கோபப் பறவையொன்றும் கோபிக்காத பறவையொன்றும்

சின்னவர் ஒருவருக்குப் பிறந்தநாள். அன்பளிப்பாக என்ன வாங்கலாம்!

க்றிஸ் சொன்னார், "நிக்ஸனுக்கு Angry Birds' வேண்டுமாம். அப்படியென்றால்! எனக்குத் தெரிந்தவரை ஏதோ பெரியவர்கள் விளையாடும் விளையாட்டு அது.

பாடசாலை முடிந்து கடைத்தெருவிற்குப் போனோம். அங்கிருந்து நிக்ஸன் வீட்டிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு. நிக்ஸனின் அக்காவோடு பேசலாம் என்கிற எண்ணம் எங்களுக்கு. அவர்கள் வெளியே கிளம்பிப் போயிருந்தார்கள் என்று தெரியவர, அலைபேசியில் அழைத்தோம்.

"இது ரகசியமாக இருக்கட்டும். Angry Bird என்றால் என்ன?" மறுபக்கம் இருந்து கொஞ்சும் தமிழிலில் பதில் வந்தது, "அடு... ஒரு கேம்... பட்... நிறய இருக்கு. Which one are you asking about aunty?" அது எனக்குத் தெரிந்தால் நான் ஏன் கேட்கிறேனாம்!
"நிக்ஸனிடம் சொல்ல வேண்டாம்," என்றேன். என் கண்ணில் எதுவும் படாவிடால், வாங்கக் கிடைக்காவிட்டால் ஏமாந்து போவாரே!" "There are computer games and toys as well," என்றார்.

சரியென்று கடையெல்லாம் தேடினால் எதையும் காணோம். கடையில் வேலை பார்த்த ஒரு பெண்ணைப் பிடித்து விசாரித்தேன். "Ya! We had a book in the toy section along with a puffy soft toy."

அங்கும் இல்லை; எங்கும் இல்லை; எதுவும் இல்லை. ;( கால் கெஞ்சிற்று. காலை ஆறு மணி முதல் ஓய்வு கொடுக்காமல் நின்றிருக்கிறேன். வேறு வழி தெரியாமல் சின்னவருக்குப் பிடித்த விதமாக ஒரு construction set கண்ணில் பட வாங்கிக் கொண்டோம்.

Angry Bird கிடைக்காதது angry. வீட்டுக்குத் திரும்பலாம் என்று நினைத்தபோது தான் அது கண்ணில் பட்டது. ஒரு கோபமான பறவைச் சீட்டுக்கட்டு. 3D கார்ட் ஒன்றும் இலவசம் என்று போட்டிருந்தார்கள். மலிவாகத் தெரிந்தாலும்... இவற்றையும் சேர்த்துக் கொடுக்கலாம் என்று வாங்கிக் கொண்டோம்.

பெரிய பெட்டியைச் சுற்றி வைத்தேன். கோபப் பறவை ஒரு நாள் முழுவதும் மேசையில் உட்கார்ந்து என்னை முறைத்தது. பிறந்தநாள் அன்று... நேற்று - பாடசாலை முடிந்து வந்ததும் வீட்டில் water filter மாற்றுவதற்கு ஒருவர் வந்தார். அவரை மேற்பார்வை பார்த்துக் கொண்டு கோபப் பறவையையும் ஆராய்ச்சி செய்தேன். இதைப் பறவை வடிவில் சுற்றினாலென்ன!

ஆரம்பித்தேன் வேலையை. என் கண்ணில் பட்ட பொருட்களெல்லாம் சேர்ந்து ஆங்ரி பேட் உருவானார். :-) இடையில் வேறு வேலை செய்ய இயலாததால் இதையே படம் எடுத்துக் கொண்டு இருந்தேன். Angry bird, கொஞ்சம் ugly bird ஆக உயிர் பெற்றார். ;))

நாங்கள் சின்னவர் வீட்டுக்குப் போய் இறங்கியதும் சின்னவர் என் கையிலிருந்த பெரிய பெட்டியை வாங்க வந்தார். அது என் மருந்து என்றேன். நம்பவில்லை அவர். நானும் விடவில்லை.

