மஞ்சப்பை

சில உறவுகள் இருக்கும்வரை அவர்களின் மதிப்பு தெரிவதில்லை.
உறவோ, நட்போ எதுவுமே..

நேற்று டிவியில் மஞ்சப்பை படம் போட்டாங்க. அதில் வரும் தாத்தாவை பார்த்ததும் என்னையும் அறியாமல் என் கண் கலங்கியது என் தாத்தாவை நினைத்து.

அதில் வரும் தாத்தாவை போலவே மிகவும் நேசமானவர். அம்மா, அப்பா இருந்தும் நாங்கள் தாத்தா, பாட்டியுடன் வளரும் சூழல், கருத்து தெரிந்தில் இருந்து அவர் கையை பிடித்தே இந்த உலகத்தை பார்த்தேன்.

நிச்சயம் ஒரு அம்மா, அப்பாவுடன் வளர்வதை விடவும் சிறப்பாகவே வளர்ந்தோம். இது வரை அவர்களை விட சிறந்தவர்கள் என யாரும் நான் நினைப்பதில்லை.

ஆனால் என் பள்ளி பருவத்தில் என் தாத்தா எங்களை விட்டு நிரந்தரமாக பிரிந்தார். அப்போது வருந்தியதைவிட இப்போது வருந்துகிறேன். அவருக்காக எதுவும் செய்ததில்லை என்று.

இருக்கும் போது யாருடைய அருமையும் தெரிவதில்லை. பிரிந்ததுக்கு அப்பறம் வருந்துவதில் ஒரு பயனும் இல்லை.miss my grand pa.நீங்க மிஸ் பண்றிங்களா உங்க தாத்தா,பாட்டி உறவுவை.

5
Average: 5 (3 votes)

Comments

//நிச்சயம் ஒரு அம்மா, அப்பாவுடன் வளர்வதை விடவும் சிறப்பாகவே வளர்ந்தோம். இது வரை அவர்களை விட சிறந்தவர்கள் என யாரும் நான் நினைப்பதில்லை// .ஆம் ரேவா,

நானும் என் பாட்டி வீட்டில் தான் சித்தி, மாமா புடைசூழ‌ செல்லமாக‌ வளர்க்கப்பட்டேன். பாட்டியை அம்மான்னு தான் அழைப்பது வழக்கம். பாட்டிம்மா விதவிதமா சமைப்பாங்க‌.

இப்போதும் அம்மான்னா எனக்கு நினைவில் வருவது பாட்டிம்மா தான். கதை சொல்லி சாதம் ஊட்டி விட்டதெல்லாம் அவங்க‌ தான். ராமாயண‌, மகாபாரத‌ கதையெல்லாம் சொல்லுவாங்க‌.

நல்லாப் படிக்கணும்னு சொல்லிகிட்டே இருப்பாங்க‌. நிகிலா நேற்றிரவு பாடம் படித்தாள்னு அழகா எழுதி கையொப்பம் இட்டு ஸ்கூலுக்கு தருவாங்க‌.

இப்பவும் எப்பவும் நினைச்சிகிட்டே இருக்கேன் ரேவா.
அந்த‌ நாட்கள் மறக்க‌ முடியாதவை.... நினைத்தாலே இனிப்பவை.... திரும்பக் கிடைக்காதவை...

நான் என் தாத்தாவை ரொம்ப மிஸ் பன்றேன்பா.நாங்க கூட்டுக்கூடும்பமாகதான் வாழ்ந்தோம்.எங்க அம்மா எனக்கு சாப்பாடு ஊட்டிவிட வந்தாலே நான் என் தாத்தாவைத்தான் தேடுவேன்.சாப்பாடு ஊட்டிவிட அல்ல.கதை சொல்வதற்கு.

என்னோட இரவு உணவு எப்போதும் என் தாத்தாவின் கதையோடுதான்.சாப்பிட்டு முடித்ததும் தாத்தா எங்க தெருவிலேயே சின்னதாக ஒரு வாக்கிங் கூட்டிட்டு போவாங்க.

அது மட்டுமில்லை என்னை ஸ்கூலுக்கு,டியூஷனுக்கு கூட்டிட்டு போனதும் என் தாத்தாதான்.இன்னைக்கு என் தாத்தா இல்லை.ஆனால் என் தாத்தாவின் நினைவு எப்போதும் எனக்குள்ள இருந்துகிட்டே இருக்கும்.

