
இன்னிக்கு காதலர் தினம் உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?
ஓ நல்லா தெரியுமே!! அதான் உலகமே போஸ்டர் அடுச்சு ஒட்டாத குறையா கொண்டாடறாங்களே!! எல்லா கடையும் பண்டிகை போல ஜொலிக்குது, இதெல்லாம் சொல்லி தான் தெரியனுமா என்ன? பார்த்தாலே தெரியுது.....
தெரிஞ்சு இருந்தா மட்டும் பத்தாது... எதாவது கிப்ட் வாங்கி கொடுக்கனு அப்பதான் லவ் பன்றிங்கன்னு அர்த்தம்....
அடடா!! இன்னிக்கு சொல்றயே, இப்படி ஒரு யோசனைய முன்னாடியே கொடுத்திருந்தா நல்ல பொண்ணா லவ் பன்னி கிப்ட் வாங்கி கொடுத்திருப்பேன், சரி விடு அடுத்த வருஷம் உன் ஆசைய நிறைவேத்தி வைக்கிறேன்...............
என்ன கிண்டலா?
கோவிக்காத ! சும்மா உன்னை வெறுப்பேத்தி பார்க்கதான்...
பெருசா ஒன்னும் வாங்கி தர வேணாம், ஒரு ரோஸ் வாங்கி வந்து சர்ப்ரைஸா கொடுத்திருந்தா எவ்வளவு சந்தோஷமா இருந்திருக்கும்....
நினைச்சேன் தான் , ஆனா பூவுக்கு எதுக்கு பூ தரனும்ன்னு தோனுச்சு, சோ வாங்கல!!
ஆஹா !! டயலக் எல்லாம் பயங்கரமா தான் பேசறீங்க, சினிமால டயலாக் எழுத போங்க....
இதெல்லாம் சும்மாடா , கடைல கிப்ட் அயிட்டம் விற்க இப்படி அந்த டே இந்த டேன்னு கொண்டாடறாங்க , பொருளை சேல்ஸ் பன்ன இப்படி ஊரை கெடுத்து வச்சு இருக்காங்க, இது தெரியாம எல்லாரும் போய் வரிசைல நிக்கறாங்க....
நம்ம மட்டும் வீடு கட்டி சொத்து சேர்த்து சந்தோசமா இருக்க ஆசை படறோம், பாவம் இந்த ஆசை அந்த கடைகாரருக்கு இருக்காது, அடுத்தவங்க ஆசைய மதிக்கறதே இல்ல. நான் என்ன வைர நகை கேட்டேனா? இல்ல சும்மா வீட்டுல அழகுக்கு வைக்க பொருள் கேட்டேனா? ரோட்டு ஓரத்துல பூ வித்துகிட்டு இருக்க அந்த பூக்கார அம்மாகிட்ட இருந்து 5 ரூபா பூ தான் கேட்டேன், வாங்கினா அந்த அம்மாவும் சந்தோஷபடுவாங்க நானும் சந்தோஷபடுவேன்..........................

ஆமா!! நீ சந்தோஷபடறத பார்த்தா நானும் சந்தோஷபடுவேன் தான்.!!! இப்படி நான் சந்தோஷ பட காரணமா இருக்க அந்த பூவை நான் எப்படி மிஸ் பன்னுவேன்...
"HAPPY VALENTINES DAY" My Dear .......
""WOW !! ROSES !! THANKYOU SO MUCH!!"" இத முன்னாடியே கொடுத்தா என்ன?
முன்னாடியே கொடுத்தா சர்ப்ரைஸா இருக்காதே!! அதான் கொஞ்சம் விளையாடினேன்!!
இந்தா இன்னொரு ரோஸ், இது உனக்கு இல்ல, என் குட்டி செல்லத்துக்கு.. இப்ப பேச தெரியாது.... பிரச்சனை இல்ல, அடுத்த வருஷம் உனக்கு முன்னாடி உன் பொண்ணு நிப்பா பூ கேட்டு!குட்டிமாக்கும் எப்படி வாங்கி வந்தேன் பார்த்தயா?
சூப்பர் அப்பான்னு சர்டிபிக்கெட் தரவா? அது இருக்கட்டும் பூவுக்கு பூவான்னு சொன்னீங்களே ....என்னை தான் சொன்னீங்களா?
ம்ம்ம் கொஞ்சம் முன்னாடி வசனம் பேசறீயான்னு திட்டிட்டு இப்ப மட்டும் என்ன ?
ப்ளிஸ்ப்பா சொல்லுங்களேன் , கோவிக்காதீங்க சாரி......
