ஏ கா... வு.. மே - ஏ காவுமே - ஒரு ஊர்ல, ஏ கி.. ஷா.. ன் - ஏ கிஷான் - ஒரு ராஜா ர. க.. தா. தா - ரகதாதா - இருந்திருந்தார். ரொம்ப மெதுவாய் ஒவ்வொரு எழுத்தாய் கூட்டிப் படித்தேன். படித்தபடியே கொட்டாவி வந்தது எனக்கு. (ஆஸ்தான நண்பி வர்றார் போல).
இல்லமா.. இன்னைக்கு இதோட, முடிச்சிகுவோம். மிச்சத்த நாளைக்கு பாத்துக்கலாம். கொஞ்சம் சலிப்போட அந்த கதை புத்தகத்தை மூடினேன்.
கோபமாய் கத்தினாள் குட்டி வாண்டு, “தினம் தினம் உன்னோட இம்சைதாம்மா. ஒரு நாளைக்கு ஒரு லைன் தான் படிக்கிற. அதையும் அடுத்த நாளைக்கு மறந்திருற. நீயெல்லாம் எப்படி தான் படிச்சியோ? இதுல பெரிசா டீச்சர் வேற. நான் என் விளையாட்டு நேரத்த வேற உனக்காக ஒதுக்குறேன். போம்மா” என்றபடியே முறைத்துவிட்டு விளையாட கிளம்பினாள்.
என்னங்க அப்படி பார்க்குறீங்க? பொதுவா பொண்ணு படிக்கலைன்னு தான் அம்மா திட்டுவாங்க. ஏன்? இங்க அம்மா படிக்கலைன்னு பொண்ணு திட்டுதுன்னா.
அத ஏங்க கேட்குறீங்க இந்த வயசுலயா, நமக்கு ஹிந்தி படிக்க ஆச வரணும் (ஆசை இல்ல அவஸ்தை).
வந்திடுச்சே... நமக்கு இருக்கிற மெமரி பவருக்கு (எக்சேம்பில் : பருப்பு இல்லாது பருப்பு சாம்பார் வைக்கிறது. வெங்காய ரசம் வைக்கிறது. இன்னும் கைவசம் நெறைய இருக்கு. ம்.. ம்... நம்ம வனி சிஸ்டருக்கு யூஸ் ஆகும்). வேற யார்கிட்டயும் கோச்சிங் போனா அவ்வளவு தான். அசிங்கப்படுத்திட மாட்டாங்க. (இப்பவும் அசிங்கப்படத்தான் செய்றோம். இருந்தாலும் நம்ம பொண்ணு தான).
எனக்கு ஏன் ஹிந்தி படிக்கணும்னு ஆசை வந்திச்சின்னு சொல்லுறேன் கேளுங்க. (கண்டிப்பா இதுல ஒரு டார்டாய்ஸ் கொசுவர்த்தி சுருள் போட்டே ஆகணும். ஆக்காங்க்.. சொல்லிபுட்டேன்).
ஸ்கூல்ல புதுசா ஒரு தலைமை ஆசிரியை வந்திருந்தாங்க. அவங்க நார்த் இந்தியா.
ஒரு இரண்டு, மூணு நாள் கழிச்சி, நான் சக ஆசிரியை ஒருவரோடு பேசிக் கொண்டிருக்கும் போது வந்தவர், “ஹைய்சா ஹே கிரிஷ் “ (எப்படி இருக்கீங்க கிரிஷ்) என்றார்.
நான் திடுக்கிட்டேன். (நமக்கு தான் ஹிந்தில அ, ஆ, தெரியாதே).
அதற்குள் என் பகுத்தறிவு மூளை, உங்க பேர் என்னன்னு கேக்கிறதுக்கு, ஏன் நம்ம பேரே சேர்த்து சொல்லணும் என்றது. உடனே சுதாரித்து நீங்க கிரிஷ் தானே என்று கேட்கிறார்கள் என்றது. உடனே ‘எஸ், ஐ அம் கிரிஷ்’ என்றேன்.
