தேதி: December 6, 2013
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பாசிப்பருப்பு - ஒரு கப்
சிவப்பு மிளகாய் - 7 அல்லது 9
சின்ன வெங்காயம் - 11 அல்லது 12
பூண்டு - ஒரு பல்
தேங்காய்ப்பூ - 2 மேசைக்கரண்டி
சீரகம் - ஒன்றரை தேக்கரண்டி
அவரைக்காய் - 6 அல்லது 7
உப்பு - ருசிக்கேற்ப
நெய் - 2 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சம் பழம் - ஒன்று
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.

சின்ன வெங்காயத்தை தோலுரித்து, அதில் பாதியளவை (5 - 6) நீளமாக நறுக்கி வைக்கவும். அவரைக்காயை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

சிவப்பு மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, தேங்காய்ப்பூ, ஒரு தேக்கரண்டி சீரகம் இவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

குக்கரில் பாசிப்பருப்புடன் நறுக்கிய அவரைக்காய் துண்டுகளைச் சேர்த்து, வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

வெந்த பாசிப்பருப்பு அவரைக்காய் கலவையுடன், மிக்ஸியில் அரைத்த விழுதைச் சேர்த்து குழம்பு பதத்திற்கு கரைத்து அடுப்பில் வைத்து கிளறவும். 2 – 3 முறை பொங்கி வருமாறு கொதிக்க வைத்து இறக்கிவிடவும்.

வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அத்துடன் சீரகத்தையும் பொரித்து குழம்பில் சேர்க்கவும். பின்னர் எலுமிச்சம் பழச் சாற்றை குழம்பில் சேர்க்கவும்.

சுவையான பொரித்த குழம்பு தயார்.

அவரைக்காய்க்கு பதிலாக முருங்கைக்காய், கத்தரிக்காயும் சேர்க்கலாம். இந்தக் காய்களை தனியாக வேக வைத்து குழம்பில் சேர்க்கவும். குழம்பை அதிகமாக கொதிக்கவிட வேண்டாம். ரொம்பவும் கொதித்தால், குழம்பு கடுத்துப் போய் ருசி மாறிவிடும்.
Comments
சீதாம்மா
குழம்பு சூப்பரா இருக்கு. பாசிப்பருப்புக்கு பதில் பயறு சேர்த்து செய்யலாமா?
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
உமா
அன்பு உமா,
முதல் பதிவிற்கு நன்றி.
பாசிப்பயறு சேர்த்தால் ருசி மாறுபடும். பாசிப்பருப்பு சேர்த்தால்தான் குழம்பு ருசி இருக்கும்.
இது கிட்டத்தட்ட சாம்பார் மாதிரின்னு வச்சுக்குங்களேன். இது சாதத்தில் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும். பயறு என்றால் சப்பாத்திக்கு செய்யும் தால் போன்ற ருசி இருக்கும்.
அன்புடன்
சீதாலஷ்மி
we cant save the recipy
we cant save the recipy
பொரித்த குழம்பு
சீதாமேம், குழம்பு அருமையா இருக்கு வாழ்த்துக்கள்ங்க :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
friends I want different
friends I want different types of veg kulambu pls share me