தேதி: October 15, 2013
உருளை வடிவ அட்டைப் பெட்டி
கலர் பேப்பர்
ஸ்பாஞ்ச் ஷீட் - ஊதா, மஞ்சள், ரோஸ் நிறங்களில்
ஸ்டோன்ஸ்
ஃபெவிக்கால்
தேவையான அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும். ஒரு இன்ச் அளவு அகலத்தில் உருளை வடிவ அட்டைப் பெட்டியின் சுற்றளவிற்கேற்ப கலர் பேப்பரை 5 அல்லது 6 ஸ்டிரிப்ஸ் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

அட்டைப் பெட்டியின் மேல் ஃபெவிக்கால் தடவி, அதைச் சுற்றிலும் நறுக்கி வைத்துள்ள கலர் பேப்பர் ஸ்டிரிப்பை ஒட்டவும்.

அதற்கு மேலே இடைவெளி இல்லாமல் இதேபோல் அடுத்தடுத்த ஸ்ட்ரிப்ஸையும் ஒட்டவும்.

பெட்டியின் முழுவதும் கலர் பேப்பரை ஒட்டி காயவிடவும்.

2 இன்ச் அகலத்தில் பெட்டியின் சுற்றளவிற்கேற்ற நீளத்தில் ஸ்பாஞ்ச் ஷீட்டை நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கிய ஸ்பாஞ்ச் ஷீட்டின் ஒரு ஒரம் முழுவதும் ஃபெவிக்கால் தடவவும்.

படத்தில் காட்டியபடி அதை அப்படியே மடித்து ஓரங்களை இணைத்து ஒட்டவும்.

ஒட்டிய ஓரத்தை பிடித்துக் கொண்டு அதன் எதிர் பக்கத்தில் கீழிருந்து மேலாக முக்கால் பகுதி வரை நறுக்கவும்.

இதேபோல் சிறிது இடைவெளி விட்டு அந்த ஷீட் முழுவதும் நறுக்கவும்.

மற்ற 2 நிற ஷீட்டையும் இதேபோல் நறுக்கிக் கொள்ளவும்.

படத்தில் காட்டியபடி கலர் பேப்பர் ஒட்டிய அட்டைப் பெட்டியின் மேல் நறுக்கிய ஸ்பாஞ்ச் ஷீட்டை ஒட்டவும்.

சிறிது இடைவெளி விட்டு அடுத்தடுத்த ஷீட்டையும் ஒட்டவும்.

ஒவ்வொரு ஷீட்டின் மீதும் இதே போல் ஸ்டோன்ஸ் ஒட்டி முடிக்கவும்.

அழகிய ஃப்ளவர் வாஸ் ரெடி.

Comments
சூப்பர்
எளிமையாக அழகாக இருக்கு டீம்.
- இமா க்றிஸ்
ஃப்ளவர் வாஸ்
ரொம்ப அழகாகவும் அருமையாகவும் இருக்குங்க டீம்..
நட்புடன்
குணா
Arusuvai team
Easy & beautiful vase team.
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
simply super
simply super
Semmaiya irukku.
Semmaiya irukku.
Nisha - Night / a girl.. Banu- A moon
Would like to be part of dis site... Had gone thro the site and really i liked it a lot... I ll contribute mine.. Let me be one of the member & know me more :)