என் மகனுக்கு 3 1/2வயது - அடிக்கடி உடல் நலக்குறைவு

அன்பு சகோதரிகளுக்கு,

என் மகனுக்கு 3 1/2 வயது நடக்கிறது, அடிக்கடி காய்ச்சலாலும், சளி மற்றும் இருமலாலும் அவதிப்படுகிறான், என்ன செய்வது? ப்ளிஸ் ஏதவாது வழி இருந்தால் சொல்லுங்கள், இல்லை ஏதவாது கை பக்குவம் இருந்தாலும் சரி சொல்லுங்கள்

ஹாய் தனா சுகமா?ஆமாப்பா பிள்ளைங்களுக்கு ஏதும்னா நமக்கு பைத்தியமே பிடிசுடும் இப்ப 3 1/2 வயதுன்னு சொல்லி இருக்கீங்க 5 வயது வரை இப்படிதான் ஏதாவது ஒன்னு படுத்திட்டே இருக்கும் நோய் எதிப்பு சக்தி கம்மின்னாலே இந்த பிராப்லம்தான் கவலை படாதீங்க தண்னீரில் நனைய விடாமல்பார்த்துகங்க..ஸ்கூலில் ஏதாவது மட்டமான திண்பண்டங்கள் சாப்டுறானான்னு கவனிங்க..வீட்டில் கொதித்த தண்ணீர் தானே>?பீடியாசுயர் நோய் எதிப்பு சக்திக்கு நல்லது டாக்டரிடம் ஆலோசனை செதுட்டு பாலில் கலக்கி கொடுங்க..சத்தான ஆகாரம் கொடுங்க சளி உண்டு பண்னும் எந்த சாமானையும் சாப்டாம பார்த்துகங்க என் பொன்னுக்கு இடையில் பயங்கர சளி நானோ ஏதும் கொடுத்தது இல்லை எவ்லவோ யோசித்தேன் இவ்லோ சளி வரும் அளவுக்கு என்ன கொடுத்தோம்னு அப்புறம்தான் தெரிஞ்சது தயிர்சாதம் கொடுத்தேன் ஏன்னா எனக்கு ரொம்ப மசக்கை சோ வீட்டில் ஏதும் செய்ய முடியல கிச்சனை பார்த்தாலே கண்ணு இருட்டும் அதனால் ஒரு நல்ல ஹோட்டலில் கட் ரைஸ் கொடுத்தேன் 3,4 நாளா கொடுத்தேன் அதன் பாதிப்புதான்னு தெரிஞ்சது..என் மகள்க்கு தயிர் சாதம் கொடுத்து பழக்கியது இல்லை அதனாலோ என்னவோ ஒத்துகல போல!

சளி வரும் அதுக்கு அடுத்து இருமல் சடன்னா பீவர் வரும் ஆனா அந்த பீவரின் வெகம் இருக்கே அப்பாப்பா சளி காய்ச்சள் அதிக சூடு தரும் அதனால் பயம் வேஎனாம் குழந்தை ஆக்டிவா இருக்கும் வரை ஆக்டிவ் குறைந்தால் யாரோட அட்வைசும் கேட்க கூடாது நேரா நல்ல டாக்டர்ட்ட போய்டனும் இதெல்லாம் உதவியாக இருக்கும்னு நம்புரேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் தனா,
உங்கள் குழந்தைக்கு சளி அதிகம் பிடித்தால் தண்ணீர் கொதிக்க வைக்கும்போது சிறிது சீரகம் போட்டு வைக்கவும்.ஆறினவுடன் வடிகட்டி குடிக்க கொடுக்கவும்.பிறகு விக்சை கையில் எடுத்து விளக்கில் சிறிது காட்டி வெதுவெதுப்பாக ஆனவுடன் நெஞ்சு மற்றும் முதுகில் தடவும்.பாலில் சிறிது மஞ்சள்,மிளகுத்தூள் கலந்து குடிக்க கொடுக்கவும்
இவை அனைத்தும் நான் எனது மகளுக்கு செய்தவை.நல்ல முன்னேற்றம் தெரியும்.
நன்றி,
கவிதா

kavitha

சளிக்கு இஞ்சி சாறு தேன் கலந்து கொடுங்கள்.

ஜலீலா

Jaleelakamal

என் அன்பு சகோதரிகளுக்கு

நன்றி, என் கேள்விக்கு இத்தனை பேர் பதிலளித்தத்ற்கு,
என் மகனுக்கு நவம்பர் 5 வந்தால் 4 வயது முடிகிறது, ஆனால் வெயிட் ரொம்ப கம்மியா இருக்கிறான், என்ன செய்வது

அன்பே கடவுள்

அன்பே கடவுள்

daily koncham PANGAJAKASTHURI thenil kalakki koduthu parunga
ithu ayuvethi product than side affects onnum agathu naan ippathan first time attend panren epdi tamil enter panrathunnu theriala

