனிமேலாவது மாணவர்களை சந்திக்கிற போது, அது உறவினர்களாக இருக்கட்டும், அல்லது அறிந்தவர்/தெரிந்தவர் வீட்டுக் குழந்தைகளாக இருக்கட்டும் - என்னது இவ்வளவு மார்க்தானா, இந்தக் காலேஜிலேயா படிக்கிறே, என்றோ - அல்லது இலவச புத்திமதிகளை வழங்கியோ அந்த பிஞ்சு மனங்களில் வெம்பிப் போக வைக்காமல் இருப்போம்.

எல்லோருக்கும் இந்த பூமியில் இடமுண்டு, எந்தப் படிப்பு படித்தாலும் எத்தனை மார்க் வாங்கினாலும், முன்னேற வழியுண்டு, என்பதை முதலில் நாம் உணர்வோம். நம்மை மாற்றிக் கொள்வோம்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு நடுவரே பட்டிய எட்டிபார்க்கலாம்னு கம்பளி குல்லாயோட கம்ப்யூட்டர ஆன் பண்ணினா உங்களுக்கு உடம்பு சரியில்லனு சொல்லி இருக்கீங்க... இந்த குளிர் ஜூரத்திலும் சேம்பின்ச் சொல்லாம போனா காய்ச்சல் இன்னும் அதிகமா போய்டுமோனு சொல்லிட்டு என்னொட வாதததையும் முன்னால எறக்கி வெச்சிட்டு போய்டுறேன்.
பாத்தீங்களா நடுவரே!! என்னதான் குளிர் காய்ச்சல்னாலும், எங்க எதிரணிக்கு பயந்துட்டு முடங்கிட்டனோனு இந்த சமுதாயம் பேசுமேனு ஒரு கவலை இங்க என்னை பதிவிட வைக்குது.
நமக்கே இப்படினா குழந்தைகளை நினைச்சு பாருங்க.. அடுத்தவங்க சொல்லை தாங்கமுடியுமா அந்த பிஞ்சு நெஞ்சங்களினால....

//என் மகன் இப்படி வருவான், என் மகள் இப்படி வருவாள்னு அவங்களை கருவில் சுமக்கும் போதே ஆசையை நெஞ்சில் சுமக்கிறார்கள் பெற்றோர்கள்.//
உண்மைதானே நடுவரே!! ஒரு மெஹந்தி வெச்சாக்கூட நல்லா கலர் வரணும்.. அப்படீனு கூட எலுமிச்சை, டீ டிக்காக்‌ஷன், கொட்டைபாக்கு எல்லாம் ஊறவெச்சு போடுறதில்ல... ஒரு சாதாரண மெஹந்திக்கே இவ்வளவு கரிசனம் காட்டுற மானிட பிறவிகள்தாமே நாம்.

// தன் பிள்ளை மார்க் கம்மின்னாலும் தட்டி கொடுத்து பரவாயில்லை... உன்னால் முட்ஞ்சதை செய்திருக்க... என்ன படிக்க விரும்புறன்னு கேட்டு பாருங்க நடுவரே... அந்த பிள்ளை பெற்றவர்களையும் தலையில் தூக்கி வைத்து ஆடும், மனமும் நொந்து போகாமல் அடுத்த முறை பெற்றோரை பெருமை படுத்த என்ன செய்யலாம்னு சிந்திக்கும், சாதிக்கும். அப்படி பட்ட பெற்றோர் இருந்தால் சமூகம் எப்படி தன்னை தாழ்த்தினாலும் தன் பெற்றோருக்காக வாழ்ந்து பெருமை தேடி தருவார்கள் பிள்ளைகள். சமூகத்தின் முன் தன் தலை குனியும் என்று எண்ணி பெற்றோர் கரித்து கொட்டினால்...//

வீட்டுக்குள்ள இத்தனையும் சொல்லி அனுப்பமுடியும் நடுவரே!! ஆனா ஊர் வாயை எதைக்கொண்டு அடைக்க நடுவரே!! தெரிஞ்சுக்கிட்டே கேட்டுக்கேட்டு துன்புறுத்துவாங்களே!! நல்லாத்தானே படிச்ச எப்படி கம்ம்மியாச்சு, கடைசிநேரத்தில கோட்டைஉட்டுட்டியா? கவனிக்கிலியா? ஃபிரண்ட்ஸோட ஊர்சுத்த போனியானு?அவங்களாவே ஒரு கற்பனை பண்ணிக்கொண்டு போட்டு துருவி எடுப்பாங்களே.. அப்ப அந்த குழந்தையின் மன நிலையை வார்த்தைகளிதான் வடிக்க முடியுமா?

இதுக்குமேல எழுதினா இன்னொருக்கா டிரிப்ஸ் போடவேண்டி வரும்னு நினைக்கிறேன்...

நடுவரே!! உங்களுக்கு உடம்பு விரைவில் குணமாக வேண்டிக்கிறேன். உடம்பை பார்த்துக்கோங்க.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நடுவரே... உடல் நலமில்லையா?? :o பரவாயில்லை, வந்து எங்களிடம் தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி ஜெயந்தி. ஒன்னும் கவலைப்படாம உடம்பு சரியானதும் வாங்க.

அன்பு தோழிகளே... நடுவர் உடல் நலம் சரி இல்லாததால் இன்று தீர்பு வரலன்னாலும் பரவாயில்லை. பதிவுகள் குறைவா இருப்பதால் விரும்பினா பதிவுகளை வாதங்களை தொடருங்க. அவங்க உடல் நலம் சரியாகி வரட்டும். நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்