தேதி: July 22, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கோதுமை மாவு / மல்டிக்ரெய்ன் மாவு - ஒரு கப்
சர்க்கரை - அரை கப்
உப்பில்லாத வெண்ணெய் - 100 கிராம்
உப்பு - கால் தேக்கரண்டியைவிட சற்று குறைவான அளவு
ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி
பால் - தேவைக்கேற்ப
தேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். பேக்கிங் ட்ரேயில் வெண்ணெய் தடவி வைக்கவும். சர்க்கரையை பொடி செய்து கொள்ளவும்.

மாவுடன் பொடி செய்த சர்க்கரை, உப்பு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும்.

வெண்ணெயுடம் ஒரு மேசைக்கரண்டி பால் விட்டு கலந்து கொள்ளவும்.

அத்துடன் மாவைச் சேர்த்து பிசையவும்.

மாவு சப்பாத்தி மாவு பதத்தில் இருக்க வேண்டும். அதற்கேற்றபடி பால் சேர்த்து பிசையவும். (நான் மல்டிக்ரெய்ன் ஆட்டா பயன்படுத்தினேன். அதற்கு ஒன்றரை மேசைக்கரண்டி அளவு பால் சேர்த்து பிசைந்தேன்). அவனை 180 C ’ல் முற்சூடு செய்யவும்.

பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, உள்ளங்கையில் வைத்து லேசாக அழுத்தி, பேக்கிங் ட்ரேயில் அடுக்கவும். ஒன்றுக்கொன்று ஒரு இன்ச் இடைவெளி இருக்குமாறு அடுக்கி, ட்ரேயை அவனில் வைத்து 15 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

டேஸ்டி எக்லெஸ் வீட் குக்கீஸ் ரெடி.