"I like angry bird," என்றார்.
"I know. I saw a hu...ge angry bird on the tree this morning. It looked so scary so I didn't feel like catching it. ;("
"அன்ட angry bird இல்ல. I want the other angry bird." கொஞ்சம் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது.
கவனிக்காதது போலவும் புரிந்துகொள்ளாதது போலவும் தொடர்ந்தேன், "Since I couldn't catch that bird... I thought at least I'll make you one." கையிலிருந்த குட்டிப் பறவையைக் கொடுக்க ஒரு சிரிப்புச் சிரித்தார்.

"What!! This doesn't even look like an angry bird!"

"You do something bad and she will go angry at you." என்றேன். என்ன சொல்வது என்று புரியாமல் ஒரு விதமாகச் சிரித்தார். "Thanks aunty," என்றார்.

பறவை கையிலிருந்தது. அதைத் திருப்பிப் பார்த்துவிட்டு "It looks nice," என்றார். இதற்குள் தமக்கையாரும் வந்தார். சின்னவர் கையிலிருந்த வினோத உருக் கொண்ட பறவையைப் பார்த்தார். "இது... ஆங்ரி பேட்," என்று நான் சொல்லக் குழப்பமாக ஒரு சிரிப்புச் சிரித்தார் அவரும். அவருக்கு நான் என்னவோ விளையாடுகிறேன் என்று புரிந்து போயிற்று. ;)

சின்னவர் மெதுவே க்றிஸ் பக்கம் நகர்ந்தார். "எனக்கு கிஃப்ட் ஒண்டும் இல்லயா?" என்றார். க்றிஸ் தன் பங்குக்கு, "அதுதானே ஆன்டி அழகாக ஒரு பேட் செய்து தந்தாங்க." என்றார். ;) சின்னவர் நன்றி சொன்னாலும் பறவையைப் பிடித்தபடி உணர்ச்சியைக் காட்டாமல் அமர்ந்திருந்தார்.

கலாய்த்தது போதும் என்று தோன்ற, "அதை பிரிச்சுப் பார்க்க இல்லையா?" என்று க்றிஸ் கேட்டு வைத்தார்.
"எடு! நீங்க ஒண்டும் தர இல்ல!" இப்போது குரலில் மெல்லிய சோகம். ஆனால் எங்கள் மேல் இருந்த நம்பிக்கையும் கண்ணில் தெரிந்தது. எதாவது வைத்திருப்போம் என்று நம்பினார்.
"தந்தமே! அந்த ஆங்ரி பேட். அதைப் பிரிச்சுப் பாருங்க."

என்ன! எப்படி!
எங்கள் முகத்தைப் பார்த்தார் பரிதாபமாக. பிறகு அனுமதி கேட்டுக் கொண்டு தயக்கமாக இறக்கைகளைப் பிரித்தார், காலைப் பிடித்து இழுக்க இரண்டும் கடதாசியோடு சேர்ந்து வந்தன. ;) ஏஞ்சல் சிரித்தபடி அவதானித்தார்.
வயிற்றைப் பிரிக்க பெட்டி எட்டிப் பார்த்தது.

சின்னவர் முகத்தில் சந்தோஷம். பிரித்த பாதியில் ஓடி வந்து என்னைக் கட்டிக் கொண்டார். "Thank you Aunty." என்று ஒரு முத்தம் கொடுத்தார். பிறகு அப்படியே க்றிஸ்ஸுக்கும். திரும்ப மீதிப் பொதியைப் பிரித்துப் பெட்டியைக் கொட்டி... கண்கள் அகல விரிய.. ஒவ்வொரு அட்டையாகப் பார்த்து எனக்குப் புரியாத பாஷையில் என்னென்னெவோ சொன்னார்.

"What does that mean Angel?"
"It means... he likes it. :-)" என்றார் ஏஞ்சல்.

சின்னவர்கள் சந்தோஷம் சின்னப் பொருட்களில்தான். நாம் விலை கொடுத்து நல்லதாக என்ன வாங்கிக் கொடுத்தாலும் அவர்கள் மனதிற்குப் பிடித்தது கிடைத்தால் அதுதான் பெரிது.

பிறகு பெரிய பொதியையும் கொடுத்தொம். இரட்டிப்பு சந்தோஷம் குட்டியருக்கு.

