தேதி: January 10, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பீட்ரூட் - 2 கப்
பால் பவுடர் - 4 தேக்கரண்டி
சர்க்கரை - ஒரு கப் (சுவைக்கேற்ப)
ஏலக்காய்த் தூள் - கால் தேக்கரண்டி
நட்ஸ் - சிறிது
நெய் - 2 தேக்கரண்டி
பீட்ரூட்டை வேக வைத்து அரைத்துக் கொள்ளவும். மைக்ரோவேவ் பாத்திரத்தில் அரைத்த பீட்ரூட்டைப்போட்டு, நெய் சேர்த்து 2 நிமிடங்கள் மைக்ரோவேவ் ஹையில் வைத்து எடுக்கவும்.

பிறகு அதனுடன் பால் பவுடர் சேர்த்து, மீண்டும் 5 லிருந்து 6 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

நெய் தனியாகப் பிரிந்து வரும் வரை வைத்திருக்கவும்.

அதனுடன் சர்க்கரை, ஏலக்காய்த் தூள் மற்றும் நட்ஸ் சேர்த்துக் கலந்து, அல்வா பதம் வரும் வரை, 2 லிருந்து 3 நிமிடங்கள் மைக்ரோவேவில் வைத்தெடுக்கவும்.

சுவையான பீட்ரூட் அல்வா தயார்.

Comments
நித்தி
நித்தி கலர்ஃபுல்லா இருக்கு பார்க்க.. டேஸ்டு சூப்பரா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.. வாழ்த்துகள் நித்தி..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
நித்யா
நித்யா. செம கலர்புல்.சூப்பரா இருக்கு
Be simple be sample
நித்யா
பார்க்கவே சூப்பரா இருக்கு!!,செய்து பார்க்கிறேன்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.