உன்னை சொல்லல, கண்ணாடி முன் போய் நில்லு எந்த பூவை சொன்னேன்னு தெரியும்!!!
Comments
ரேணு
மிக மிக அருமையான கதை...... சூப்பர்.....
ரேணு
நிஜமா கதையா??? ;) எங்கவூட்டு கதையே தான்... ஆனா அங்க ஹீரோ கடைசியா ரோஜா கொடுதுட்டார்... இங்க?? ம்ஹூம்.. முட்டி மோதினாலும் கிடைக்காதே :P
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரேணு
சூப்பர் ரேணு மிகவும் அருமை.
ரேணு
ரேணு கதை அருமை நிறைய காதல், சின்ன சின்ன காமெடி. நல்லாயிருக்கு.
காதலர் தின வாழ்த்துக்கள்
பூவுக்குபூவா
ஹாய் ரேனுகா
பூவுக்குபூவா /நு சொல்லியே நம்மை ஐஸ் வைத்து ஏமாற்றுகிறார்கள்.நாமும்சுகமாக ஏமாற்வே ஆசைபடுகிறோம்.அதுதாங்ககாதல்.ம்ம்ம் ஏமாந்துக்கிட்டே இருப்போம்காதலைவளர்த்துக்கொன்டேஇருப்போம்
கையளவுமனசு
கடலளவுஆசை
ரஜினிபாய்
கடல் அளவு ஆசை
கையளவு மனசு
ரேணு
நிஜக்கதைதான்.எல்லார் வீட்டிலயும் இது நடந்துருக்கும்.ஆனா கிளைமேக்ஸ்தான் பூவும் கிடைக்கல.ஒன்னும் கிடைக்கல.
வனி ஒய் பிளட்,சேம் பிளட்
Be simple be sample
<3
//கடைல கிப்ட் அயிட்டம் விற்க இப்படி அந்த டே இந்த டேன்னு கொண்டாடறாங்க , பொருளை சேல்ஸ் பன்ன இப்படி ஊரை கெடுத்து வச்சு இருக்காங்க, இது தெரியாம எல்லாரும் போய் வரிசைல நிக்கறாங்க....// ;))
ம்... டே கொண்டாடுறது... அது எந்த தினமானாலும் நல்லது என்கிறது என் அபிப்பிராயம். இப்பல்லாம் ரொம்...ப பிஸி எல்லோரும். வழக்கத்தை விட ஒரு நாள்.. மற்ற வேலைகளைக் குறைத்து, பிடித்தவர்களுக்கென்று நேரம் ஒதுக்கி, சற்று ஸ்பெஷலாக... நிச்சயம் தேவை.
கிஃப்ட் - வாங்கத்தான் வேண்டும் என்கிறது இல்லை. செலவளிக்கும் நேரம் கூட கிஃப்ட்தான் பல இடங்களில். அது பணம் கொடுத்து வாங்கும் கிஃப்ட்டை விட சிறப்பானது.
- இமா க்றிஸ்
பூவுக்கும் ஒரு பூ
அன்பு ரேணுகா,
டாபிகல் விஷயம், நல்ல நகைச்சுவையோடு = (ஆரம்பிக்கறப்பவே சிரிச்சுட்டேன்)= முழுக்க முழுக்க உரையாடலாக அழகாக எழுதியிருக்கீங்க. நல்லா இருக்கு.
அன்புடன்
சீதாலஷ்மி
பிரியா பாலபாரதி !!
மிக்க நன்றி பிரியா!!
மிக்க நன்றி பாலபாரதி!!
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
வனி நிஜம் பாதி, கதை பாதி:
இப்படி கேட்கலாமா வனி:( முதல் பாதி நிஜம் , அடுத்த பாதி கதை:) நிஜத்திலதான் ஒன்னும் நடக்கமாட்டிக்குது , கதையிலயாவது நடக்கட்டும் என்று தான்:))
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
உமா
தேன்க் யூ உமா!! காதலில் சின்ன சின்ன காமெடி இருந்தால் தானே சுவரசியமா இருக்கும், அழகும் கூட!!
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
காதலுக்கும் கூட பொய் அழகுதான்
ஹாய் ரஜினி நீங்க சொல்றது சரிதான், ஏமாத்தறாங்கன்னு தெரிஞ்சாலும் ஏமாற ஆசைபடறோம், அன்பு வார்த்தைகளுக்கு....
கவிதைக்கு மட்டும் அல்ல காதலுக்கும் கூட பொய் அழகுதான் சில நேரங்களில்... மிக்க நன்றிப்பா!!
