தேதி: July 27, 2006
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
குறைந்த நேரத்தில், எளிதாய் தயாரிக்கக் கூடிய சுவையான டைமண்ட் கேக் (பிஸ்கட்) செய்முறை.
ரவா - அரை கப்
மைதா - 1 1/2 கப்
முட்டை - 2
ஏலக்காய் - 3
சீனி - அரை கப்
டால்டா - அரை கப்
எண்ணெய் - ஒரு கப்
உப்பு - கால் தேக்கரண்டி
மேலே கொடுத்துள்ளப் பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும். ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும். டால்டாவை உருக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ரவா, மைதா இரண்டையும் சலித்து கொட்டவும்.

அதில் முட்டைகளை உடைத்து ஊற்றவும். அதிலேயே சீனி, உருக்கின டால்டா, உப்பு, பொடித்த ஏலக்காய் அனைத்தையும் சேர்க்கவும்.

பின்னர் அவை அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து நன்கு பிசைந்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வரவும்.

ஒரு தட்டை திருப்பிப் போட்டு, பிசைந்த மாவு உருண்டையை அதில் வைத்து தட்டையாக தட்டிக் கொள்ளவும்.

பின்னர் அதை கத்தியால் டைமண்ட் வடிவில் சிறு சிறு வில்லைகளாக வெட்டிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெட்டி வைத்த வில்லைகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்து ஆறவிட்டு சாப்பிடவும். இந்த கேக் மிகவும் மொறுமொறுப்பாக இருக்கக் கூடாது.

Comments
அருமை
கேக் செய்து பார்த்தேன். மிக விரைவில் செய்ய முடிந்த எளிதான இனிப்பாக இருந்தது. சுவையாகவும் இருந்தது. கப் என்ற அளவை கிராம் கணக்கில் எழுதினால் எளிதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
god is my sheperd
thanks
hi i tried this one and it came out very well, thanks for this recipe.
Yenaku romba pidicha dish
Yenaku romba pidicha dish ithu. Kandippa try pannuven.