சமூக வலைத்தளங்களால் பெரிதும் விளைவது நன்மையா? தீமையா?

அன்புள்ள தோழிகள் மற்றும் தோழர்களே,

அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள், நான் கென்யா நாட்டில் உள்ள மொம்பசாவில் வசிக்கிறேன், இங்குள்ள தமிழ் சங்கத்தில் வருகின்ற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பட்டி மன்றம் நடக்க இருக்கிறது. அதன் தலைப்பு " சமூக வலைத்தளங்களால் பெரிதும் விளைவது நன்மையா? தீமையா?".

எனக்கு இதை பற்றி விவாதிக்க உங்களுடைய மேலான கருத்துக்களை தெரிய படுத்துங்கள்.

இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மீண்டும் சந்திப்போம்.

உங்களுக்கு இரண்டு பக்கத்துக்கு கருத்துகள் வேண்டுமா? அல்லது ஏதேனும் ஒரு பக்கமாக பேசுவதென்று முடிவு பண்ணிட்டீங்களா? ஏன் கேட்கறேன் என்றால்... இந்த பக்கத்தில் பேச விரும்பறேன்னு சொல்லிட்டீங்கன்னா, அதுக்கு ஏற்ற மாதிரி தோழிகள் பதிவுகள் கொடுப்பாங்க. உங்களுக்கும் வசதியா இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு இரண்டுபக்கமும் பேசுவதற்கு உங்களுடைய கருத்துக்கள் தேவை.

ஆனால் எனது விருப்பம் சமூக வலைத்தளங்களால் பெரிதும் விளைவது நன்மையே என்ற அணியில் இருந்து பேசுவது காட்டிலும், தீமையே என்ற அணியில் இருந்து அதனுடைய சாதக, பாதகங்களை விளக்கி பலருக்கும் நன்மை விளைவிக்கும் சமுக வலைத்தளங்கள் நல்ல பயன்பாட்டிற்கு பயன் படுத்தினால் விளைவது நன்மையே என பாசிடிவ் ஆக முடிக்க விருப்பம்.

ஆதலால் தயவு செய்து உங்களுடைய கருத்துகளை எனக்கு தெரியபடுத்தவும்.

மீண்டும் சந்திப்போம்

நன்றி

வாழு.....வாழ விடு....

குரு அண்ணா,
எனக்கு தெரிந்த‌ சில‌ கருத்துகளை கூறுகிறேன்,

சமூக வலைத்தளங்களால் பெரிதும் விளைவது நன்மையா? தீமையா?

1.தேவைக்கு மட்டும் பயன்படுத்தினால் மட்டுமே நன்மை,
தேவையில்லாத‌ போது தேவையற்ற‌ வலைத்தளங்களை பயன்படுத்தினால் கண்டிப்பாக‌ தீமையே...... அளவுக்கு மிஞ்சினால் அமுதம் கூட‌ நஞ்சு என்கிற‌ போது வலைதளம் என்ன‌ விதி விளக்கா?

2. இதன் மூலம் பல‌ பல‌ நல்ல‌ விஷயங்கள் கற்கும் நாம், சில‌ தவறான‌ தேடல் மூலம் சில‌ பாதிப்புக்கும் ஆளாகிறோம் என்பது தான் முழு உண்மை.

3.என்னை பொறுத்தவரை பயன்படுத்தும் நபரை பொருத்து இதன் பயன்பாடு இருக்கும், உதாரணமாக‌ சின்ன‌ பிள்ளைகள் கிடைக்கும் களிமண் போல‌ , அதில் நாம் என்ன‌ உருவம் கொடுக்கிறமோ அந்த‌ உருவம் தான் அதில் பிரதிபலிக்கும், பொம்மையாகவோ, விளையாட்டு பொருளாகவோ , ஏன் கடவுளாகவோ கூட‌ மாறும், அது பயன்படுத்தும் நபரை பொறுத்து உள்ளது.

ஏதோ எனக்கு தெரிந்ததை கூறினேன், தவறு இருந்தால் மன்னிக்கவும்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

மிகவும் நன்றி

வாழு.....வாழ விடு....

குரு அண்ணா,
திருமதி இல்ல‌ இன்னும் மேரேஜ் ஆகல‌,
நன்றி அண்ணா.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

guru manikavum subi thirmathi kidaiyadhu ...,avaga lu ku inum marriage agala ...,

மன்னிக்கவும் சுபி.

வாழு.....வாழ விடு....

அண்ணா,
பரவாயில்லை, இதற்கு எதற்கு பெரிய‌ வார்த்தைலாம்...... சொல்றீங்க‌......
இந்த‌ பதிவை இப்பொழுதுதான் பார்த்தேன்......

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

மேலும் சில பதிவுகள்