'கொழுக்' கென சிரித்தார் பக்கத்திலிருந்த ஆசிரியை, கூடவே தலைமை ஆசிரியையும்.
காரணம் அறிந்து நானும் ஹி... ஹி.. ஹித்து வைத்தேன். என்ன செய்வதென்டு புரியாமல். (விடுறா.. விடுறா.. சுனா பானா மீசைல மண் ஒட்டல (நமக்கு தான் மீசையே இல்லையே. இதுல எங்க மண் ஓட்டுறது)). இருந்தாலும் எனக்கு மன வருத்தம் தான்.
மாலை வீட்டுக்கு வந்த பின் என்னவரிடம் சொன்னேன். அவருக்கு அது ஒன்றும் பிரச்சனையாகவே தெரியவில்லை. அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்பது போல் பேச, (அப்படியெல்லாம் இல்லையெண்டால் தினமும் நம்மிடம் பாட்டு கேட்க முடியுமா? அய்யயோ உண்மையிலே நான் பாட்டு நல்லா பாடுவேங்க. இதுல உள்குத்து ஒன்னும் இல்ல) நான் விடாமல் அடம் பிடித்து, தமிழ் வழி ஹிந்தி படிக்க புத்தகம் வாங்கினேன்.
விடுவோமா என்ன. டிகே (ஓகே), சலோ (போ), துமாரா நாம் ஹியாகே (உங்களுடைய பெயர் என்ன), தோடா தோடா (கொஞ்சம் கொஞ்சம்), ஹிந்தி ஒன்று முதல் ஒன்பது வரை (நம்பர் தாங்க) படித்துவிட்டேன்.
ம்.. ம்.. கிரிஷ்க்கு இப்போது தமிழோடு, இன்னொரு மொழியும் தெரிந்தாயிற்று.
எல்லாம் சுமூகமாய் தான் போய் கொண்டு இருந்தது. அடுத்த பூகம்பம் வரும் வரை...
வந்தேவிட்டது…
குட்டி வாண்டுவை விளையாடுவதற்காக பார்க் கூட்டி சென்றிருந்தேன். கூடவே நானும்.
ஒரு சேட்டுகார வயசான அம்மா, நாம போடுற டிகே (ஓகே) வை பார்த்து. 'பஜன்லால் சேட் போன் நம்பர் பார்த்து சொல்லும்மா' என்றார் பாக்கெட் டைரி கொடுத்து.
'டிகே பாட்டி' வாங்கி பார்த்த எனக்கு விழி பிதுங்கியது. அனைத்தும் முத்து முத்தாய் ஹிந்தி எழுத்துக்கள். எண்ணை கண்டுபிடித்துவிடலாம், அதில் பஜன்லால் சேட்டுவை எப்படி கண்டுபிடிப்பது.
''பாட்டி மேரா (என்னோட) ஐ தோடா ப்ராப்ளம் ஹை, டிகே".(அ..ப்..பாடா, கப்பல் ஏறப்போன மானத்தோட டிக்கெட்ட புடுங்கிகிட்டேன்). அப்படியே குட்டி வாண்டுவை அழைத்து விவரம் கூறினேன்.
இமாம்மா ஸ்டைலில் கர்ர்ர்... என்றவள் (விளையாட்ட டிஸ்டர்ப் பண்ணின கோபம்), பின் கண்டுபிடித்து கூறினாள்.
இதோ, இப்போது,
ஆரம்பித்துவிட்டேன். கோச்சிங்... கோச்சிங்...
வேற யாரு? நம்ம குட்டி வாண்டுதான். இதோ பார்த்திங்கல்ல. ஒரு மாசமா முயற்சி பண்ணிகிட்டு தான் இருக்கிறேன். எல்லாம் ஓகே தான். ஆனா நாம படிக்க ஆரம்பிக்கும் போது தான் ஹிந்தில உள்ள மொத்த எழுத்துகளும் (ம்.. ம்... மொத்தம் எத்தன?) ஒரே மாதிரி தெரியுது.
