அறுசுவையில்

ஹலோ அட்மின் அண்ணா,

எப்படியிருக்கீங்க? அண்ணி எப்படியிருக்காங்க?

அறுசுவையில் ஏதாவது ஒரு குறிப்புகளை இந்த http://www.arusuvai.com/tamil/
forum/no/4526 லிங்க்கில் போய்ப்பார்க்கவும் என்றால் எனக்கு இப்படி வருகிறது.
நீங்கள் குறிப்பிட்ட பக்கம் கிடைக்கவில்லை. பக்கம் கிடைக்கப்பெறாமைக்கு கீழ்கண்டவற்றில் ஏதேனும் ஒன்று காரணமாக இருக்கலாம்.

பக்கத்தின் முகவரி தவறாக இருக்கலாம்.

குறிப்பிட்ட பக்கம் தற்போது நீக்கப்பட்டு இருக்கலாம்.

இன்னும் சேர்க்கப்படாத பக்கமாக இருக்கலாம்.

எந்த லிங்க்கை போய் ஒபென் செய்து பார்த்தாலும் எனக்கு அப்படியே வருகிறது. இதற்கு என்ன காரணம் என்று சொல்லுங்கள்?

அன்புடன்,
மணி

அன்பு சகோதரிக்கு,

அனைவரும் இங்கு நலம். நன்றி.

நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்சனை பொதுவான பிரச்சனையாக தெரியவில்லை. அந்த பக்கத்தினை திறந்து பார்த்தேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. வேறு யாருக்கும் பிரச்சனை இருக்கின்றதா என்பதும் தெரியவில்லை. எதற்கும் page refresh செய்து பாருங்கள். ஒருமுறை உங்கள் cookies, browser cache எல்லாவற்றையும் clear செய்துவிடுங்கள். Cache problem ஆக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். எங்கள் பக்கம் இருந்து எதையும் கட்டுப்படுத்தவில்லை. அனைத்துப் பக்கங்களையும், அனைவரும் பார்வையிடுமாறே செய்திருக்கின்றோம்.

அட்மின் அவர்களே எனக்கு பிடித்ததும்பிடிக்காததும் என்ற பதிவில் பதிவு போட ஆசை.ஆனால் முதல் பக்கத்தில் பதிலளி ஆப்ஷன் உள்ளது.கடைசி(82) அதாவது மூன்றாவது பக்கம் சென்று பதிவு போடலாம் என்றால் உள்நுழையவும் அல்லது பெயர்பதிவு செய்ய வேண்டும் என்று வருகிறது.தளத்தில் பிரச்சினையா அல்லது வேறு என்ன பிரச்சனை என்று கூறுங்கள்.

மறுபடியும் லாகின் பண்ணுங்க.. எனக்கும் அந்த பிரச்சனை வரும்..

"The challenge is not to manage time, but to manage ourselves." --Steven Covey

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

எப்படியோ ட்ரை செய்து பதிவை போட்டு விட்டேன்.நன்றி தங்களின் பதிலுக்கு.இதுக்கு பதில் போடறதுக்கே எனக்கு கொஞ்ச நேரம் ஆச்சு ஏனென்றால் உங்க பதிவையே இப்பதான் பார்க்கமுடிந்தது.

ஒரு சின்ன ஹெல்ப் எங்களை மாதிரி வெளியூரில் இருப்பவர்களுக்கா நம்ம அருசுவையில் ரிசாட்ஸ் பற்றி அதன் வெப்சைட்ஸ் இந்த மாதிரி எல்லா டிடெயில்ஸ் நல்ல ஹோட்டல்ஸ் அக்காமடேஷன் பற்றி தெரிந்துகொள்ள மாதிரி போட்டால் நன்றாக இருக்கும்.

மேலும் சில பதிவுகள்