உபயோகித்த விலை உயர்ந்த வேலைபாடுகள் உள்ள காஞ்சீபுரம் பட்டு புடவையை எங்கே விற்பது ?

நான் இந்த இணையதளத்தில் புதியவள் . போன வருடம் விலை உயர்ந்த பட்டு புடவையை என் மாமா கல்யாணத்திற்காக வாங்கினேன் . sm சில்க்ஸ் t நகரில் 25,000 ரூபாய்க்கு வாங்கினேன் . ஒரு முறை தான் கட்டினேன் . நல்ல வெயிட் புடவை . பிங்க் கலர் சூப்பரா இருக்கும் . அதில் கோல்ட் கலர் கம்பியால் வொர்க் செய்யப்பட்டது .
என்னால் இப்பொழுது கட்ட முடியவில்லை . புடவையில் எந்த குறையுமில்லை . வெயிட் அதிகமா இருக்கு . அதனால் அதை விற்க முடிவு பண்ணிட்டேன் . சென்னை ல எங்க விற்க முடியும் ?
ஆண்டாள் சில்க்ஸ் போனேன் , அங்க காப்பர் ஜரிகைனு சொல்லிட்டான்.
நான் எப்படி இந்த புடவையை விற்க முடியும் ? உதவி செய்யுங்களேன் , pls

அன்பு சனா,

மிகவும் பழசான பட்டுப் புடவை என்றால், G.R.T. தங்க மாளிகை கடையின் அருகே விசாரித்தால் ஒரு இடம் சொல்வாங்க.

இந்த இடத்தில் பட்டுப் புடவையை வாங்க மாட்டாங்க. நாம் கொண்டு செல்லும் புடவையை எரித்து(!), அதில் இருக்கும் வெள்ளியை தனியாக உருக்கித் தருவாங்க.(அந்தப் புடவையின் ஜரிகையில் வெள்ளி இருந்தால்). இப்படி செய்வதற்கு பணமும் வாங்குவாங்க.

நமக்குத்தான் புடவையை எரிக்கும்போது பார்க்க வருத்தமாக இருக்கும்.

ஜரிகை காப்பர் ஆக இருந்தாலும் அதையும் நம்மிடம் கொடுத்துடுவாங்க.

பொதுவாக இப்போது வரும் பட்டுப் புடவையின் ஜரிகையில் வெள்ளி இருப்பது குறைவு.

பட்டுப் புடவையின் விலை என்பது அதில் நெய்திருக்கும் பட்டு நூல் மற்றும் வெள்ளி ஜரிகையின் வால்யூ சேர்த்துதான். ஆனால் பெரும்பாலான மிகவும் விலை அதிகமான புடவைகளில் கூட, பட்டு நூலும் கொஞ்சம் சிந்தெடிக்கும் சேர்த்துத்தான் நெய்கிறார்கள். ஜரிகையில் ஒரிஜினல் வெள்ளி என்பது மிகவும் குறைவு.

ஒரு சின்ன யோசனை - புதிய புடவை, எடுத்து ஒரு வருடம்தானே ஆகிறது, இரண்டு மூன்று முறை நல்ல கடையில் கொடுத்து அயர்ன் செய்து வைத்தீர்கள் என்றால், புடவை கட்டும்போது, கொஞ்சம் சுலபமாக கட்டுவதற்கு வசதியாக இருக்கும்.

அன்புடன்

சீதாலஷ்மி

நானும் சீதாலஷ்மி மேடம் சொல்வதைதான் நினைக்கிறேன்.
விஷேசங்களுக்கு அடிக்கடி பயன்படுத்தி பாருங்க, அப்புரம் கொடுக்க மனசே வராது :)
எதுக்கும் மறுபரிசீலனை செய்துபாருங்க சனா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

புடவை பாரமாக இருந்தால் சிரமம்தான். அணிந்து இருக்கும் நேரம் முழுவதும் கவனம் இதிலேயே இருக்கும். இயல்பாக இருக்க முடியாது. வைத்திருந்து வீணாக்குவதை விட விற்றுவிட்டு வேறு புடவை வாங்கலாம்.

