தேதி: January 29, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பூண்டு - 200 கிராம்
வர மிளகாய் - 15 முதல் 20 வரை
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
வறுத்து பொடிக்க:
கடுகு - 2 தேக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

பூண்டைத் தோலுரித்துக் கொள்ளவும் (பெரிய பல்லாக இருந்தால் நீளவாக்கில் இரண்டாக நறுக்கி வைக்கவும்). முதலில் வர மிளகாயையும் புளியையும் அரைமணி நேரம் நீரில் ஊற வைத்து பிறகு மிக்சியில் நன்கு அரைத்து கொள்ளவும். வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் கருகாமல் வறுத்து பொடி செய்யவும்.

எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, உரித்த பூண்டை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பூண்டு நன்கு வதங்கியவுடன் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள புளி, மிளகாய் கலவையை சேர்த்து குறைந்த தீயில் வைத்து வதக்கவும்.

பூண்டு வெந்து புளிக் கலவையின் பச்சை வாசனை போனவுடன் பொடித்த பொடியை சேர்த்து 3 முதல் 5 நிமிடம் வரை அடி பிடிக்காமல் நன்கு கிளறவும்.

எண்ணெய் பிரிந்து தனியே வரும் போது அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். கார சாரமான பூண்டு ஊறுகாய் ரெடி.