நம்ம குட்டி அம்மணிக்கும் என்னவோ தான் உண்மையாளுமே டீச்சர் ஆயிட்டோம்ன்னே நெனைப்பு. நம்மள ஒரே மொறைப்பு தான். (நல்ல வேளை கவர்ன்மெண்ட் மாணவ, மாணவியரை அடிக்கக்கூடாதுன்னு ரூல்ஸ் போட்டு இருக்கு). இங்க பாருங்க இந்த ஒரு லைன் படிக்கிறக்குள்ள நாலு தடவ மொறச்சாச்சி.
அப்பாடா, ஏதோ ஒரு வழியா ஹிந்தி பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணியாச்சி. (அதாங்க அ, ஆ, இ, ஒண்ணாம் வகுப்பு).
ஸ்கூல் போக (ஹிந்தி படிக்க இல்லைங்க. டீச்சர். அய்யயோ.. ஹிந்தி டீச்சர் இல்லைங்க. சயின்ஸ்). பஸ்சுக்காக பஸ் ஸ்டாண்டுல நின்னுகிட்டு இருந்தேன். வேக வேகமாய் ஓர் அம்மா செல்போன காதுல வெச்சிகிட்டே ஓடி வந்தாங்க.
"என்னம்மா என்ன", என்றேன்.
“**நீவு நீ கலமு இவ்வகலவா “ என்றார்.
அதிர்ச்சியுடன் அவரை கண் விரியப் பார்த்தேன்.
என்னங்க இது? என்ன மொழி? விடாம தொரத்துராங்களே... முடியுமா நமக்கு?
சத்தியசோதனை...
ம்.. ம்... எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா?
ஐயா... அம்மா... அக்கா... தங்கச்சி... நம்ம அறுசுவைல கோச்சர் யாரும் இருக்கீங்களா?
(குறிப்பு: **நீவு நீ கலமு இவ்வகலவா ? (நீங்க எனக்கு பேனா கொடுக்க முடியுமா?) - சுந்தர தெலுங்கு).
Comments
கிறிஸ்மஸ் ராபர்ட்ஸ்
சான்சே இல்ல.. படிக்கிற எல்லாரையும் சிரிக்க வைக்குற மாதிரி அருமையா எழுதிருக்கீங்க... சூப்பர்... கீப் இட் அப்...
இந்த வரிகளையெல்லாம் நினைச்சு நினைச்சு சிரிக்கிறேன்...
// அதற்குள் என் பகுத்தறிவு மூளை, உங்க பேர் என்னன்னு கேக்கிறதுக்கு, ஏன் நம்ம பேரே சேர்த்து சொல்லணும் என்றது. உடனே சுதாரித்து நீங்க கிரிஷ் தானே என்று கேட்கிறார்கள் என்றது. உடனே ‘எஸ், ஐ அம் கிரிஷ்’ என்றேன்.//
// காரணம் அறிந்து நானும் ஹி... ஹி.. ஹித்து வைத்தேன். என்ன செய்வதென்டு புரியாமல். (விடுறா.. விடுறா.. சுனா பானா மீசைல மண் ஒட்டல (நமக்கு தான் மீசையே இல்லையே. இதுல எங்க மண் ஓட்டுறது)). இருந்தாலும் எனக்கு மன வருத்தம் தான்.//
// 'டிகே பாட்டி' வாங்கி பார்த்த எனக்கு விழி பிதுங்கியது. அனைத்தும் முத்து முத்தாய் ஹிந்தி எழுத்துக்கள். எண்ணை கண்டுபிடித்துவிடலாம், அதில் பஜன்லால் சேட்டுவை எப்படி கண்டுபிடிப்பது.//
// ஸ்கூல் போக (ஹிந்தி படிக்க இல்லைங்க. டீச்சர். அய்யயோ.. ஹிந்தி டீச்சர் இல்லைங்க. சயின்ஸ்).//
கலை
கிறிஸ்மஸ் ராபர்ட்ஸ்
அருமை.. படித்து முடிக்கும் வரை சிரித்து கொண்டே தான் இருந்தேன்......