க்விக்ர்-ல விளம்பரம் போடலாம் என்று நினைக்கிறேன். வெப்சைட் போய்ப் பாருங்க. க்ளோதிங் - கார்மன்ட்ஸ் செக்க்ஷன் இருக்கு. இங்க லிங்க் கொடுக்க முடியாது. நீங்கதான் தேடணும். பார்த்தால் ஃபோட்டோ எடுப்பது மீதி பற்றியெல்லாம் விபரம் பிடிபடும்.

‍- இமா க்றிஸ்

ebay india என்ற தளத்தில் விற்க்கலாம்
Online shopping India என்று தட்டிப் பாருங்கள்,நிறைய தளங்கள் இருக்கும்
டிரை கிளினிங் செய்யும் இடங்களில் சிலர் கடைகளிலிருந்து சிறிய டேமேஜ் உள்ள புது பட்டு புடவைகளை குறைந்த விலைக்கு வாங்கி அதை ரிப்பேர் செய்து புது புடவை என்று விற்கின்றார்கள்
அவர்களிடம் விசாரித்துப் பாருங்கள்.ஆனால் 10,000 ரூபாய் கிடைப்பதே கஷ்டம் தான்.

என்னுடைய அம்மா எங்களுக்கு அவர்கள் உடுக்காத பட்டு புடவைகளில் சுடிதார் டாப் தைத்து தருவது வழக்கம்.
பெண் குழந்தைகள் இருந்தால் சுடிதார் டாப்,பட்டுப் பாவாடை மற்றும்,காக்ரா சோளி போன்றவை தைக்கலாம்.
உங்களுக்கே சுடிதார் டாப் தைத்து,பிளைன் சில்க் துணியில் பாட்டம் தைக்கலாம்.ஜரிகையின் கலருக்கு ஏற்றார் போன்று நெட்டட் துப்பட்டா அணியலாம் (சில்வர் அல்லது கோல்டன்)
ஜரிகைகளைக் கொண்டு கழுத்திலும்,கைகளிலும் பார்டர் டிசைன் கொடுக்கலாம்.சமீபத்தில் தான் ஒரு புடவையில் சுடி டாப் நான் தைத்ததுடன் அதே புடவையில் என் மகளுக்கும் ஒரு சோளி தைத்தேன்,இருவரும் ஒரே போன்று உடுத்தியிருந்ததில் என்னை விட என் மகளுக்குத்தான் மிக்க மகிழ்ச்சி.

விற்றுத்தான் ஆக வேண்டும் என்னும் பட்சத்தில் நஷ்ட்டம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் எல்லாருக்கும் நன்றி .
அந்த புடவை வெயிட் அதிகம் தான் என்றாலும் எனக்கு அந்த புடவை என்றால் உயிர் . அவளோ அழகா இருக்கும் . ஆனால் நான் விற்க காரணமே வேற . ஆம் , என் கணவருக்கு அந்த புடவை பிடிக்காது . இதனால் தினம் தினம் சண்டை தான் . எனக்கு சொல்லவே ஒருமாதிரி தான் இருக்கு .
நான் ஏற்கனவே olx அண்ட் quickr ல ad கொடுத்துட்டேன்.
ஆனா எந்த response சும் இல்ல . நானும் அத கட்ட முடியாது , என் சொந்தகாரங்களும் வாங்க மாட்டாங்க . அதனால தான் உங்ககிட்ட ஐடியா கேட்டன்.

latha

ஓ அப்படியா, ரொம்ப காஸ்ட்லி புடவைய ஏன் கொடுக்கணும்னு ஆதங்கத்துல சொல்லிட்டேன் தவறா எடுத்துக்காதீங்க :( நேரில் சந்திக்கும் தோழிகளிடமோ, தெரிஞ்சவர்களிடமோ பேச்சு வாக்கில சொல்லி பாருங்க, நீங்க சென்னைனு போட்டிருப்பதால, இங்க கடைகளுக்கு போகும் போது கேட்டுப்பார்க்கலாம்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மேலும் சில பதிவுகள்