பிறகு.... இராப்போசனம்... கேக் வெட்டுதல். சின்னவர் பிரிய மேலீட்டால். "I want to cake தீத்த aunty," என்றார். "I want to தீத்த her a cherry," என்று கத்தியாலேயே கேக்கின் மேல் இருந்த செர்ரிப் பழத்தைத் தூக்கி என் வாய்க்குக் கொண்டு வந்தார். ;)

குறிப்பு -
குட்டி ஏஞ்சல் - சமீபத்தில் ஆமைக்குட்டி கைவினைக் குறிப்பு http://www.arusuvai.com/tamil/node/28957 கொடுத்த அதே ஏஞ்சல். முன்பும் அறுசுவையில் குறிப்புகள் செய்து காட்டியிருக்கிறார். http://www.arusuvai.com/tamil/node/16679
நிக்ஸன் - அவரது குட்டித் தம்பி.
இருவரும் நியூஸிலாந்தில் பிறந்தவர்கள். தமிழ் நன்கு புரியும். பேச்சும்... ஓரளவு நன்றாகவே வருகிறது, கொஞ்சம் தாராளமான ஆங்கில மழலைக் கலப்புடன். :-)

~~~~~~~~~~~~~
இந்தப் பறவைக்கான செய்முறையைக் காண - http://www.arusuvai.com/tamil/node/29162

5
Average: 5 (6 votes)

Comments

//இதைப் பறவை வடிவில் சுற்றினாலென்ன!//
எதை???

காலுக்கு,, ஃபோர்க்.. அது விரலைப் போல‌ நல்ல‌ பொருத்தம்.
தலைக்கு,, குட்டி பந்து போல‌ இருக்கு.
மற்றவை
எப்படியோ பறவை,,நல்ல‌ கோவத்தில் முழிக்குது.
நிக்ஸனுக்கு பிடித்ததில் எனக்கும் மகிழ்ச்சியே.
இது கடையில் காணக் கிடைக்காத‌ பொருள் ஆயிற்றே இமா.
கோபப் பறவையும்,கோபிக்காத‌ பறவையும் சூப்பர்.

இரண்டு பறவைகளும் ரொம்ப நல்லாயிருக்குங்க...
//angry bird கிடைக்காததால் angry//
ம்ம்.. :-)
நல்ல பதிவு... நல்ல அன்பளிப்பு.. மா

நட்புடன்
குணா

இமா... மாலேவில் இருந்த போது தான் இவை எனக்கு அறிமுகம். அங்கே குட்டீஸ் தொப்பி முதல் செருப்பு வரை ஆங்ரி பேர்ட் கேட்பார்கள். கடைக்கு போனா ட்ரெஸ் எல்லாம் இந்த டிசைனாவே இருக்கும். எனக்கு பிடிப்பதில்லை. இப்போ ஊருக்கு வந்தா இங்கும் அதுவே :P இங்கையும் அதிகம் பறக்குது. இப்போ குட்டீஸால எங்க வீட்டிலும் அதிகம் நடமாடுது. அழகாய் இருக்கு... உங்க பொம்மை. ஃபோர்க், பந்து... ம்ம்... கலக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீ அழகு அழகு பறவையே ,
என்னை சிரிக்க வைத்த பறவையே ,
உன் பெயர் கோபமா ?நம்பவில்லை நாங்களும் !
எங்கள் இம்மா சகலகலா விற்பனர் ,,சகலமும் செய்வார் !ஒவ்வொன்றும் அழகு ,,ஆசையாக இருக்குது @@@

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

;) கவிதை பாடிக் கருத்துச் சொன்ன அஸ்வதாவுக்கு என் அன்பு நன்றி. :-)

சொல்கிறேன் என்று திட்டக் கூடாது. நீங்களும் கொஞ்சம் அட்மின் போஸ்ட் பார்க்க வேண்டும். http://www.arusuvai.com/tamil/node/29116

காற்புள்ளி நட்ட நடுவில் தனியாக நிற்காது. இரட்டையாகவும் வராது.
கேள்விக்குறி வசனத்தின் இறுதிச் சொல்லுடன் கூடவே (இடைவெளியில்லாது) வரும்.
