எந்த வகை அரிசி உடம்பிற்கு நல்லது ?

அருசுவை தோழிகளுக்கு வணக்கம் ,

நமது உடம்பிற்கு polished அரிசி(Tamilnadu rice) நல்லதா அல்லது
unpolished அரிசி(Kerala rice ) நல்லதா ?

நிச்சயம் பாலிஷ் பண்ணாத அரிசி தான் நல்லது. இமா ஸ்டைலில் “எதையும் அளவோடு சாப்பிடணும்” ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அவ்வ்! கேரளாவும் தமிழ்நாடும் மாநிலங்கள் என்று நினைச்சேன்! தமிழ்நாட்டாருக்கு தமிழ்நாட்டு அரிசியும் கேரள மக்களுக்கு கேரளா ரைஸும் பொருந்தும். என் போன்றோருக்கு மட்டக்களப்பு அரிசிதான் சூப்பர் டேஸ்ட். ;D

ஆரோக்கியத்திற்கு... நீங்கள் சொன்ன இரண்டாவது, முதலாவதை விடப் பரவாயில்லை என்று சொல்லலாம். நல்லது என்று சொல்ல மாட்டேன். அப்படியே நான் பேச நினைத்ததை வனி மேல பேசி இருக்காங்க. அதையும் படிச்சுருங்க. நன்றி வனி. ;) நல்லது என்று இரண்டாவை அதிகம் சாப்பிட்டால் கெட்டது தான் நடக்கும்.

‍- இமா க்றிஸ்

இமா.. தமிழ்நாட்டிலும் முன்பெல்லாம் கைக்குத்தல் அரிசி தான் அதிகம். அது பாலிஷ் பண்ணாத அரிசி தான். இப்போ மக்கள் ஷோக்கா விரும்புறாங்க... அதனால் பாலிஷ் பண்ணி கருப்பு நீக்கி, வைரம் போல கட்டு, கர்வ் எல்லாம் கொடுத்து வருது ;) எனக்கும் கேரள அரிசி விருப்பமே.. அவங்க ஊர் பக்க உணவோடு சாப்பிட்டா. நம்ம ஊர் பக்க உணவுக்கு அது செட் ஆகுறதில்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கைக்குத்தல் அரிசியின் சுவையே தனிதான். செரிமானம் ஆக‌ சற்று நேரம் எடுக்கும். அதனால் சீக்கிரம் பசி எடுக்காது. பழக்கமில்லாதவர்கள் சாப்பிடும் போது சிலருக்கு அஜீரண‌ தொந்தரவு வரலாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்