;))
கதை எழுதுற சாக்குல என் காலையும் வாரியாச்சா! ;)) ம்.. கலக்குறீங்க. ரசிச்சு படிச்சேன். ;)
என் மூஞ்சிலயும் ஹிந்தின்னு எழுதி ஒட்டிருக்கோ என்னவோ! அடிக்கடி சரியா தப்பான்னு தெரியாமலே 'ஹிந்தி நஹி மாலும்,' சொல்ற நிலமை வந்துருது. ஆனா படிக்கணும்னு தோணினதே இல்லை. இனி படிக்கப் போறேன். யாராச்சும் அறுசுவைலயே ஹிந்தி க்ளாஸ் எடுங்களேன்.
- இமா க்றிஸ்
கிறிஸ்மஸ் ராபர்ட்ஸ்
ரொம்ப அருமையான கதை ரசித்து படிக்கும் படியாக இருக்கு,
//கோபமாய் கத்தினாள் குட்டி வாண்டு, “தினம் தினம் உன்னோட இம்சைதாம்மா. ஒரு நாளைக்கு ஒரு லைன் தான் படிக்கிற. அதையும் அடுத்த நாளைக்கு மறந்திருற. நீயெல்லாம் எப்படி தான் படிச்சியோ? இதுல பெரிசா டீச்சர் வேற.// இந்த வரிகள் அருமை.
இந்த கதை நகைச்சுவையாகவும் உள்ளது. சூப்பர்.
//ஐயா... அம்மா... அக்கா... தங்கச்சி... நம்ம அறுசுவைல கோச்சர் யாரும் இருக்கீங்களா?//
எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியும், ஹிந்தியில் ஒன் டூ திரி, தெரியும்,
சில வேட்ர்ஸ் மீனீங்க் தெரியும்
மோர் - மயில்
பாணி - தண்ணீர்
சுக்கீரியா - வணக்கம், நன்றி
கல்லூரியில் படிக்கும் போது ஸ்போக்கன் ஹிந்தி க்ளாஸ் போனது இப்ப எல்லாம் மறந்து விட்டது, இந்த கதையை படிக்கும் போது எனக்கு அது தான் ஞாபகம் வந்தது.
அறுசுவை குழுவுக்கு நன்றி.
போட்டாயிங்களா, போட்டாயிங்களா.
கதை வந்திடிச்சி. அழகாய் பிரேம் ஒர்க் & ஸ்பேஸ் ஒர்க் செய்த அறுசுவை குழுவுக்கு ஒன்ஸ்மோர் நன்றி.
உன்னை போல் பிறரை நேசி.
க்றிஸ்
அறுசுவையில் யாரையும் விட்டுவைக்கிறதில்லை போலிருக்கே ;) ஹிந்தி... அம்மா தாயே எனக்கு ஓரளவு புரியும், ஆனால் அதை காட்டிக்கவே மாட்டேன், சுற்றி இருப்பவர்கள் ஹிந்தியில் பேசுவதை கவனிப்பேன் புரிந்தும் புரியாதது போல் போவேன் :P உங்க கதை படிச்சதும், இல்ல படிக்கும் போதே சிரிப்பை அடக்க முடியல. நல்லா எழுதுறீங்க, தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்கள். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பகூத் அச்சா ஹை...
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு கிரிஸ், ஹிந்தி டீச்சரெல்லா நஹி,ஹிந்தி மாஸ்ட்டர்(நிஜமாலுமே அவ மாஸ்ட்டர்தான்).கதையை அழகா கையாண்டு இருக்கீங்கப்பா.
