குழந்தையின்

தோழிகளெ
நான் வேலைக்கு செல்வதால் என் 1 வயது குழந்தையை என் மாமனார் பார்த்து கொள்கிறார். அவன் பிறக்கும்பொழுது நல்ல‌ நிறம் ஆனால் போக‌ போக‌ நிறம் குறைந்தது. என் மாமனார் பகலில் வெளியிலே தான் என் குழந்தயை வைத்து இருகிறார். இதனால் அவன் கண், நெற்றி எல்லாம் சுருக்கம் விழுந்தது போல் உள்ளது. அவரிடம் வெயிலில் அதிக‌ நேரம் இருக்க‌ வேண்டாம் என்ட்ரு சொல்லி பார்த்து விட்டென். ஆனால் அவர் வெளியில் இருந்தால் தான் அழுகாமல் இருக்கிரான் என்கிரார். ஆனால் என் குழந்தை நாளுக்கு நாள் அதிகம் கருத்து கொண்டு போகிறான் இதை எப்படி சரி செய்வது. குழந்தைக்கு முகத்தில் என்ன‌ பொடுவது அவனை பார்க்கவே சங்கடமாக‌ உள்ளது. எல்லோரும் திட்டுகிரார்கள். குழந்தை ஏன் இப்படி ஆகி விட்டான் என்று. அவன் சருமத்தை எப்படி பாதுகாப்பது

குழந்தை வளர‌ வளர‌ கலர் மாறும். அது பற்றி கவலை வேண்டாம்.உங்கள் குடும்பத்தில் யாராவது கலர் கம்மி என்றால் இவனும் கலர் மாற வாய்ப்புண்டு.
மேலும் வயதான‌ மாமனார் பார்த்துகொள்கிறார் என்றால்,அதற்கு கொடுத்துவைத்திருக்க‌ வேண்டும்

''வாழ்வின் எந்த பிரச்சனையும் உங்களை பாதிக்கவே முடியாது‍_ நீங்கள்
அனுமதித்தால் தவிர‌.

குழந்தை கலர் வெய்யிலால் போகுதுன்னு எனக்கு தோணல. எண்ணெய் பசை குறைவா இருந்தா கூட இது போல சுருக்கம் வரும். தேங்காய் எண்ணெய் தேய்க்கலாம். அல்லது குழந்தை மருத்துவரிடமே கேட்டு ஒரு நல்ல மாய்ச்சுரைசிங் லோஷன் வாங்கி பயன்படுத்தலாம். நிச்சயம் தாங்க முடியாத வெய்யிலில் மாமனார் குழந்தையை வைத்திருக்க வாய்ப்பில்லை. அவரே தாங்க மாட்டார் தானே? வயதானவர் பிள்ளை அழுதால் வேறு வழி இல்லை... எதாவது வேடிக்கை காட்ட தான் வேண்டும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//குழந்தைக்கு முகத்தில் என்ன‌ பொடுவது// பேபி க்ரீம். //எல்லோரும் திட்டுகிரார்கள். // அந்த எல்லோரயும் வந்து உங்கள் மாமனாருக்குப் பதில் குழந்தையைப் பார்த்துக் கொள்ள முடியுமா என்று கேட்டுப் பாருங்கள். :-)

// அவன் சருமத்தை எப்படி பாதுகாப்பது // சாதாரண பேபி க்றீம் போதும். நிறைய நீராகாரம் கொடுங்க. பழவகைகள் கொடுங்க. தோல் சரியாகா விட்டால் நீங்களாவே இதுதான் காரணம் என்று நினைக்காமல் ஒரு தடவை டாக்டரிடம் காட்டிப் பார்க்கலாம்.

//ஆனால் அவர் வெளியில் இருந்தால் தான் அழுகாமல் இருக்கிரான் என்கிரார்.// மாமனார் வெளியே கூட்டிப் போவாரே தவிர கொழுத்துற வெயில்ல வைச்சுட்டு இருக்க மாட்டார். அவராலயே முடியாது. நிச்சயம் அவரது தோல்லயே இது காட்டிக் கொடுக்கும். தவிர குழந்தை வெயில் தாங்காம கத்தும். நிச்சயம் கத்தாம இருக்காது. அவரால அப்படியெல்லாம் வைச்சுட்டு இருக்க முடியாது.

தொப்பி போட்டு வைச்சிருக்கச் சொல்லலாம். அல்லது குடை பிடிச்சுட்டு இருக்கச் சொல்லலாம். உங்களுக்கு பிடிக்கலயா? அப்போ வேலையை விட்டு வீட்டுல இருக்கிறதுதான் ஒரே வழி. எத்தனை பேருக்கு இப்படி ஒரு மாமனார் கிடைப்பார்!

‍- இமா க்றிஸ்

ஒரு வயது குழந்தையை ஏறக்குறைய‌ 8 மணி நேரம் போல‌ பார்த்துக் கொள்ளும்.கோபித்துக் கொள்ளாதீர்கள்.கிரச்சில் விட்டுப்பாருங்கள்,பிறகு தெரியும்
உங்கள் மாமனாரை கோயில் கட்டிக் கும்பிட‌ வேண்டும். இது பனிக்காலம்.
வயதானவர்க்ளுக்கும் சிறு குழந்தைக்ளுக்கும் கட்டாயம் வெயில் தேவை.
குழந்தை பிறக்கும்போது காது எந்த‌ நிறமோ வளர‌ வளர‌ உடல் நிறமும் அதுவே
அமையும் பெரியோர்கள் சொன்னது நாங்கள் பார்த்தது. இந்த‌ சென்னை வெயிலில்
காயும் பிள்ளைகளுக்கு இப்படி தோல் சுருக்கம் வந்து நாங்கள் பார்த்ததே இல்லை.
குழந்தைகள் உடல் எடையில் மாற்றம் ஒரு காரணமாக அமையும். பனிக்காலத்தில்
எல்லோருக்கும் தோல் சுருக்கம் ஏற்படுவது இயற்கை. எண்ணை தடவினால் தான்
சுருக்கம் போகும். பொதுவாக‌ குழந்தைகளுக்கு உச்சித்தலை, கை அக்குள் கால்
தொடை இடுக்கு முழங்கால் மடியும் உள்பகுதி இந்த‌ இடங்களில் எல்லாம்
ஊறெண்ணை என்று சொல்லப்படும் விளக்கெண்ணை தடவுவார்கள். தண்ணீர்
சத்து குறைவினாலும் தோல் சுருக்கம் வருவது உண்டு.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்