ஹாய் என் குழ்ந்தைக்கும் அடிக்கடி ச்ளி தொந்தரவுதான் என் மகளுக்கு 4 வயது ஆக போகுது அடிக்கடி சளி தான் பிடிக்குது ஏன்னு தெரியலை அவளுக்கு தலையின் பின்புறம் விய்ர்த்து விடும் அதுனால வருதானு தெரியலை நானும் டாக்டரிடம் காமிச்சி சிரப் கொடுப்பேன் இஞ்சி சாறு கொடுப்பேன் கொஞ்சம் நாள் ச்ரியாகும் திருமப்வும் வருது பீடியாசுர் கொடுக்கலாம எதிர்ப்புசக்தி கூடுமா எதிர்ப்பு சக்தி அதிகமாக் என்ன பழங்கள் காய்கறிகள் கொடுக்க்லாம் யாராவது தோழிகள் குழந்தைகளுக்கு என்று தனியாக் எல்லா விதமான்food ,மருத்துவ குறிப்புகள், வீட்டு வைத்தியம் போட்டால் நல்லா உபயோகமானதா இருக்கும்

ஃபர்வின் உங்கள் மகள் ஸ்கூள் போக தொடஙியிருக்கும் இல்லையா.அப்ப சொல்லவே வேண்டாம்../.குழந்தைகளுக்கு 5 - 6 வயது வரை வந்து வந்து தான் எதிர்ப்பு சக்தி வரும்....சாதாரண சளி காய்ச்சல் இருமலுக்கு பயம் இல்லை...அடிக்கடி வைரல்/பேக்டீரியல் இன்ஃப்க்ஷன் வருவது தான் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததற்கான அறிகுறி.
நம்மால் ப்ரத்யேகமாக எதுவும் செய்து விட முடியாது...அடிக்கடி கைகழுகும் பழக்கத்தை கொண்டு வருவது நல்ல பலன் தரும்...ஸ்கூள் விட்டு வந்ததும் கைய்யோடு முதலில் குளிக்க வைத்து விட்டபின்னறே மற்ற எந்த வேலையும் செய்ய விட வேண்டும்.
பிறகு சத்தான ஆகாரம்..சின்ன பிள்ளைகள் பெரும்பாலும் அவங்க இஷ்டப்படி எதையாவது சாப்பிடுவாங்க ஒழிய காய்கறி பழங்கள்,பால் சரிசமமாக உணவு சாப்பிடுவதில்லை...பெரிசானால் சரியாகிடும்
இருமல் சளி அடிக்கடி வருவதாக இருந்தால் கட்டாயம் சாக்கலேட்,சிப்ஸ் வகைகளை குறைக்க அல்லது தவிர்த்து விட வேண்டும்...
அடிக்கடி சளி இருமலுக்கு மருந்து கொடுத்துக் கொண்டே இருப்பது நல்லதல்ல..கூடுமானவரை குழந்தை ரொம்ப அசவுகரியம் காமிக்காவிட்டால் திட உணவு தவிர்த்து கூழ்,கஞி,சூப் போன்ற ஆகாரமாகவே அடிக்கடி கொடுத்தால் சீக்கிரம் சளி மாறிவிடும்.

ஹாய் தாளிகா நல்லா இருக்கீங்களா உங்க குட்டி பிள்ளை எப்ப்டி இருக்கிறார் ரொம்ப நாள் பிறகு உங்க கூட பேச முடியுது இப்ப 2 பிள்ளைகளையும் வைத்து கொண்டு எப்படி இருக்கீங்க என் பிள்ளை க்கு ஸ்கூல் விட்டு வநதவுடன் dettol hand wash போட்டு கை கழுவும் பழக்கம் இருக்கு தினமும் அதை செய்வாள் அவளுக்கு தலையில் வியர்த்து விடுகிறது அதனால அடிக்கடி சளி பிடிக்கிறதுன்னு தோணுது பீடியா சுர் கொடுக்கலாமா சொல்லுங்கள் நான் சாப்ரான் போட்டு தினமும் இரவு பால் கொடுக்கிறேன் எப்ப அவளிக்கு சளி பிரச்சனை தீரும் தெரியலை

ஹாய் ஃபர்வின்

குட்டிபொண்ணு சமத்தா ஸ்கூள் போராங்களா?
ரெண்டு பிள்ளைகளோடு சூப்பரா இருக்குது போங்க...24 மணிநேரம் எனக்கு போதவில்லை..மற்றபடி இரண்டையும் சேர்த்து பார்க்கும்பொழுது விளையாடி பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு
கவலை படாதீங்க..இந்த சளி இப்படியே தான் இருக்கும் கண்டுக்காதீங்க..அதுக மூக்குக்கு இன்னும் 2 வருஷம் ரெஸ்டே இல்லை..நான் pediasure கொடுப்பதில்லை..ஒன்னு வாங்கினேன் அவள் குடிக்கவே இல்லை ...நல்ல பழம் காய்கறி சாப்டா பரவாயில்லையே
சத்துக்காக என்றால் தினம் சத்துமாவு காய்ச்சி கொடுங்க..குடிச்சா ரொம்ப நல்லது.தினம் handwash க நல்லது தான்..சும்மா இருக்கையில் வாயில் கை வைக்கும் பழக்கம் உண்டா?அதனாலும் வரலாம்
முடி குட்டியா வெட்டி 2 நாளுக்கொருமுறை தலை குளிக்க வைத்து விடுங்கள்..காலையில் முகம் கை கால் கழுகி ஸ்கூள் போகட்டும் மதியம் நல்ல ஆட்டம் போட்டுவிட்டு வியர்த்து வந்தபின் தலை குளிக்க வைக்கலாம்..ஸ்கூள் விட்டு வந்தால் உடம்பில் 1 லோட் அழுக்கு இருக்கும்

மேலும் சில பதிவுகள்