காற்புள்ளி, கேள்விக்குறி, ஆச்சரியக்குறி எதையும் சொல்லின் முதலெழுத்துப் போல் சேர்ப்பது தவறு.
@@@ - எனக்கும் தலை சுற்றுகிறது. ;)))

‍- இமா க்றிஸ்

//எனக்கு பிடிப்பதில்லை.// எனக்கும். ஏன் 'ஹாப்பி பர்ட்' என்று வைத்திருக்கக் கூடாது! கர்ர்...
//அழகாய் இருக்கு... உங்க பொம்மை.// ;))) நம்பிட்டேன் வனி. ;)

‍- இமா க்றிஸ்

//இரண்டு பறவைகளும்// ஒரே பறவைதான் குணா. :-)

நிகிலா... //எதை???// கொஞ்ச காலம் பொறுத்திருங்க, பதில் சொல்றேன். :-)

‍- இமா க்றிஸ்

கண்டு பிடிச்சிட்டேன். ஃபில்டர் ல‌ உள்ள‌ கேண்டிலை சரியா ?
அடுத்த‌ பொம்மை ரெடியாகுதா இமா

/இரண்டு பறவைகளும்// ஒரே பறவைதான் . :-) //
கோபிக்காத‌ பறவை என்று நிக்ஸனை சொன்னேன் இமா

//ஃபில்டர் ல‌ உள்ள‌ கேண்டிலை// அவ்வ்! அதை க்றிஸ் பத்திரமா எடுத்து வைச்சுட்டாங்க. எனக்குக் கிடைக்காது. இது வேற. காத்திருங்கள்.

ஒரே பறவை பதில் குணாவுக்கு. ஆமாம், நீங்கள் சொன்ன அர்த்தத்தில்தான் நானும் தலைப்பு வைத்திருக்கிறேன். :-)

‍- இமா க்றிஸ்

உங்கள் கோபப்பறவையின் கண்களில், கோபத்திற்கு பதிலாக‌ சந்தோசமே தெரிகிறது.
இமாவின் கையால் செய்தபிறகு அது எப்படி கோபகமாக‌ இருக்கும்?

//சின்னவர்கள் சந்தோஷம் சின்னப் பொருட்களில்தான். நாம் விலை கொடுத்து நல்லதாக என்ன வாங்கிக் கொடுத்தாலும் அவர்கள் மனதிற்குப் பிடித்தது கிடைத்தால் அதுதான் பெரிது// உண்மையிலும் உண்மை.

அன்பு இமா,

உங்க கலைக் கண்களுக்கு, ஸ்பூனும் ஃபோர்க்கும் கூட, பறவையாக மாறித் தெரிகிறது.

அழகு!

அன்புடன்

சீதாலஷ்மி

Enaku therindha breast milk athigamaga udhavum tips Enge pathivu seiyya vendum. How to create a blog? Naraiya peruku use agalam. Thank thaniya type pan a mudiyala. I have 5years old one n little one is 7months old.

Anbudan Kanchana Raja

ப்ளாக் பற்றி அட்மின் இங்க சொல்லி இருக்காங்க பாருங்க. http://www.arusuvai.com/tamil/node/29116

//tips// காப்பி பேஸ்ட் இல்லைல்ல! எதுவானாலும் முதல்ல சாக்கு சொல்லாம தமிழ்ல தட்டணும். :-) பிறகு... இங்க பொருத்தமான த்ரெட் ஏற்கனவே இருக்கும். தேடி அதுல போடலாம்.

இமா ஸ்கூலுக்கு கிளம்பியாச்சு. டாட்டா.

‍- இமா க்றிஸ்

Thamizhil type panna neram pothathu.en kutty ponnu vida matta.parakalam mudintha varai theriya paduthukiren.

Anbudan Kanchana Raja

//Thamizhil type panna neram pothathu.// முதல்லயே நினைச்சேன். டிஸ்கரேஜ் பண்ண வேணாம்னு சொல்லல. விட்டுருங்க.

கேள்வி, சந்தேகம்லாம்... தமிங்கிலம் பரவால்ல. டிப்ஸ்... முடிந்த வரை போடுறேன்னு தமிங்கிலத்துல போட வேணாம், ப்ளீஸ். முடிஞ்சா தமிழ்ல போடுங்க. இல்லாட்டா விட்டுரலாம்.

‍- இமா க்றிஸ்

