தேதி: August 28, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பச்சரிசி - அரை கப்
புழுங்கலரிசி (இட்லி அரிசி) - அரை கப்
துவரம் பருப்பு - கால் கப்
கடலைப்பருப்பு - கால் கப்
உளுத்தம் பருப்பு - கால் கப்
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி - ஒரு பெரிய துண்டு
பூண்டு - 4 (அ) 6
தேங்காய் - ஒரு மூடி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயப் பவுடர் - அரை தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 15
உப்பு - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு
தாளிக்க - நல்லெண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.

அரிசி வகைகளைத் தனியாகவும், பருப்பு வகைகளைத் தனியாகவும் குறைந்தது இரண்டு மணி நேரம் வரை ஊற வைக்கவும். (பருப்பு வகைகளை ஹாட் பாக்ஸில் ஊற வைத்தால் நன்றாக ஊறிவிடும்).

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும். சிறிதளவு தேங்காயைப் பொடியாக (பல் பல்லாக) நறுக்கிக் கொள்ளவும். மீதமுள்ள தேங்காயைத் துருவி வைக்கவும்.

அரிசி மற்றும் பருப்பு வகைகள் ஊறியதும் நன்றாகக் களைந்துவிட்டு அரிசியைத் தனியாகவும், பருப்பு வகைகளைத் தனியாகவும் அரைத்துக் கொள்ளவும். (பருப்பை மிகவும் மசிய (நைசாக) அரைக்க வேண்டாம்). சிவப்பு மிளகாயுடன் உப்பு, தோல் சீவிய இஞ்சி, தோலுரித்த பூண்டு, சீரகம், பெருஞ்சீரகம், பெருங்காயம், சிறிது கறிவேப்பிலை மற்றும் சிறிது கொத்தமல்லித் தழை சேர்த்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். அத்துடன் சிறிது கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து வதக்கவும்.

அரைத்து வைத்துள்ள அரிசி மாவுடன் பருப்பு மாவு, மிளகாய் விழுது சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். அதனுடன் துருவிய தேங்காய், வதக்கி வைத்திருக்கும் வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்துக் கலந்து கொள்ளவும். (உப்பு, உறைப்பு சரி பார்த்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் மேலும் சிறிது உப்பும், சிவப்பு மிளகாய்ப் பொடியும் சேர்த்துக் கொள்ளலாம்). மீதமிருக்கும் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழையையும் பொடியாக நறுக்கி மாவுடன் சேர்த்துக் கலக்கவும்.

தோசைக் கல்லை நன்றாகக் காயவிட்டு, கலந்து வைத்துள்ள அடை மாவை எடுத்து ஊற்றவும். அதன் மேல் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, சிறு பற்களாக நறுக்கி வைத்துள்ள தேங்காயைத் தூவி, இரண்டு பக்கமும் சிவக்க வேகவிட்டு எடுக்கவும்.

சுவையான அடை தயார். தொட்டுக் கொள்ள அவியல், சர்க்கரை, மிளகாய்ப் பொடி போன்றவை பொருத்தமாக இருக்கும். விரும்பினால் சூடான அடையின் மீது சிறிது வெண்ணெய் அல்லது சீஸ் தடவி பரிமாறலாம்.

