பூங்கொத்து

தேதி: August 7, 2014

5
Average: 4.3 (3 votes)

 

மொத்தமான நரம்பு
தெர்மோகோல் பால்ஸ்
கோல்டன் மணிகள்
மெல்லிய கம்பி
விரும்பிய நிறத்தில் பூ இதழ்கள்
பச்சை நிற டேப்

 

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
நான்கு நரம்புகளை எடுத்து ஒன்றாகச் சேர்த்து, அதன் அடிப்பக்கத்தை மட்டும் கம்பியால் நெருக்கமாகச் சுற்றவும்.
சுற்றிய கம்பி தெரியாதவாறு அதன் மீது பச்சை நிற டேப்பை சுற்றி ஒட்டிவிடவும்.
டேப் சுற்றிய பகுதியின் மேல் புறமுள்ள 4 நரம்புகளில் ஒன்றில் ஒரு பூ இதழ், ஒரு தெர்மோகோல் பால் என மாற்றி மாற்றி 4 பூ இதழ்கள் வரும் வரை கோர்க்கவும். கடைசியாக ஒரு கோல்டன் மணியைக் கோர்க்கவும். (ஒரு நரம்பில் 4 பூ இதழ்கள், 4 தெர்மோகோல் பால்ஸ், ஒரு கோல்டன் மணி இருக்கும்).
கோல்டன் மணி கோர்த்த பிறகு மணி வெளியில் வராமல் இருப்பதற்காக நரம்பின் நுனியில் முடிச்சுப் போட்டு கோல்டன் மணியின் உள்ளே சொருகிவிடவும். இதே போல் மீதமுள்ள மூன்று நரம்புகளிலும் கோர்த்துக் கொள்ளவும்.
உங்களுக்கு தேவையான எண்ணிக்கையில் நரம்புகளில் பூக்களைக் கோர்த்து, அவற்றை ஒன்றாக சேர்த்து பச்சை நிற டேப் சுற்றி ஒட்டிவிடவும்.
வால் ஹேங்கிங் அல்லது ஃப்ளவர் வாஸில் வைக்க, எளிதாகச் செய்யக் கூடிய அழகான பூங்கொத்து தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சூ..ப்பர் டீம். ஈஸி க்ராஃப்ட். அழகா இருக்கு.

‍- இமா க்றிஸ்

சிம்பிளா அழகா இருக்கு...

கலை