எல்லா விதமான கலந்த சாதம் மற்றும் தயிர் சாதத்திற்கு ஏற்ற சூப்பர் ஜோடி இந்த பூண்டு ஊறுகாய்.
Comments
சுமி
சூப்பர். :) இது தான் முதல் யாரும் சமைக்கலாம் பகுதிக்கான குறிப்பு இல்லையா சுமி?? அவசியம் செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சுமி அக்கா எனக்கு பூண்டு
சுமி அக்கா
எனக்கு பூண்டு ஊறுகாய்னா ரொம்ப இஸ்டம்,
அதுவும் இவ்ளோ ஈசியா டிப்ஸ் வேற சொல்லி இருக்கீங்க, செய்ய வேண்டியதுதான். சூப்பர் ஸைடு டிஷ்.
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
அட்மின் மற்றும் டீம்..
நன்றி நன்றி.. இதை விட்டா எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.. என் முதல் விளக்கப் பட குறிப்பை இவ்வளவு சீக்கிரமா வெளியிட்டதுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
வனி..
உங்கள் முதல் வாழ்த்துக்களுக்கு எனது நன்றிகள் வனி. முதல் குறிப்பே தான் வனி. செய்து பார்த்துட்டு சொல்லுங்க.. :)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
சுபி..
சுபி உன் வாழ்த்துக்கு ரொம்ப நன்றிடா. உனக்கும் இஷ்டமா.. எனக்கும் தான். ஆமா எல்லா வெரைட்டி ரைஸ்க்கும் சூப்பர் காம்பினேஷன் இது, செய்துபார்த்துட்டு சொல்லு சுபி..:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
சுமி
ரொம்ப ஈசியா இருக்கு. வாழ்த்துக்கள்.செய்து பார்த்துட்டு மீண்டும் பதிவிடுகிறேன்
அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு
பூண்டு ஊறுகாய்
ஹாய் சுமி எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஊறுகாய் நாளைக்கே செய்துடுறேன், பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு மெத்தடும் ஈஸிதான். தயிர் சாதத்துட சாப்பிட்டா ஆஹா
மஞ்சு..
உங்கள் பதிவுக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க..
//செய்து பார்த்துட்டு மீண்டும் பதிவிடுகிறேன்// வெயிட் பன்ணிட்டே இருக்கேன்..:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
தேவி
தேவி உங்கள் பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றிப்பா.. தயிர் சாதத்துக்கு இந்த ஊறுகாய் சூப்பர்ரோ சூப்பர் தான் தேவி...:), நான் வெறும் சாத்துலேயே போட்டு பிசைந்து சாப்பிடுவேன்..;) மீண்டும் நன்றி..:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
சுமி
ரொம்ப நல்லா இருக்குங்க..... கண்டிப்பா செஞ்சு பாக்குறேன்.....
பூண்டு ஊறுகாய்
அன்பு சுமி,
சூப்பராக இருக்கு ஊறுகாய். முதல் படக் குறிப்புக்கு வாழ்த்துக்கள். இன்னும் நிறைய குறிப்புகள் கொடுங்க.
அன்புடன்
சீதாலஷ்மி
பிரியா
உங்கள் பதிவுக்கு நன்றி பிரியா..:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
சீதாம்மா
உங்க வாழ்த்துக்கும் ஊக்கத்துக்கும் எனது மனமார்ந்த நன்ரிகள் சீதாம்மா..:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
சுமி
ஊறுகாய் சூப்பரா இருக்கு சுமி. பார்க்கும்போதே நாவூறுது. செய்துட்டு சொல்றேன். இது எவ்வளவு நாள் வச்சிருக்கலாம்?
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
உமா
உங்க பதிவுக்கு நன்றி உமா. புளி சேர்த்து செய்வதனால் ஃப்ரிட்ஜ்ல 1 மாதம் வரை வைக்கலாம், வெளியில் வைப்பதாக இருந்தால் 15 நாள் வைக்கலாம். ஆனா எங்க வீட்டுல செய்த உடனே 1 வாரத்துல காலி ஆகிடுது உமா..;) செய்துட்டு எப்படின்னு சொல்லுங்க உமா..:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
sumibabu
ஊறுகாய் பார்த்ததும் டேஸ்டா இருக்கும் போலத் தெரியுது. நானும் ட்ரை பண்ணி பார்க்கிறேன்..
இது உங்க முதல் குறிப்பா? இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள் சுமி மேடம். புளிக்கலவையோட தண்ணீர் ஊற்றி வேகவிடனுமா?
கலை
சுமி அக்கா
முதல் குறிப்பே காரசாரமான பூண்டு ஊறுகாய் ... இதுபோல இன்னும் பல நல்ல குறிப்புகளை சீக்கிரமாக கொடுங்க.. கங்கிராட்ஸ் அக்கா
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
கலை
பார்க்க மட்டும் இல்லை சாப்பிடவும் சூப்பரா இருக்கும் கலை...:) முதலிலேயே பூண்டு எண்ணெயில் வதங்கி வெந்துடும் என்பதால் புளி மற்றும் மிளகாய் அரைக்கும் போது சேர்க்கும் தண்ணீரே போது கலை. உங்கள் பதிவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி கலை. அப்புறம் சுமி மட்டும் போதும்..மேடம் எல்லாம் வேண்டாம் கலை...:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
கனி..
நமக்கு எப்போதுமே கார சாரந்தான் பிடிக்கும் கலை, அது தான் முதல் குறிப்பே இப்படி...;) உன் பதிவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி கனி..:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
hai
ரொம்ப பிடிதிருக்கு ..... சூப்பர்........
can I add tomato?
can I add tomato?
சுமி
குறிப்பு நல்லா இருக்கு.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
இந்துசிவா
உங்கள் பதிவுக்கு மிக்க நன்றிங்க..:) தக்காளி சேர்த்து செய்தால் அது தக்காளி ஊறுகாயின் சுவையில் இருக்கும், அதனால் புளி மட்டும் சேர்த்து செய்யவும்.
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
முசி..
உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றி முசி..:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
சுமி
பூண்டு ஊறுகாய் செய்தேன் சுமி. ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது. குறிப்புக்கு நன்றி.
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
உமா..
செய்து பார்த்து பதிவிட்டு எனக்கு ஊக்கம் அளிப்பதற்க்கு எனது நன்றிகள் உமா..:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
hi sister,2 times try
hi sister,2 times try pannitan sister.sariyave varala please help me.enna mistakenu theyriyala.arachi podrathu thannu nan ninaikaran kasakuthu.vendhayam+perungayathool niraya sethuta ninaikaran 1 spoon potan.please reply me
சுனிதா வினோத்
ரொம்ப சாரிங்க. நீங்க எப்பவோ கேட்ட டவுட்டு இப்பத் தான் என் கண்ணில்லேயே படுது...:( அரைத்த கலவை கசக்காதுங்க. வறுத்துப் பொடிக்க கொடுத்ததில் தான் தவறு இருக்கும். வெந்தயம் அதிகமானாலும் கசக்கும், அதனால வெந்தயம் கம்மியா போடுங்க. பெருங்காயம் நல்லா வறுபடலேனாலும் கசப்புத் தன்மை வரும். அடுப்பை குறைவா வைத்து கருகாம வறுத்தெடுங்க.. நன்றீ..:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....