சீரகம், பெருஞ்சீரகம், பூண்டு இவையெல்லாம் சேர்ப்பதால் நன்றாக ஜீரணமாகிவிடும். இவற்றின் வாசனையும் தனியாகத் தெரியாது.
Comments
சீத்தாம்மா,
சீத்தாம்மா,
அடை சூப்பர்,
எங்க அம்மாவும் இதே போல தான் செய்வாங்க....
சில டைம் சேஞ்சுக்காக பரங்கி பிஞ்சு தேங்காய் போல பல்லு பல்லா கட் பண்ணி சேர்ப்பாங்க.......
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
சீதா அம்மா
தோசை ரொம்ப நல்லா இருக்கு. கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.
அம்மா நான் துவையல் செய்ய சொல்லி தர சொல்லி இருந்தனே.
எனக்கு பீர்க்கங்காய், வல்லாரை இதுலலாம் துவையல் செய்ய கத்து குடுங்க.
நான் செய்ற துவையல் 2 இல்லனா 4 நாள்ல கெட்டுடுது. கடைல விக்கறது மட்டும் எப்டி 2 3 மாசம் வரை கெடாமல் இருக்கு?
அது மாறி துவையல் செய்ய சொல்லி குடுங்க.
எல்லாம் சில காலம்.....
சீதாம்மா
நலமா ...?? சார் எப்படி இருக்காங்க....
ரெசிபி சிம்பிளி சூப்பர்ப்... நானும் அதே தான் சொல்ல போறேன் அம்மவும் இதே முறை ல தான்ம்மா செய்வாங்க பட் ரொம்ப நாள் ஆய்டுச்சு இந்த அடை சாப்பிட்டு ... உங்க ரெசிபி பார்த்தாச்சு ல இந்த வீக் எண்ட் ஏ செய்ய சொல்லிடுறேன்
தோசை.... வடாம், இன்னும் சில ரெசிப்பிலாம் பெங்களூருக்கு மட்டும் தான் பார்சல் ஆ.? சென்னைல பக்கதுலயே இருக்குறவங்களுக்கு இல்லையா ..;)... ;)
அக்கா மட்டும் பார்த்தாங்க நான் செத்தென் எஸ்கேப்.... :)
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
kani
Een een een?! Enakku parcel koduthuttu dhaan maruvela paarkaraanga seetha. 3:) andha akkaa naanillai... seetha magal dhaanaakkum. Avangaluku dhaan vidha vidhamaa senju kudukaranga madam.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி அக்கா
அக்கா கவலையே படாதீங்க சீதாம்மா ஒரு நாள் நமக்கு புடிச்ச ரெசிபிலாம் செய்து பார்சல் பண்ண சொல்லுவோம்... அந்த அக்கா டெய்லி சீதாம்மா சமையல் சாப்புடுறாங்களே நாமலும் ஒரு நாள் சாப்புடுவோம் ..:
இதுக்கு சீதாம்மா தான் பதில் சொல்லனும் ...;)
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
சீதாம்மா
பார்க்கவே சூப்பரா இருக்கு. நான் அடை சுட்டா தொண்டை விக்கி போய் சேர்ந்துடுவோம். இது போல சுட்டு பார்க்கிறேன்.
Be simple be sample
மெது அடை
அன்பு சுபி,
ட்ரெடிஷனல் குறிப்புகளை அனுப்பலாம்னு சிம்பிளான குறிப்புகளாக அனுப்பினேன்.
இதோட வாழைப்பூ சேர்த்து அரைக்கலாம்.
சுரைக்காயையும் நறுக்கிப் போட்டு, அரைச்சு செய்வதுண்டு.
பதிவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.
அன்புடன்
சீதாலஷ்மி
பாலநாயகி
அன்பு பாலநாயகி,
பீர்க்கங்காய் துவையல் ரெசிபி இன்னும் 2 அல்லது 3 வாரத்தில் அனுப்புகிறேன்.
துவையலில் சிவப்பு மிளகாய் வறுத்து சேர்த்து, கடுகு உளுத்தம்பருப்பு, பெருங்காயம் பொரிச்சு, சேர்த்து அரைக்கலாம்.
தாளிப்பதற்கு நல்லெண்ணெய் உபயோகிங்க.
கடையில் விற்கும் ஊறுகாயில் ப்ரசர்வேடிவ் சேர்ப்பாங்க. அதனால்தான் கெட்டுப் போகாமல் இருக்கும்.
துவையல் அரைச்சதும், (கெட்டியாக அரைச்சு), ஃபிரிஜ்ஜில் வச்சுடுங்க.
தேவைப்படும்போது, தேவையான அளவு மட்டும், ஈரமில்லாத ஸ்பூன் உபயோகிச்சு, எடுத்து பரிமாறுங்க. மீதமுள்ள துவையல் கெட்டுப் போகாமல் இருக்கும்.
பதிவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.
அன்புடன்
சீதாலஷ்மி
கனிமொழி
அன்பு கனிமொழி,
நலமா, பார்த்து நாளாகிடுச்சு.
பெங்களூரில்தான் இதெல்லாம் செய்தேன். இப்ப மகளும் ஆர்வமாக புகைப்படம் எடுக்கிறார்:)
சென்னையில எதுக்கு பார்ஸல்? வீட்டுக்கு டைரக்ட் விசிட் வந்துடுங்க.
அன்புடன்
சீதாலஷ்மி
வனி
அன்பு வனி,
மகள் ஹெல்ப் பண்றதால, ஏதோ நானும் அறுசுவையில் இப்ப ஆக்டிவ் ஆக இருக்கேன். :)
உங்க ரெசிபிகள் எல்லாம் எங்கே?
அன்புடன்
சீதாலஷ்மி
கனிமொழி
அன்பு கனிமொழி,
அடுத்த கெட் டு கெதரில் நாமே சமைத்து, நாமே சாப்பிடுவோம், என்ன சொல்றீங்க?
அன்புடன்
சீதாலஷ்மி
ரேவதி
அன்பு ரேவதி,
இருந்தாலும் உங்க நகைச்சுவைக்கு ஒரு அளவே இல்லையாப்பா:):)
பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி. இந்த முறையில் செய்து பாருங்க. தொண்டை அடைக்காது. அடை சாஃப்ட் ஆக இருக்கும். உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.
அன்புடன்
சீதாலஷ்மி
lalitha
hi frds i am 33 year old 2009 i born 1st baby in operation. now i am pregt this also operation or normal. because i wnat to feel normal dele.If its possible means tell me the cond and doctors.I am teacher in salem my email id lalithavadivelu@gmail.com
lalitha
helo i am lalitha from salem make a frd
சீதாம்மா
சீதாம்மா .. நீங்களே சொல்லிட்டிஙக ல ஜாமாய்ச்சுடலாம்,, அண்ணாக்கும் வேலை மிச்சம் ல .. ஐடியா நல்லா இருக்கு ... ஆனா அடுத்த கெட் டூ கெதர் :)..???
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்