ஈஸி எக் ரைஸ்

தேதி: April 17, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (5 votes)

 

உதிர் உதிரான‌ சாதம் ‍- 2 கப்
முட்டை - 3
எண்ணெய் - 3 அல்லது 4 தேக்கரண்டி
தனி மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப‌


 

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் வைத்து தனி மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
தூள் வகைகள் என்பதால் எண்ணெய் சூட்டில் கருகி விடும். எனவே சிறிது (ஒரு கைப்பிடி) தண்ணீர் சேர்க்கவும்.
தூள் கலவையில் முட்டையை உடைத்து ஊற்றவும்.
முட்டை வெந்து கீமா பதத்திற்கு வரும் வரை கிளறவும்.
முட்டையுடன் வடித்த‌ சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
சுவையான‌ எளிதில் செய்ய‌க் கூடிய‌ முட்டை சாதம் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பச்சை மிளகாய் சேர்த்து செய்துள்ளேன், மிளகாய் தூள் சேர்த்து செய்ததில்லை. இதில் மிளகாய் தூளின் பச்சை வாசனை போய் விடுமா ??

குறிப்பை அழகாக‌ வெளியிட்ட‌ அட்மினுக்கு நன்றிகள் பல‌

எல்லாம் சில‌ காலம்.....

இது மிகவும் நல்லா இருக்கும் வாணி. எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும். அடிக்கடி செய்வேன். முதலிலேயே மிளகாய் தூள் எண்ணையில் சேர்த்து வதக்குவதால் தூள் வாசம் தெரியாது. தூளின் பச்சை வாசம் கொஞ்சம் கூட‌ தெரியாது. சூடான‌ எண்ணையில் தூள் சேர்த்தால் பொங்க‌ துடங்கும். உடனே தண்ணீர் தெளிக்க‌ வேண்டும். இல்லையெனில் தூள் தீய்ந்து விடும்.

எல்லாம் சில‌ காலம்.....

பாலநாயகி, எக் ரைஸ் செய்து பார்த்தேன். சுவையாக இருந்தது. எளிதாகவும் இருந்தது. மிக்க நன்றி
என் கணவர் மிகவும் பசிக்கிறது என்றார். சாதத்தை தவிர வேறு எதுவும் இல்லை. உங்கள் ஏக் ரைஸ் நியாபகம் வந்தது. செய்து கொடுத்தேன். நன்றாக இருந்தது என்று சொன்னார். நன்றி பாலா

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

நன்றி செல்வி. பார்க்க‌ எளிதாக‌ இருந்தாலும் டேஸ்டா இருக்கும். எனக்கும் இது செய்வது எளிது. ஆனால் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும். இது ஈஸி அன்ட் டேஸ்டி எக் ரைஸ்.

எல்லாம் சில‌ காலம்.....