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
ரேவதி ரேவதி
ரேவதி உங்க பதிவை பார்த்து சிரிப்பை நிறுத்த முடியல... பூவும் கிடைக்கல,ஒன்னும் கிடைக்கல// இது எப்ப கிடைச்சிருக்கு? வீட்டுக்கு வீடு வாசற்படி தானே:))
இன்று உங்கள் பிறந்த நாள் தானே!! அந்த ரேவதி நீங்க தானே!!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
நான் விரும்பும் பரிசு இமா:)
என் மனதில் உள்ளதையே சொல்லிட்டீங்க இமா:))ஆயிர ரூபாயில் செலவில் கிடைக்கும் பரிசை விட அன்பாய் செலவழிக்கும் அரை மணி நேரம் மகிழ்ச்சியை தரும் என நம்புவேன்,
பிறந்தநாளுக்கு பரிசு வேனாம், இரவு 12 மணிக்கு மறக்காமல் விஷ் வேனும், நான் தூங்கிட மாட்டேன், இருந்தாலும் தூங்கியவர்கள் எல்லாம் எழுந்து விஷ் பண்ணும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை:))
திருமண நாளன்று எதுக்கும் திட்டு வாங்காமல் இருந்தாலே பரிசு தான்:)திருமண நாள் என்று இல்லை எந்த விசேஷ நாளாக இருந்தாலும் என்று திட்டு வாங்க கூடாது என்று நினைக்கறோமோ அன்னைக்கு தான் காரணமின்றி பிரச்சனை வரும்:(
எந்த பண்டிகையானலும் நான் கேட்காமலே சொல்லாமலே அதற்க்கான ஏற்பாட்டில் முன் வந்து உதவிட வேண்டும் இதெல்லாம் தான் சிறந்த பரிசு:)
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
சீதா அம்மா
தேன்க் யூ சீதா அம்மா, வாவ் உங்களை சிரிக்க வைத்த மகிழ்ச்சியில் நானும் சிரித்து கொண்டே இருக்கேன்:))
கவிதையாக எழுத நினைத்தேன், ஆனால் அதுக்கும் எனக்கும் தான் ரெம்ப தூரம் ஆச்சே, எப்படியெல்லாமோ யோசிச்சு ஒன்னும் முழுமையாய் இல்லை,
இது மனதில் நினைத்தவுடன் வரிசையாய் எழுத வந்தது அரை மணியில் முடிந்தது எழுதி முடிக்க, படிக்கவும் பிடித்தது, இன்னும் யோசித்தால் நாளே முடிந்திடும் என்று இதேயே பதிவிட்டுவிட்டேன்:))
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
renu
//திருமண நாளன்று எதுக்கும் திட்டு வாங்காமல் இருந்தாலே பரிசு தான்:)திருமண நாள் என்று இல்லை எந்த விசேஷ நாளாக இருந்தாலும்// - இந்த பரிசும் எனக்கு இதுவரை கிடைக்கலயே...
ரேவ்ஸ், ரேணு... நாம எல்லாரும் சேம் பின்ச் போட்டுக்கலாம் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரேணுகா அக்காங்
கதை ரொம்ப நல்லா இருக்குங்..
நட்புடன்
குணா
வனி சாக்லெட்
வனி இந்த பரிசு கிடைக்காத நாள் தான் நமக்கெல்லாம் நல்ல நாள்:) சேம் பின்ச் பார்க்கறப்ப சாக்லெட் ஷேர் பன்னிக்கலாம்:)
நன்றி குணா தம்பி!!
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
ரேணுகா!
அன்பு ரேணுகா,
நானும் இமா கட்சி தான். என்னதான் வியாபரத்திற்காக அந்த நாள், இந்த நாள்னு கொண்டாடினாலும் அந்த ஒரு நாளாவது சம்பந்தப்பட்டவங்களை நினைக்கிறாங்களேன்னு சந்தோஷப்பட்டுக்கலாம்.
எப்பவும் நானும் இப்படித்தான் புலம்புவேன். நானே உனக்கு ஒரு கிஃப்ட். தனியாக வேறு கிஃப்ட் தரணுமான்னுவார்.
ஆனால், இந்த வருடம் செம சர்ப்ரைஸ்! இரவு பன்னிரண்டு மணிக்கு சர்ப்ரைஸா கிஃப்ட் கொடுத்தார். பிரிச்சு பார்த்தால், ஒரு அழகான கம்மல்!
சின்ன விஷ் கூட பெரிய சந்தோஷம் தான். நல்ல பதிவு.
அன்புடன்,
செல்வி.