தோழிகளே கொஞ்சம் உதவுங்கள்

இந்த 5 நாளாக என் பையன்க்கு திடிர் திடிருனு காய்ச்சல் வருகிறது..டாக்டரிடம் காட்டினேன் மருந்து மட்டும் போதும் என்று சொல்லி விட்டர்...காய்ச்சல் வந்து இன்றுடன் 5 நாள் ஆகி விட்டது...இருமுறை ஹஸ்பிடல் சென்று வந்தேன்..எனக்கு மிகவும் பயமாக உள்ளது...எப்போதும் காய்ச்சல் வந்தால் 2 நாளில் சரியாகிவிடும் ஆனால் இந்த முறை இன்னும் சரியாகவில்லை...சாப்பாடு எதும் சரியாக சாப்பிடவில்லை...

எந்த‌ டைம்ல‌ காய்ச்சல் வருது திவ்யா. எதுக்கு பயப்படுறீங்க‌. பிளட் டெஸ்ட் எடுத்து பார்த்துடுங்களேன். நிம்மதியா இருக்கலாம்ல‌. டாக்டர் கிட்ட‌ நீங்களே கேட்டு எடுக்கலாம்.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

நான் டாக்டரிடம் கேட்டேன் ரத்தம் டெஸ்ட் பண்ணி பாக்காலம் என்று அதற்கு இப்போ அவசியம் இல்லை என்று சொல்லி விட்டார்..மதியம்,மாலை,நடு இரவுயில் வருகிறது..மருந்து குடுப்பதற்க்குள் எனக்கு பாதி பிரணம் போய்விடுகிறது....

குழந்தை இப்போது நலமா? காய்ச்சல் இருக்கா இன்னும்? எந்த காய்ச்சலுக்கும் 5 நாள் கழித்து தான் ரத்தபரிசோதனை பண்ணுவாங்க. அதனால் பயம் வேண்டாம்... அதுக்கு முன்னாடி அதுவே சரியாகிடும்னு நம்புவோம். டாக்டர் பார்த்து சந்தேகப்பட்டிருந்தா கட்டாயம் ப்லட் டெஸ்ட் பண்ண சொல்லிருப்பாரே... அதனால் பயப்படாதீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இப்போது பாரவயில்லை வனி அக்கா..காய்ச்சல் குறைந்து கொண்டு வருகிறது...மிகவும் சோந்து போய் உள்ளான்....இட்லி மட்டும் சாப்பிடுகிறான்..அரிசி கஞ்சி குடுத்தால் வேண்டாம்னு சொல்கிறான்...நான் மிகவும் பயந்துவிட்டேன்..நாங்க இருக்கும் ஏரியாவில் வைரஸ் காய்ச்சல் பரவுவாதாக சொன்னார்கள்...

பயப்பட வேண்டாம், குறைய ஆரம்பிச்சுட்டுல்ல. பொதுவா சளி பிடிச்சாலே பிள்ளைகள் சாப்பிடாது. காய்ச்சலும் இருந்தா கேட்கவே வேண்டாம் தானே? ரசம் வெச்சு கொடுத்து பாருங்களேன்... இந்த நேரம் வாய்க்கு சுவையா இருக்கும். பருப்பு ரசம், அல்லது வெறும் ரசம் (நீங்க இதை என்னவென்று சொல்வீங்க தெரியல. புளி தண்ணி மட்டும் கரைச்சு மிளாகு சீரகம் பூண்டு தட்டி போட்டு வைப்பாங்க) கூட கொடுக்கலாம். மிளகு இருப்பதால் சளி நேரம் நல்லா இருக்கும் இதமா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நாங்களும் அதை ரசம் என்று தான் சொல்லுவோம்..இன்று செய்து குடுத்து பாக்கிறேன் வனி அக்கா..

பையன் எப்படி இருக்கான்? சாரிப்பா என்னால் எதுவும் பதிவிடமுடியவில்லை.சரியாயிடும்.பிள்ளைங்களுக்கு எதாவது ஒன்னுன்னா ஒண்ணுமே பண்ணமுடியாது கவலையாயிருக்கும்.ரசம் கொஞ்சம் liquid ட கொடுப்பா.

அன்பு தோழி. தேவி

Ipothu paravala paiyan ku fever vituduchu cold and cough dhan continuous ah irruku..nanum tonic thanthuitu irrukan..devi akka ipothu dhan nan intha pathivai parthithen..kutty paiyan epadi irrukan...ashvath kurumbu panarana...ipo enga irrukinga..ungaluku udambu epadi irruku...

k pa.ne pathil podalayenu parthute irunthen.paiyan nallarukan. pani time athan cold cough nikka late agum.ashvath kurumpu pannitu than irukan.udampu paravalla but back pain iruku. mamiyar vitla iruken...

அன்பு தோழி. தேவி

மேலும் சில பதிவுகள்