//கோபத்திற்கு பதிலாக‌ சந்தோசமே தெரிகிறது.// ;)) அதற்குப் புருவம் வைக்க நினைத்து மறந்து போனேன். வைத்திருந்தால் கோபமாகப் பார்த்திருக்கும் அனு. ;)

//கலைக் கண்களுக்கு// ;))) அபூர்வமாக வந்து சிரிக்க வைக்கிறீங்க. நன்றி சீதா. :-)

‍- இமா க்றிஸ்

Kandipa vituduren imma avargale, neengal type panna copy,paste,discourage yenbathu tamizha aangilama illai tamingilama....

Anbudan Kanchana Raja

//neengal type panna copy,paste,discourage yenbathu tamizha aangilama illai tamingilama....//

உங்களுக்கு எப்படி தெரிகின்றது?

இங்கே ஆங்கில வார்த்தைகளை யாரும் பயன்படுத்தக்கூடாது என்பது விதியல்ல. தமிழில் டைப் செய்யுங்கள் என்பதை வேண்டுகோளாகத்தான் வைத்து இருக்கின்றோம். பேச்சுத் தமிழில் எழுதும்போது நாம் ஆங்கிலத்தில் பயன்படுத்தும் வார்த்தைகளை அப்படியேத்தான் எழுதுகின்றோம். இதில் எந்தத் தவறும் கிடையாது. தமிங்கிலத்தில் டைப் செய்யும் நீங்கள், தமிழில் டைப் செய்வதற்கு சிறப்பாக நேரம் ஒதுக்கத் தேவையில்லை. இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் எழுத்துதவி வசதி அல்லது நேரடியாக டைப் செய்யும் வசதியைக் கொண்டு அதே நேரத்திலேயே டைப் செய்ய இயலும். நீங்கள் முயற்சி செய்யவில்லை என்பதுதான் உண்மை. குழந்தை இருப்பதால் என்னால் டைப் செய்யவே முடியவில்லை. பதிலே கொடுக்கமுடியவில்லை என்று சொன்னால் அதில் அர்த்தம் உள்ளது. குழந்தை இருப்பதால் நான் தமிங்கிலத்தில்தான் பதில் கொடுப்பேன் என்று சொல்வது சமாளிப்பு மட்டுமே.

சம்பந்தமே இல்லாது அவரது ப்ளாகில் வந்து நான் எங்கே டிப்ஸ் கொடுப்பது என்ற கேள்வியை பதிவு செய்து இருக்கின்றீர்கள். அவரது ப்ளாகிற்கு சம்பந்தம் இல்லாத பதிவு என்ற போதிலும் அவர் உங்களுக்கு பொறுமையாக பதில் கொடுத்து இருக்கின்றார். அதற்காகவாவது நீங்கள் இன்னும் சற்று நாகரிமாக பதிவு கொடுத்து இருக்கலாம்.

அன்பு காஞ்சனாவுக்கு

என்னால் முழுவதாகத் தூய தமிழில் தட்ட இயலும் சகோதரி. என் தமிழ் பலருக்குப் புரிவதில்லை என்பதை அவர்கள் கேட்கும் கேள்விகளின் மூலம் அறிந்திருக்கிறேன். அறுசுவையில் குறிப்புகள் உட்பட, பல இடங்களில் படிப்பவர்களுக்குப் புரியட்டும் என்று சாதாரணமாகப் பேசுவது போல தட்டி வைக்கிறேன். மன்னிக்க வேண்டும்.

நீங்கள் தமிங்கிலத்தில் தட்டுவதோ ஆங்கிலத்தில் தட்டுவதோ, பிரதி செய்து இங்கு ஒட்டுவதோ, சுயமாக எழுதுவதோ அல்லது வேறு எதுவானாலும் அது உங்கள் இஷ்டம். சந்தோஷமாகச் செய்யுங்கள். உங்களுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

நீங்கள் இந்த இடுகையின் கீழ் உங்கள் கேள்வியை வைத்திராவிட்டால் நானும் பதில் சொல்லும் தேவை வந்திராது. மீண்டும் மன்னிப்பைக் கோரி விடைபெறுகிறேன்.

‍- இமா க்றிஸ்