அ,ஆ,இ,ஈ,உ,ஊ,க்ரு,ஏ,ஐ,ஓ,ஒள,அம்,அக. (ஹிந்தி உயிரெழுத்துக்கள்)
தண்டா பாணி ~ பச்சைதண்ணீ
கரம் பாணி ~ சுடு தண்ணீ,
சோட்டா ~ சிறிய
படா ~ பெரிய (பெரிய சைஸ்)
பகு ~ மருமகள்
சோட்டிமா ~ சின்னம்மா
பாபிமா ~ பெரியம்மா
இதற் ~ இங்கே
உதற் ~ அங்கே
ஊப்பர் ~ மேலே
ஜூலா ~ ஊஞ்சல்
என் மகன் கற்றுக்கொடுத்தது. இன்னும் இருக்கு நாளை அடிக்கிறேன். ஜுலுங்கா இது தப்பு ஜூலூங்கா.... சொல்லுங்க. இப்பதா அவனிடமிருந்து தப்பி தூங்க வச்சிட்டு வந்து பார்க்குறேன்.உங்க கதை மிக அருமையா வந்திருக்கு.அட நம்ம மட்டுமில்ல பலபேர் நம்மப்போலவேன்னு புரிஞ்சுட்டேன். வாழ்த்துக்கள் கிரிஸ்:_)
கிறிஸ் கலக்கல்
செம கதை. ரசித்துப் படித்தேன். அது என்னவோ தெரியல, நாம என்ன தப்பு பண்ணாலும் //இதுல பெரிசா டீச்சர் வேற.// என்கிற வார்த்தை தான் எல்லாருக்கும் கிடைக்குது. : ). டீச்சர் அறிவாளிகள் நு இந்த உலகம் முத்திரை குத்தி இருக்கு. அது நமக்கு சில நேரங்களில் இப்படி காமெடியாக மாறிப்போகுது. என் ஹிந்தி வகுப்பு நியாபகம் வந்துடுச்சி. தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்கள்.
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!
ஆல் டீச்சரம்மாஸ்
முன்பெல்லம் டீச்சர்ன்னா இங்க இமா மட்டும் தான் ;)
இப்போ பாருங்க... சைன்ஸ் டீச்சர், இங்க்லீஷ் டீச்சர், தயு... நீங்க என்ன டீச்சரும்மா??? ;)
நடக்கட்டும் நடக்கட்டும். இங்க எங்களை எல்லாம் குச்சி கொண்டு மிரட்டாம இருந்தா சரி.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கிறிஸ்மஸ் மேடம்,
கதை ரொம்ப நகைச்சுவையாக நன்றாக இருக்குங்க...
ரொம்ப அருமைங்க ..
நட்புடன்
குணா
கலை ரொம்ப நன்றிங்க,
கலை ரொம்ப நன்றிங்க,
படித்து, ரசித்து, நினைச்சு நினைச்சு சிரிச்சதுக்கு.
உன்னை போல் பிறரை நேசி.
அம்மா கோபாலகிருஷ்ணன்,
அம்மா கோபாலகிருஷ்ணன்,
பேர என்னன்னு சொல்றது? படித்து, சிரித்து, பாராட்டுக்கு நன்றிங்க.
உன்னை போல் பிறரை நேசி.
Vani akka
நான் கணக்கு டீச்சர் அக்கா. இங்க நீங்க தான் எங்களுக்கு டீச்சர். எங்களுக்கு பல விசயங்கள் சொல்லித்தரீங்க. நீங்க குச்சி எடுக்காம இருந்தாலே போதும். ; )
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!
இமாம்மா, பாராட்டுக்கு நன்றிங்க.
\\கதை எழுதுற சாக்குல என் காலையும் வாரியாச்சா! \\ கோபத்துல மொறைக்கிரத விட, இமாம்மா ஸ்டைல் கர்ர்ர்.. தான் அழகா இருக்கு.
\\யாராச்சும் அறுசுவைலயே ஹிந்தி க்ளாஸ் எடுங்களேன்\\ ஆமாப்பா யாராச்சும் ட்ரை பண்ணுங்க. பாராட்டுக்கு நன்றி இமாம்மா.