அவனில் வைத்த 8 நிமிடங்களுக்குப் பிறகு அடிக்கடி பிஸ்கட்களை கவனிக்கவும். அடிப்பாகம் சிவந்திருந்தாலோ, ஓரங்களை தொடும் போது உடையாமல் இருந்தாலோ பிஸ்கட் பேக் ஆகிவிட்டது என தெரிந்து கொள்ளலாம்.
Comments
வனி
பார்க்கும்போதே சாப்பிடத் தோணுது. உங்களின் கேக் ரெசிபி பிஸ்கட் ரெசிபி செய்ய ஆசை தான். ஆனால் இதற்கு என்ன மாதிரியான ஓவன் வாங்கனுனும் சொல்லுங்க.
உங்க மேங்கோ கேக் குக்கரில் செய்தேன். சரியா வரல நான் சேர்த்த பொருட்கள் சரியான அளவில் இல்லை என நினைக்கிறேன்.
அவ்ன் எப்படி வாங்குவது என்று தெரியல
ஏற்கனவே இந்த லிங்கில் கூட கேட்டிருக்கிறேன்.
http://www.arusuvai.com/tamil/node/28922
வனிதா சிஸ்டர்
மொபைலில் ஜும் பண்றது முன்னாடி ஒரு பிஸ்கட் படம் இருந்தப்பவே நினைத்தேன் இது வனிதா சிஸ்டரா தான் இருக்கும் என்று உட்கார்ந்து யோசிப்பிங்களோ பிஸ்கட் சூப்பரோ சூப்பர் முதல் வரிசை மூன்றும் ஒரே வெரைட்டியா கலை கட்டுதே
எப்பவும் போல் அசத்திவிட்டீர்கள்.
எப்பவும் போல் அசத்திவிட்டீர்கள்.
அவன் இல்லாமல் எப்படி குக்கீஸ் செய்வது என்று சொல்லி கொடுங்கள். குக்கீஸ் செய்ய ஆசையாக உள்ளது.
அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை
வனி
இவ்வளவு ஈசியா குக்கீஸ் செய்ய சொல்றீங்க,கேக் செய்ய சொல்றீங்க,ஆனா எதுவுமே எனக்கு workout ஆகமாட்டேங்குது.
வனி,உங்களுக்கு ஒரு ஐடியா,பேசாம பேங்களூர்ல ஒரு Restaurent with Bakery open பன்னிடுங்க,பேரு வைக்கிற சிரமம்கூட உங்களுக்கு இல்லை, ஏற்கனவே ready VANI'S KITCHEN எப்புடி??? :-) :-) :-)regular customer ஆயிடுவேன் நான்,வேண்டுமென்றால் PR Manager ஆககூட நான் ready நீங்க ready யா???
வனி
வனி குக்கீஸ் சூப்பர். கன்டிப்பா முயர்சி செய்து பார்கிரேன். அவன் இல்லை என்னிடம்.இருந்தாலும் பரவாலை மைக்ரோவேவில் செய்து பார்கிரேன்.
vani akka
Remba nalla eruku, parkumpothu sapdanum pola eruku.
ரம்யா ஜெயராமன்
வனி
நானும் முட்டையில்லாமல் இதே போன்று செய்வேன் வனி,சுலபமா, சிக்கிரமா செய்யக் கூடிய குக்கீ
வனிதா
வனிதா,
சூப்பர் ஈஸீ கூக்கீஸ்
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
வனிதா
வனிதா வீட் குக்கீஸ் செய்தாசி சூப்பர். மைக்ரோவேவில் செய்தேன் .
நன்றி - எக்லெஸ் வீட் குக்கீஸ்
குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)
சஹீதா.. மிக்க நன்றி. :) மேங்கோ கேக்ல எதை ட்ரை பண்ணிங்க? குறிப்பின் லின்கும் நீங்க செய்த முறையும் சொல்லுங்க, என்ன தப்புன்னு பார்த்து சரி பண்ணலாம். அவன் கேள்விக்கு அந்த லின்க்லயே அன்னைக்கு பதில் கொடுத்தேனே, பார்த்தீங்களா?
திரு அஹமது.. மிக்க நன்றி :) பிள்ளைகளுக்கு ஒரே போல் செய்தால் பிடிப்பதில்லையே... அதான் சின்ன மூளைக்கு எட்டுறதை எல்லாம் ட்ரை பண்றேன்.
தாமரை... நலமா? மிக்க நன்றி :) எனக்கு மைக்ரோவேவ் குக்கீஸ் செய்முறை அத்தனை தெரியாது, இதையே செய்ததாக நித்யா சொல்லி இருக்காங்களே, அவங்களை கேட்டுபாருங்களேன் எப்படி என்று. நானும் கேட்கிறேன்.
அனு... ஹஹஹா. மிக்க நன்றி அனு ;) நமக்கு ஏன் இந்த வேண்டாத ஆசை எல்லாம்? அப்படி எல்லாம் துவங்கினா நீங்க மட்டும் தான் அனேகமா அங்க ரெகுலர் கஸ்டமரா இருப்பீங்க ;) உங்களுக்கு ஏன் வொர்கவுட் ஆகல அனு? என்ன பிழை? இருங்க இன்னும் 2 நாளில் பேக்கிங் பற்றி ஒரு பதிவு போட பார்க்குறேன்.
நித்யா... மிக்க நன்றி :) நீங்க மைக்ரோவேவில் எப்படி செய்தீங்கன்னு இங்கே சொல முடியுமா? மேலே தாமரை கேட்டிருக்காங்க, அவன் இல்லாத பலருக்கும் பயன்படும். செட்டிங் எல்லாம் என்ன வெச்சீங்க, எவ்வளவு நேரம் இது போல எல்லா தகவலும் பகிர்ந்துக்கங்க ப்ளீஸ்.
ரம்யா... மிக்க நன்றி :) செய்து பாருங்க.
வாணி... மிக்க நன்றி :)
கவிதா.. மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
microwave cookies
நான் மைக்ரோவேவ் மீடியம் ஹையில் வைத்து 5 நிமிடம் விட்டு எடுத்தேன். 3 நிமிடம் முடித்து முதலில் திரந்து பார்தது தீயிந்து விடாமல் பார்துக்கொள்ளவும். நன்கு ஆரியதும் சாப்பிடால்
தான் சுவையாக இருக்கும்
நித்யா
தேன்க்ஸ் ஃபார் ஷாரிங் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா