கணவாய். .

நண்பர்களே! கணவாய் பற்றி தெரியுமா?

தெரியும்.
உங்களுக்கு என்ன தெரியணும்! சொன்னால் ஹெல்ப் பண்றேன்.

‍- இமா க்றிஸ்

India ல் என்ன‌ என்ன‌ வகை கணவாய் மீன் உள்ளது என்று கூறுவீர்களா? India இல் இதனை அனைவரும் சாபிடுவார்களா. ? இமா..

ஷாலி அருண்

திருகோணமலையா நீங்க? அது... எங்கட பக்கம் / கணவா / கணவாய் என்பதுதான். நீங்க திருகோணமலையில சாப்பிட்டதே இல்லையா? ஊசிக் கணவாய், முட்டைக் கணவாய், சாக்குக் கணவாய் எல்லாம் வருமே. இந்தியாவிலயும் அது எல்லாம் இருக்கு. கணவாய் மீன் என்கிறார்கள். சாக்குக் கணவாயை ஓட்டுக் கணவாய் என்றும் சொல்லுறாங்க என்று நினைக்கிறேன்.

//அனைவரும் சாபிடுவார்களா. // ;)) அது எப்பிடி எல்லாரும் சாப்பிடுறது! விருப்பமானவங்க மட்..டும் சாப்பிடுவாங்க. ;) இங்கயே இந்தியர்கள் கொடுத்த குறிப்புகள் நிறைய இருக்கே! சாப்பிடுவாங்க.

'இந்தியாவில் கணவாய்' பற்றிய தகவல்களுக்குப் பதில் சொல்ல அட்மின்தான் சரியான ஆள். :-) கூப்பிட்டு இருக்கிறன். உங்கட லக் எப்பிடி என்று பார்ப்போம்.

‍- இமா க்றிஸ்

ம் நானும் திருகோணமலை தான் இமா. india இல் இவை எல்லா வகைகளும் இருக்கிறதா? என்பது doubt தான். கணவா என்பதே அறுசுவை.கொம் இல் அசைவப் பிரிவில் இல்லை அதுதான் doubt இல் கேட்டேன்...

ஷாலி அருண்

கணவா மீனுக்கென்று தனிப் பிரிவு அறுசுவையில் கிடையாது. அது மீன் வகை என்பதால் மீன் உணவுகளில் கணவா மீன் குறிப்புகள் கிடைக்கும். இலங்கையில் கிடைக்கின்ற கணவா மீன்கள் அனைத்துமே இந்தியாவில் கிடைக்கும் என்று நம்புகின்றேன். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் கிடைக்கும் (இலங்கையை ஒட்டி இருப்பதால் :-)).

இந்த இழையின் நோக்கம் எனக்கு இன்னமும் பிடிபடவில்லை. இந்தியாவில் அனைவரும் கணவா சாப்பிடுவார்களா என்பதுதான் உங்கள் சந்தேகமா? நான் இந்தியாவில்தான் இருக்கின்றேன். ஆனால் சாப்பிட மாட்டேன். எங்கள் வீட்டில் யாரும் சாப்பிட மாட்டார்கள், என் மனைவியைத் தவிர. டேஸ்ட் பார்த்திருக்கின்றேன். எனக்கு பிடிக்காததால் அதை மீண்டும் முயற்சிக்கவில்லை. ஆனால் இதை விரும்பிச் சாப்பிடுகின்றவர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள். பிடிக்காதவர்களும் இருக்கின்றார்கள்.

இன்று காலை நண்டு வாங்கச் சென்ற போது, எனது மீனவ நண்பர் ஒருவர் பை நிறைய கணவாயை வைத்துக் கொண்டு எடுத்துக் கொள்ளச் சொன்னார். மீன் இலவசம்தான் என்ற போதும் பிடிக்காததை வாங்கி வந்து என்ன செய்வது? நண்பர் வருத்தப்பட்டார். "இதுதான் டேஸ்ட்டே, இதை சாப்பிட மாட்டேங்கிறியே". என்ன சொல்ல.. ஆளுக்கொரு நாக்கை ஆண்டவன் வைத்துவிட்டானே..!! :-)

சரி, இப்பவாவது சொல்லுங்கள். உங்களுடைய கேள்வி என்ன? எதிர்பார்ப்பு என்ன?

இலங்கையில் கணவாயை மீன் வகைக்குள் அடக்குவதில்லை. இறால், நண்டு போல‌ ஒரு தனி வகையாக் கூறுவார்கள். அதுதான் சந்தேகம் வந்தது. சந்தேகத்தை பூர்த்தி செய்ததற்கு நன்றி admin....

ஷாலி அருண்

ஆச்சரியம்..! இங்கே நிறைய பேர் அதை கணவா மீன் என்றே சொல்வதால் என் போன்றவர்கள் அதை ஒரு மீன் வகையாகவே எண்ணிக் கொண்டிருக்கின்றோம். என்னுடைய மீனவ நண்பர்கள் வெறும் கணவா என்று மட்டும்தான் சொல்வார்கள். பொதுவாக எந்த மீனைப் பற்றி சொன்னாலும், மீன் என்று முடிக்காமல் வெறுமனே வவ்வால் இருக்கு, வஞ்சிரம் இருக்கு என்று சொல்வது போல், இதையும் கணவா என்று சொல்கின்றார்கள் என்று எண்ணினேன். இப்போது நண்பருக்கு போன் செய்து கேட்டபோது நீங்கள் கொடுத்த பதிலையே கொடுத்தார். "அது மீன் கிடையாது. ஆக்டோபஸ் மாதிரி ஒரு தனி வகை, நாங்க எல்லாம் அதை கணவான்னு மட்டும்தான் சொல்வோம். நம்ம மக்கள்தான் கணவா மீன், கணவா மீன்னு சொல்லி அதை மீன் ஆக்கிட்டாங்க" என்றார். ஆக, அவர்கள் தெளிவாகத்தான் இருக்கின்றார்கள். இணையத்தில் ஒரு சிறிய தேடுதல் நடத்தியதில் கணவாய் மீன் வகைக்குள் அடங்காது என்பது தெரிந்தது.

எதுவாயினும் கணவாய்க்கு தனிப் பகுதி கொடுப்பது கடினம் என்று எண்ணுகின்றேன். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் குறிப்புகள் இருந்தால்தான் தனிப்பிரிவு கொடுக்க இயலும். அந்த அளவிற்கு குறிப்புகள் இருக்குமா என்பது சந்தேகமே.

நன்றி அட்மின் என்னுடைய‌ கருத்திற்கு மதிப்பளித்து விளக்கமளித்ததற்கும்.

ஷாலி அருண்

உண்மையில் நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஒரு விசயத்தை தெரிந்துகொள்ள உதவியமைக்கு. மிக்க நன்றி.
(ஆனால் நீங்களும் உங்களது இரண்டாவது பதிவில் "India ல் என்ன‌ என்ன‌ வகை கணவாய் மீன் உள்ளது என்று கூறுவீர்களா? " என்று கேட்டு கணவாயை மீன் என்றே குறிப்பிட்டு இருந்தீர்கள். :-))

இந்தியாவில் அவ்வாறு அழைப்பதனால் கணவாய் மீன் என்றே கேட்டேன்...

ஷாலி அருண்

மேலும் சில பதிவுகள்