தஹி பிந்தி

தேதி: January 8, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

வெண்டைக்காய் - அரைக் கிலோ
பச்சை மிளகாய் - 6
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
தயிர் - ஒரு கப்
எண்ணெய் - கால் கப்
உப்பு - தேவையான அளவு


 

இஞ்சி மற்றும் கொத்தமல்லித் தழையைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களையும் தயாராக வைக்கவும்.
மிக்ஸியில் இஞ்சி, சீரகம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதினை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அதனுடன் தயிர், மஞ்சள் தூள் மற்றும் உப்புச் சேர்த்துக் கலக்கவும்.
வெண்டைக்காயின் அடி மற்றும் நுனிப் பகுதியை நீக்கி விட்டு, நீளவாட்டில் சரிபாதியாக நறுக்கிக் கொண்டு, அதில் கலந்து வைத்துள்ள மசாலாவை நிரப்பவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் மசாலா நிரப்பிய வெண்டைக்காய்களை மெதுவாக ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும்.
வெண்டைக்காய் மொறுமொறுப்பானவுடன் அடுப்பில் இருந்து இறக்கிப் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பிடிச்சிருக்கு ஹேமா. அடுத்த தடவை வெண்டைக்காய் கிடைக்கும் போது ட்ரை பண்ணுவேன்.

‍- இமா க்றிஸ்