சொல்ல‌ விரும்பினேன்‍‍ 10‍=தோழிகளே வாங்க‌......

தோழிகளே, அக்கா , தங்கை, அம்மா, எல்லாரும் இங்க‌ வாங்க‌ வந்து நீங்க‌ ரொம்ப‌ நாளா சொல்லனும் சில‌ விசயங்கள் நினைச்சு இருப்பீங்கள்ல‌ அதை சொல்லுங்க‌........
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍===================================================
அனுபவங்கள், அதில் கிடைத்த‌ பாடம்,

சந்தோசங்கள் , அதில் கிடைத்த‌ நிம்மதி,

துக்கங்கள் அதனால் தோன்றிய‌ கஷ்டங்கள், ஏமாற்றங்கள்

=======================================================
இது மாதிரி நிறைய‌ விஷயங்களை இங்கே கூறுங்கள் ............

ஏன்னா யார் தோல்ல‌யாவது சாயனும்னு தோணும் ல‌ அதுக்கு இந்த‌ இழை....

தோழி அருமையான இழை.....
என் மனதில் இருப்பதை நான் உங்களிடம் சொல்ல நினைக்கிறேன்..,
என் பெயர் சரண்யா ..,வாழ்க்கை எனக்கு நிறைய பாடம் சொல்லிருக்கு தோழி
கல்லுரி முடித்து நீண்ட நாட்களுக்கு பிறகு என் தோழர் ஒருவர் சொன்னதின் பெயரில் ஒரு இடத்தில் அங்கு வேலைக்கு சேர்ந்தேன்.,நான் அங்கு சேர்ந்த ஒரு 2 மாதத்தில் அந்த நிறுவனத்தில் நம்பிக்கை வந்தது அதை நடத்தும் ஒருவர் நன்றாக பேசுவார் அவரது மனைவி,தாய் என அனைவரும் என்னிடம் நன்றாக தான் பழகினார்கள்,பின்னர் அவர்களிடம் ஏற்பட்ட நம்பிக்கையின் பெயரில் அந்நிறுவனத்தில் ஒரு 5 லட்சத்தை முதலிடு செய்தேன் மாதம் வரும் லாபத்தில் ஒரு தொகையை எனக்கு தருவதாக சொன்னார்கள்..,அந்நிறுவனம் பங்கு சந்தையில் சிறந்த முறையில் டிரேடிங் நடத்துவார்கள்.,,ஒரு 2மாதத்திற்கு பிறகு ஒரு டாக்டர் நான் முதலிடு செய்ய உள்ளதாகமும் என்ன செய்யலாம் என்று என்னை கேட்டார்,நான்
முதலிடு செய்த இடத்திலேயே அவரை அழைத்து சென்றேன்,அவர் அங்கு 24 லட்சத்தை முதலிடு செய்தார்..,சரியாக தான் எல்லாம் போனது எனக்கு பணம் தேவை பட்டவுடன் அவர்களிடம் பணத்தை கேட்டதற்கு தருவதாக சொல்லி என்னை ஏமாற்றினார்கள்.,அந்த நிலையில் என்ன நடந்தது என்று அப்பறம் சொல்கிறேன்

வாங்க‌ தோழி,
அப்படியா, என்ன‌ தான் நெருங்கின‌ சொந்தமா இருந்தாலும் சரி, நல்ல‌ பழக்கபட்ட நபர்களா இருந்தாலும் சரி பண‌ விஷயத்தில‌ ரொம்ப‌ ஜாக்கிரதையா இருக்கணும் ங்க‌. அதுக்கு நீங்களும் உதாரணம் சொல்றீங்க‌.........

ச்சா இந்த‌ மாதிரி நம்பிக்கை துரோகிங்க‌ இருக்க‌ தான் செய்றாங்க‌....

சரண்யா,

எனக்கு இது மாதிரி நிறைய‌ கஸ்டங்கள் இருக்கு,
நான் எனக்கு தெரிந்தவர்க்கு கஸ்ட‌ படுறாங்கனு , எங்க‌ வீட்டுக்காரர்கிட்ட‌ பணம் கடன் வாங்கி கொடுத்து இப்ப‌ வரைக்கும் அவங்க‌ தரவே இல்ல, வருடங்கள் போகவும் எங்க‌ வீட்டுகாரர் திட்றது குறைஞ்சிருக்கு, நியாபகம் வரப்பஎல்லாம் எனக்கு உண்டு திட்டு.....

என்னபண்றது என்மேல‌ தப்பு இருக்குல‌,

தோழிகளை அழைக்கிறேன் ....

வாங்க‌ உங்க அனுபவத்தை கூறுங்கள்.....