உன்னை போல் பிறரை நேசி.
பாலபாரதி நன்றி,
ஊகூ..ம்.. நம்மள திட்டுறது, உங்களுக்கு அருமையாய் இருக்கு.
நன்றிப்பா..
உன்னை போல் பிறரை நேசி.
Teddy கரெக்டா சொன்னிங்க
மொதல்ல, படித்து, ரசித்து வாழ்த்துனதுக்கு நன்றி.
சின்ன ஆள்கள் தான், பெரிசா டீச்சர் வேற, அப்படின்னு நம்மள பாத்து கேட்பாங்க. பெரிய, பெரிய ஆட்கள்லாம் இவங்கல்லாம் டீச்சரான்னு தான் கேட்கிறாங்க. நம்மளும் +2 ஸ்டுடென்ட்ஸ் சைஸ்லதான இருக்கோம். சில நேரங்களில் இப்படி காமெடியாகத்தான் மாறிப்போகுது.
கரெக்டா சொன்னிங்க. \\வனி sis இங்க நீங்க தான் எங்களுக்கு டீச்சர். எங்களுக்கு பல விசயங்கள் சொல்லித்தரீங்க. நீங்க குச்சி எடுக்காம இருந்தாலே போதும்\\ சமையல்ல நான் O . இதுல இத விட பெரிசா ஜீரோ போடா முடில.
உன்னை போல் பிறரை நேசி.
கிறிஸ்மஸ் mam
//பெரிய ஆட்கள்லாம் இவங்கல்லாம் டீச்சரான்னு தான் கேட்கிறாங்க. நம்மளும் +2 ஸ்டுடென்ட்ஸ் சைஸ்லதான இருக்கோம்// அங்கயும் அந்த பிரச்சனை தானா? : ) காலேஜ் படிக்கும் போது "நாங்களாம் எப்பவுமே இளமையா இருப்போம்" நு பெருமை அடிச்சதெல்லாம் இப்ப நெனச்சா சிரிப்பா இருக்கு.
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!
அடடா குட்டி டீச்சருங்களா
மேத்ஸ், சைன்ஸ், இங்க்லீஸ்... மூனு சப்ஜக்டும் வனிக்கு வராது. முக்கியமா கணக்கு வாத்தியாரை கண்டா அலர்ஜி. ;) கணக்குல நான் 0. குச்சியெல்லாம் எடுக்க அண்ணா விடமாட்டார்... பிடிங்கி என்னையே பிச்சுப்புடுவார் பிச்சு. டீச்சருங்க நீங்க நடத்துங்க. ஹிந்தி டீச்சர் கேக்குதோ?? முதல்ல என்ன மாதிரி ஆட்களுக்கு ஒரு தமிழ் டீச்சரை போடுங்கப்பா அறுசுவையில...
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
அருமை!
ரொம்ப நல்லா இருக்குங்க! தொடர்ந்து எழுதுங்க!
வனி sis ,
பாராட்டுக்கு நன்றி,
\\ அறுசுவையில் யாரையும் விட்டுவைக்கிறதில்லை போலிருக்கே..\\ அவங்களைலாம் பாத்து ஆச்சர்யப்படுறேன்னு நினைக்கிறேன், உங்களோட சமையல் குறிப்புகள், வலைபதிவுகள். இமாமாவோட கிராப்ட் வொர்க்ஸ், கட் & ரைட்டா கொடுக்கிற ஆலோசனைகள். எவ்வளவு அழகா மத்தவங்களுக்கு, உபயோகமா தங்களோட ப்ரீ நேரத்த செலவிடுறாங்க. சமையல், கிராப்ட் இந்த இரண்டுவே எனக்கு வாராது, நீங்கல்லாம் போடுறத பாத்து எனக்கே ஆசை வருது.நானும் ட்ரை பண்ணுவேன்.
