ஆண்களும் சமையலும்!!!

புதுசா ஒரு தலைப்பு புதுசா ஒரு தலைப்புன்னு எல்லாரும் கேட்டீங்க... எனக்கும் எப்படி யோசிச்சாலும் மண்டையில் ஸ்டாக் இல்லாத மாதிரியே இருந்துது. இப்ப எதேர்சையாக விஜய் டிவி நீயா நானா பார்க்கும் போது தான் மண்டையில் ஒரு பல்பு எரிஞ்சுது... துவங்கிட்டேன். ;) இங்க நீங்க பகிர்ந்துக்க வேண்டிய விஷயம்...

1. ஆண்கள் அடுப்படி பக்கம் வரலாமா கூடாதா?

2. சமையலில் பெண்ணுக்கு ஆண்கள் உதவுவது நல்ல விஷயமா இல்லையா?

3. எது ஆண்களை அடுப்படி பக்கம் வர விடாம தடுக்குது?

4. சமையல் என்பது சுலபமான விஷயமா? கஷ்டமான விஷயமா?

5. நாம கஷ்டப்பட்டு சமைச்சாலும் அதில் குறை சொல்லும் போது எப்படி இருக்கும்?

6. இதுவரை எத்தனை பேருக்கு யார் உதவியும் இல்லாமல் தனியாக சமைத்த அனுபவம் இருக்கு உங்களுக்கு?

7. உங்க கணவர் உங்களுக்கு உதவி செய்தா உங்களூக்கு எப்படி இருக்கும்? என்ன தோணும்?

இப்படி எதை பற்றி வேணும்னாலும் உங்க கருத்தை இங்கே பதியலாம். தமிழ் பதிவு... முடிஞ்சவரை இதை மட்டும் கடைபிடிங்க. ப்ளீஸ் :) பதிவுகளோட வாங்க... இண்ட்ரஸ்டிங்கா எதாவது கதைப்போம்.

எல்லாரும் வாங்க... வனி வெயிட்டிங். இன்னைக்கு அரட்டையில் இல்லை வணக்கம்... இங்க தான். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

akka ithu patti mandram illela.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

என்ன பட்டிமன்றம்னா இம்புட்டு பயமா??? ;) பட்டிமன்றம் இல்லைங்க... உங்க கருத்துகளை சொல்லும் இழை தான். கொஞ்சம் ட்ரை பண்ணி தமிழில் போடுங்க ப்ளீஸ். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அக்கா நானே இப்பதான் சமையல் கத்துக்கிறேன். இருந்தாலும் ஆண்களும் கிச்சன் பக்கம் வந்தா நல்லா இருக்கும். இப்பதான் பெண்களும் வேலைக்கு செல்கிரார்களே.
எனக்கு சமையலில் அனுபவம் இல்லை இருந்தாலும் பெண்களுக்கு சமையலில் உதவியாக இருந்தால் நல்லாதான் இருக்கும்.தமிழில் பதிவிட தாமதமாகும் அக்கா.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

முதன் முதலாக பதிவிட்டிருக்கீங்க இந்த இழையில். :) மிக்க நன்றி. தொடர்ந்து உங்க கருத்துகளை சொல்லுங்க, நீங்க தமிழில் தட்ட தாமதமானாலும் நான் காத்திருப்பேன் :) நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு என்ன தோனும் என்றால் உதவி இல்லாட்டியும் உபத்திரவம் தரக்கூடாது.....ஆமாங்க என் மாமியார் அவரை நல்லா படிக்கவைச்சு நல்ல பழக்கங்களை சொல்லிகொடுத்தது தவிர வேறு எதுவும் இல்லை.... நான் குறை சொல்லவில்லை....ஒரு டீ காபி கூட போடத்தெரியாது
ஆனால் ஒவ்வொரு வருடமும் காதலர் தினத்தன்று மட்டும் டோஸ்ட் காபி செய்வார்....அதுவும் எப்படி தெரியும? கிச்சன் முழுக்க சாமான் இருக்கும்...காபி டப்பாவில் இருக்கும் ஸ்பூனை எடுத்து ஈரமாக்கிவிட்டு மறுபடியும் காபி டப்பாவிலேயே வைத்திடுவார்....காபி அவ்வளோதான்....டப்பாவில் உள்ள காபி கல்லாகிவிடும்....ஏதாவது சொன்னாலும் கோவம் வரும்....வருசத்தில ஒரு தடவையாவது கணவர் கையால சாப்பிடமுடியுதேன்னு நினைப்பேன்....ஆனால் அவரால சமைக்க முடியல என்று எனக்கு கவலையும் இருக்கு....ஆண்கள் குறைந்தது ஒரு சாதம் கறி அல்லது ரசம் செய்ய தெரிந்திருந்தால் அவசரத்திற்கு ரொம்ப உதவும்......அவரை எப்படித்தன் மாற்றப்போறேன் என்று தெரியல.....