பெண்களே ஜாக்கிரதை,
இப்பொழுது எங்கு பார்த்தாலும் செயின் பறிப்பு, போன‌ வாரம் எங்கள் வீடு அருகே கோவில் கும்பாபிஷேகம் அங்கு கொஞ்சம் கூட்டம் அதிகமாக‌ இருந்தது இதை பயன்படுத்தி சில‌ மர்ம‌ ஆசாமிகள் சிலரிடம் கைவரிசை காட்டிவிட்டனர், கலசத்தில் தண்ணி ஊற்றும் போது பெண்கள் ஒரே சத்தம் என்னவென்று பார்த்தால் என் செயினை காணும், என் செயினை காணும், என்று ஒரே குமுறல் அழுகை ......

அதுவும் அதிகம் வயதான பெரியவர்களிடம் தான் தங்கள் கைவரிசை காட்டியுள்ளனர். அதனால் தயவு செய்து ஜாக்கிரதையாக் இருக்க‌ வேண்டும் ....
வீட்டிலுள்ள‌ பெரியவர்களிடமும், அக்கபக்கம் உள்ள‌ பெரியவர்களிடமும் சொல்லிவையுங்கள் தோழிகளே

புண்ணியம் கிடைத்ததோ என்னவோ தெரியல‌, வீட்டில் அனைவரிடமும் திட்டு கிடைத்தது தான் மிச்சம்........

பாவிகள் இவர்களுக்கு மனசாட்சி என்று ஒன்றை கடவுள் அளிக்கவில்லை போலும் ......

அதே போல் எங்கும் அதிக‌ நகைகளை அணிந்து செல்வதை தவிர்க்க‌ வேண்டும் ..

நிகழ்ச்சிகளுக்கும் , விஷேசங்களுக்கும் சென்றால் கூட‌ அது முடிந்ததும் நகைகளை கழட்டி கைபையில் வைத்துக்கொள்ளவும் .......

இப்பொழுது இருட்டும் போதோ, இல்லை விடியும் போதோ செயின் பறிக்கும் காலம் மாறிவிட்டது , எப்ப‌ வேண்டுமானாலும் நடக்கலாம் ......

அதுவும் இல்லாம‌ நிறைய‌ வீட்டில் பெரியவர்களை நகைகளுக்காகவே அவர்களை வீட்டில் பராமரிக்கிறார்கள் , அவர்களுக்கு இந்த‌ நகை தான் எல்லாம்.......

ஹாஇ தோழிச் நான் பெங்கலூரில் என் கனவருடன் தனியாக வசிக்கிரேன், ஒரு நால் நான் என் 6மாத பையனை தூக்கிட்டு கடைக்கு போனேன் பா. காய்கறி எல்லாம் வாங்கிட்டு வரும்போது ஒருத்தன் என் முன்னாடி பைக்கை நிறுத்தினான்,அப்ப அபன் பின்னால் இருந்த ஒரு பென் இறஙி என்கிட்ட நீ பைக்கில் ஏறு உன் வீட்டில் கொன்டு போய் விட்டுருவான் என்றாள் ,உடனே நான் என் வீடு பக்கம் தான் நானே பொயிடுவேன்னு சொல்லிட்டிருக்கும் போதே என் பையனை பிடுங்க வந்தாள் உடனே நான் என்னை விட்டால் போதும் என்று அவள் கையை தட்டி விட்டுட்டு பின்னால் கூட திரும்பி பார்க்காமல் ஓட்டம் பிடித்தேன் வீடு வந்ததும் தான் திரும்பி பார்த்தேன். இது போன வருஷம் மார்ச் 6ஆம் தேதி நடந்தது,இத என்னால மறக்கவே முடியல பா.இப்ப நெனைச்சா கூட என் பையனை நெனைச்சி அழுதுருவேன் பா. அப்ப இருந்து இப்ப வரைக்கும் நான் மட்டும் என் பையனை தூகிட்டு வெளியே தனியா போனது கிடையாது பா.

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

தோழி பிருந்தா,
ரொம்ப‌ உபயோகமான‌ தகவல்,

ஆமாம் தோழி இங்ககேயும் பல‌ இடங்களில் இது போன்று நிறைய‌ சம்பவம் நடக்கிறது........

ஆனால் அவர்களை பிடித்த‌ பாடு தான் இல்லை .......

ஹாசினி
,நீங்க‌ சொல்லும் போதே நெஞ்சம் பதறுகிறது ,
அனுபவித்த‌ உங்களுக்கு எப்படி இருந்துருக்கும்
ம்ம் பரவால‌ அந்த‌ நேரத்தில் மிக‌ துணிச்சலுடன் நடந்து கொண்டதுக்கு எனது பாராட்டு ..........

Thank u frnd

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

மேலும் சில பதிவுகள்