கண்டிப்பா இந்த லிஸ்ட் பெரிசு, கர்ப்பத்திலிருந்து குழந்தை வளர்ப்பு வரை கொடுத்த செந்தமிழ் செல்வி அம்மா, தாய்மை எதிர்பார்ப்போர் இழை,"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை கொடுத்த ரேணுகா அக்கா. இன்னும் நெறைய பேர்...
உன்னை போல் பிறரை நேசி.
ஹிந்தி டீச்சர் Renuka Sister
நிறைய கத்துரிக்கிங்க உங்க பையன்கிட்ட இருந்து. பாராட்டுக்கு ரொம்ப நன்றி. பையன்கிட்ட ஹிந்திய நல்லா கத்துக்கோங்க. \\பலபேர் நம்மப்போலவேன்னு புரிஞ்சுட்டேன்\\கைக்கு கை செல்போனு.
உன்னை போல் பிறரை நேசி.
க்றிஸ்
//கர்ப்பத்திலிருந்து குழந்தை வளர்ப்பு வரை கொடுத்த செந்தமிழ் செல்வி அம்மா, தாய்மை எதிர்பார்ப்போர் இழை,"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை கொடுத்த ரேணுகா அக்கா. இன்னும் நெறைய பேர்...// - ம்ம்... அப்போ அடுத்தடுத்த கதைகளில் இவங்க பேரெல்லாமும் “அடி” வாங்கும்னு சொல்லுங்க. ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
குணா அண்ணா,
சிரிச்சின்களா, நன்றி..நன்றி
உன்னை போல் பிறரை நேசி.
அடடே வனி, கிரிஸ்,
வனி நீங்களே எடுத்து குடுப்பீங்கபோல ... நான் இன்னும் அந்த கர்ர்ர்ர்ர் இமா வாய்ஸ்லயும் ,கிரிஸ்சோட குட்டி வாய்ஸ்லயும் மாறிமாறி யோசிச்சுட்டு இருக்கேன். வனிக்கு தழிழ் டீச்சரா...?! நல்லாதான போகுது..
கிரிஸ், நானும் இங்கு பலபேரின் விசிறியப்பா,இவங்களை பார்த்துதான் இன்னும் கத்துண்டு இருக்கேன். குட்டி பையன் கிட்ட இப்பதான் ஒரு ஹிந்தி ரைம்ஸ் கத்துட்டு இருக்கேன் . கத்துண்டு இன்னும் நல்லா விரிவா போடுறேன்.
வனி sis ,
இவங்களைலாம் பாத்து ஆச்சர்யப்படுறேன்னு நினைக்கிறேன்,இந்த லிஸ்ட் தான் அது.ஒருவேளை கதைக்கு அவசியப்பட்டால், இந்த க்றிஸ் என்னதான் பண்ண முடியும்.
உன்னை போல் பிறரை நேசி.
vijikarthik
பாராட்டுக்கு நன்றி...நன்றி. கண்டிப்பா ட்ரை பண்ணுறேன்.
உன்னை போல் பிறரை நேசி.
கிரிஸ்
அச்சோ கிரிஸ். சான்ஸே இல்ல. சுப்பரோ சூப்பர் .ஏந்னு முடிஞ்சிதுன்னு இருந்தது.சரி தெலுங்கு டீச்சர் கிடைச்சுட்டாங்களா.
Be simple be sample
நன்றி ரேவ்ஸ்,
பாராட்டுக்கு நன்றிபா, \\ சரி தெலுங்கு டீச்சர் கிடைச்சுட்டாங்களா\\ இன்னும் இல்ல, மறுபடியும் குட்டிவாண்டதான் ட்ரை பண்ண சொல்லணும்.
உன்னை போல் பிறரை நேசி.
கதை மிக அருமை... படிக்க
கதை மிக அருமை... படிக்க படிக்க எனக்கு என் பள்ளி நினைவு வருகிறது.....
dhivya mohankumar
தாங்க்ஸ்பா, படிச்சி கமென்ட் போட்டதுக்கு. நன்றி.
உன்னை போல் பிறரை நேசி.