தேதி: January 30, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஜீனத் அரேபியா பேகம் அவர்கள் வழங்கியுள்ள இறால் கொழுக்கட்டை குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஜீனத் அவர்களுக்கு நன்றிகள்.
அரிசி மாவு - 100 கிராம்
பொரி அரிசி மாவு - 50 கிராம்
இறால் - 50 கிராம்
வெங்காயம் - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
உப்பு - தேவையான அளவு
துருவிய தேங்காய் - ஒரு கப்
எண்ணெய் - 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - 15 கிராம்
புதினா - 15 கிராம்
பொரி அரிசி மாவிற்கு வெறும் வாணலியில் புழுங்கல் அரிசியை பொரியும் வரை வறுத்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பொரி அரிசி மாவு தயார்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி இறாலை வதக்கவும். இறாலுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறவும்.

பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், மல்லி, புதினா, துருவிய தேங்காயை சேர்த்து மேலும் 3 நிமிடம் கிளறவும். இறால் விழுது தயாரானவுடன் அதனை ஆறவிடவும்.

ஆறியவுடன் அதில் அரிசி மாவு மற்றும் அரைத்த பொரி அரிசி மாவினை சேர்த்து தேவையான தண்ணீர் தெளித்து பிசையவும்.

இதை கொழுக்கட்டையாக பிடித்து 15 நிமிடம் வேக வைக்கவும்.

வெந்ததும் எடுத்து பரிமாறவும். சுவையான இறால் கொழுக்கட்டை தயார்.

Comments
Balanayagi
இறால் கொலுக்கட்டை வித்தியாசமா இருக்கு, எல்லா படங்களும் நல்லா வந்திருக்கு,
வாழ்த்துக்கள் கிச்சன் குயின்
நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..
அன்புடன்
Sheela
பால
இறால் கொழுக்கட்டை வித்தியான குறிப்பு.. ரொம்ப தெளிவா செய்திருக்கீங்க.. படங்கள் பளீச்.. வாழ்த்துகள் சமையல் ராணி..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
ஷீலா
நன்றிகள் பல. யாருமே ஹெல்ப்க்கு வரல. என் கேமராவும் கையுமே எனக்கு உதவி.
எல்லாம் சில காலம்.....
ரேவ்'ஸ்
நன்றிகள் பல. ஃபோட்டோ எடுக்க யாருமே ஹெல்ப்க்கு வரல. நானே நான் சொந்த முயற்சில பண்ணது. (எப்ப பாரு கேமராவோட சுத்திட்டு இருக்கனு திட்டு வாங்கறது வேற விஷயம்)
எல்லாம் சில காலம்.....