படர்தாமரை

என் தங்கை pragnant இருக்கும் போது 9 மாதத்தில் படர்தாமரை வந்தது உடம்பு முழுக்க இப்ப குழந்தை பிறந்து 4 மாதம் ஆகிறது இன்னும் போகலை அரிச்சி அரிச்சி புண்ணா போகுது ஸ்கின் டாக்டர்கிட்ட காமித்து எவ்ளோ க்ரீம் சோப் யூஸ் பன்னினா குறய மாட்டுது இப்ப ஹோமியோபதி doctor மாத்திரை கொடுத்து இருக்கர் 8,9 மாத்ததிலிருந்து க்ரீம் soap யூஸ் பண்ணினா எப்ப்டி அதை போக்குவது பால்கொடுக்கிறா குழந்தைக்கும் கொஞ்சம் லேசா வருது இதை எப்படி நீகுவது சொல்லுங்கள்

பர்வின் ஸ்கின் டாக்டர் காட்டுங்க குழந்தைக்கும் பரவுதுனா லேட் பன்னாதீங்க உங்க தங்கை எந்த ஊர்லாயிருக்காங்க

Nalla acupuncture doctor kita katunga kandipa sari agum , ulla irukindra toxins dhan veliya padarthamaraya vandhuruku so adha marundhu potu ulla thaladhinga kandipa sari agum.

Regards
Mani

படர்தாமரையை இல்லாமல் செய்ய சித்த மருத்துவத்தில் உள்ள வழிகள்

1)சீமை அகத்தி இலையை அரைத்து தேங்காய் எண்ணெய்யில் நன்றாக கலந்து பூசலாம்.

2)புங்கம் விதையை அரைத்து பூசலாம்.

3)உள்ளி (பூண்டை) அரைத்து தேன் சேர்த்து பூசலாம்.

4)அருகம்புல்லுடன் மஞ்சளை சேர்த்து அரைத்து பூசலாம் .

5)ஜாதிக்காயை சாதிக்காயை தேனுடன் சேர்த்து அரைத்து பூசலாம்.

6) சந்தனக்கட்டையை தேசிக்காய் சாறு எலும்பிச்சம்பழ சாற்றுடன் சேர்த்து அரைத்து பூசலாம்.

7) துளசி இலையை உப்புடன் சேர்த்து அரைத்து பூசலாம்.

8) கருவாப்பட்டை ( லவங்கப்பட்டை) தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து பூசலாம் .

9)யூகலிப்டஸ் தைலம் பூசலாம்.

10)சரக்கொன்றைத்துளிர்,புளியம்துளிர்,மிளகு ஆகியவற்றை சம அளவு எடுத்து அதனை அரைத்து பூசலாம்.

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

மேலும் சில பதிவுகள்