நீங்க சொன்னதும் சரி தான்... இது போல சின்ன சின்ன விஷயங்கள் தெரியாம நமக்கு உதவ வந்தாலும் நமக்கு கஷ்டமா தான் இருக்கும். வேலையை அதிகமாக்கின மாதிரி இருக்கும். கொஞ்சமாவது கத்து கொடுத்திருக்கலாம் அம்மாக்கள் ;) இன்னும் சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமாங்க....அவங்க பயபடுறாங்க போல.... ஒருக்கா சமைத்தால் டெய்லி சமைக்க சொல்லிடுவாஙளோ என்று.... நான் வேலைக்கு போறதில்லை...சோ நான் தான் சமைக்கனும்... ஆனால் இப்போ ஒரு கண்டீசன் போட்டிருக்கேன்... நான் மாசமா இருக்கதால என்னால ஒன்னுமே சமைக்க முடிறதில்ல....உதவிக்கும் பக்கதில யாருமில்ல... சோ ஒரு சாதம் ரசம் வைக்க பழக சொல்லிருக்கேன்.. அவரும் ஓக்கே சொல்லிருக்கார்... ஆனால் ஒன்றுப்பா...எனக்கு மட்டும் பையன் பொறந்தால் கண்டிப்பா ஒரு வயது வந்ததும் சமையல் சொல்லிக்கொடுப்பேன்.....வரப்போற மருமகள் என்னைப்போல கஷ்டபடக்கூடாது....ஆண்கள் சமைக்க தெரிந்திருப்பது இப்போதைய கால கட்டத்திற்கு ரொம்ப அவசியம்....

வனி நல்ல தலைப்பு,

ஆண்கள் அடுப்படி பக்கம் வரலாமா கூடாதா?

அடுப்படி பக்கம் வரலாங்க,(அடுப்படி தானே)நமக்கு பேச்சு துணைக்கு ஆள் கிடைத்தமாதிரி இருக்கும்.அந்த சாக்கில் இந்தாங்க ரெண்டு வெங்காயம் நறுக்குங்க அப்படின்னு வேலை செய்யவச்சிருலாம்ல்ல(எப்புடீ? நீங்க நினைக்கிறது எனக்கு கேட்குது அப்புறம் அடுப்படிய எட்டி பார்த்தாதானேன்னு)

2. சமையலில் பெண்ணுக்கு ஆண்கள் உதவுவது நல்ல விஷயமா இல்லையா?

நல்ல விஷயம் தாங்க அந்த நேரம் நம்ம வேற வேலைய பார்க்கலாமில்ல.அத பார்த்து நம்ம பிள்ளைங்களுக்கும் உதவக்கூடிய மனப்பான்மை வரும்.

3. எது ஆண்களை அடுப்படி பக்கம் வர விடாம தடுக்குது?

முதலில் ஈகோ தான். அது என்னமோ பெண்ணுக்கு உரிய வேலையாத்தான் கருதுகிறாங்க.ஆண்கள் வேலைக்கு போறதால பெண்கள் தான் அந்த வேலை பார்க்கனும்னு நிர்பந்தத்திற்கு ஆளாயிட்டாங்க.

4. சமையல் என்பது சுலபமான விஷயமா? கஷ்டமான விஷயமா?

சமையல் ருசியாக வந்தா சுலபம்,அதுவே சொதப்பிட்டா கஷ்டம் தான்.அதுவே கணவர்,பிள்ளைங்களுக்கு பார்த்து பார்த்து செய்றதால கஷ்டமா இருந்தாலும் சுலபமா தான் எண்ண தோணும்.(அய்யய்யோ குழம்பிட்டிங்களா இல்ல இல்ல நான் குழப்பிட்டேன்)

5. நாம கஷ்டப்பட்டு சமைச்சாலும் அதில் குறை சொல்லும் போது எப்படி இருக்கும்?

இத தான் எதிர்பார்த்தேன் .குறை சொல்லும்போது அப்படியே கடுப்பாயிடுவேன்.இதில வரும் டயலாக் வேற குறை சொல்லும்போது தானே நாளைக்கு இதவிட நல்லா வரும்ன்னு (என்னத்த சொல்ல).அதவிட வீட்டுல்ல இருக்குமே நண்டு,வண்டு பசங்க அதுவ கூட ஜால்ரா அடிக்கும் பாருங்க அத எங்க போய் சொல்ல.

6. இதுவரை எத்தனை பேருக்கு யார் உதவியும் இல்லாமல் தனியாக சமைத்த அனுபவம் இருக்கு உங்களுக்கு?

10 பேருக்கு

7. உங்க கணவர் உங்களுக்கு உதவி செய்தா உங்களூக்கு எப்படி இருக்கும்? என்ன தோணும்?
என் கணவர் லீவ் நாட்களில் உதவி செய்வாங்க.அதுவும் உடம்பு முடியாத நாட்களில் எல்லா வேலையும் அவங்க தான் பார்ப்பாங்க மனதுக்கு சந்தோஷமாக இருக்கும்.

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

பெண்களுக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் ஆண்கள் சமையல் செய்தால் நன்றாக தான் இருக்கும். ஆனால் சில ஆண்கள் சமையல் செய்தால் அது பெண்மைதனம் என்றும் மனைவிக்கு அடிமையானவன் என்றும் மற்றவர்கள் நம்மை ஏளனமாக பார்ப்பார்கள் என்றும் நினைக்கிறார்கள். ஒரு சிலர் அம்மாவுக்கு தெரியாமல் மனைவிக்கு சமையலில் உதவி செய்கிறார்கள். ஆனால் சொந்த ஊருக்கு போனவுடன் சமையல் அறை எங்கே இருக்கிறது என்று கூட தெரியாதபடிக்கு நடித்துக் கொள்வார்கள்.

மேலும் சில பதிவுகள்