எல்லா புகழும் இறைவனுக்கே

அருமையான பதிவு மறக்க முடியாத உறவுகள் தாத்தா பாட்டி உறவு எனக்கும் என் தாத்தா என்றால் உயிர் தினமும் பள்ளி முடித்து வந்ததும் பாடம் சொல்லிகொடுப்பதில் இருந்து நல்ல பழக்க வழக்கங்கள் அனைத்தும் கற்று கொடுப்பார் அவரை போன்ற ஒருத்தரை இனி எங்கும் பார்க்க முடியாது அத்தனை நல்ல விசயங்கள் அனைத்தும் அவரிடம்தான் கற்றுக்கொண்டோம்.
எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று இருப்போருக்கு மத்தியில் இப்படித்தான் வாழவேண்டும் என இலக்கோடு வாழ்ந்த மனிதர் எங்களை விட்டு பிரிந்தது இன்றும் நினைத்தால் கண் கலங்கும் :(
தாத்தாக்களும் ( இரண்டு சைடும்) பாட்டிகளும் இன்னும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்காங்க நீங்காத நினைவுகளோடு
என் துரதிஷ்டம் எனக்கு பிடிச்சவங்க எல்லோரும் சீக்கிரமே எங்களை விட்டு போய்ட்டாங்க என் அப்பா உட்பட :(

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

//நீங்க மிஸ் பண்றிங்களா உங்க தாத்தா,பாட்டி உறவுவை.// தெரியல ரேவ்ஸ். அம்மாவின் பெற்றோர் இருவரும் அவர் கலியாணத்திற்கே உயிரோடு இல்லை. தந்தை வழிப் பாட்டாவும் எனக்கு நினைவு தெரியும் முன்பே இறந்துவிட்டார். நினைவு இருப்பதே அவர் மரணச் சடங்கு நடந்த தினம்தான். அப்பாவுக்கும் பாட்டிக்கும் என்ன பிரச்சினையோ! என்னத் தூக்கினார், கொஞ்சினார், மிட்டாய் வாங்கிக் கொடுத்தார் என்பது போல எதுவுமே நினைப்பு இல்லை. அழகான, கம்பீரமான பெண்மணி என்பது மட்டும்தான் நினைப்பு இருக்கிறது.

இருக்கும் போதும் அருமையானவராக இருந்த ஒருவரை அவர் பிரிவின் பின் ரொம்ப மிஸ் பண்றேன். எங்க அத்தை. ;(( வெளியே சொல்லாவிட்டாலும் என் பசங்க ரொம்ப மிஸ் பண்ணுறாங்க என்பது தெரியும். ;( எனக்குக் கிடைக்காத அருமையான தாத்தா பாட்டி உறவுகள் என் பசங்களுக்கு கிடைத்ததில் மனசு நிறைய சந்தோஷம் இருக்கு எனக்கு. பணத்தாலயோ படிப்பாலயோ இல்ல இந்த வெளிநாட்டு வாசத்தாலயோ பசங்களுக்கு வாங்கிக் கொடுக்க முடியாத அரிதான விடயம் இது. அவங்க லக்கி. :-)

சொல்ல மறந்துட்டேன். என்னை வளர்த்த பாட்டி ஒருத்தர் இருந்தாங்க. பக்கத்து வீட்டுப் பாட்டி, அம்மா அப்பா எங்காவது போக வேண்டி வந்தால் என்னை வைச்சுப் பார்த்துப்பாங்க. பூரணம் பெத்தா இறந்தப்ப எனக்கு 14 வயசு இருக்கும். ரொம்ப அழுதேன். மிஸ் பண்ணல இப்போ. ;) காரணம் - நான் செய்ற பல வேலைகள்ல அவங்க சாயல் எனக்கே தெரியும். :-) குழந்தை இல்லாத அவங்க தன்னைக் கொஞ்சமா எனக்குள்ள இறக்கி விட்டுட்டுப் போய்ருக்காங்க. :-) இந்த... செல்லங்கள் வளர்க்கிறதும் தோட்டம் செய்ற ஆர்வமும் அவங்கள்ட்ட இருந்து வந்ததுதான். :-)

எனக்கும் படம் பிடிச்சிருந்துது. சும்மாவே ராஜ்கிரண் நடிப்பு பிடிக்கும். இதுல அட்டகாசமா இருக்கு. தாத்தா குறும்பை வைச்சு ஒரு பாட்டு வருமே, அந்தப் பாட்டு ;))) சிரிக்கிறதுக்காகவே போட்டுப் பார்ப்பேன். ;))

‍- இமா க்றிஸ்

ம்ம்... தாத்தா பாட்டியை அடிக்கடி நினைப்பேன். முன்பே எழுதினேனே... எங்களூக்காக பாட்டி பலகாரம் எல்லாம் செய்து வைப்பாங்கன்னு எங்கோ. அவர்கள் மறைவு வாழ்வில் மறக்க முடியாதது. நான் என் அம்மா வழி தாத்தா பாட்டி மறைவுக்கு பின் ரைஸ் மில் பக்கம் போவதே இல்லை... அங்கே அவர்கள் உட்கார்ந்திருந்த பகுதியை பார்க்கையில் பழைய நினைவுகள் அதிகமிருக்கும். அப்பா வழி தாத்தா எப்போதும் திண்ணையே கெதி... அந்த திண்ணையே இப்போது இல்லை. அந்த வீட்டின் புகைப்படம் கண்ணில் பட்டால் வேதனை தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

// நீங்க மிஸ் பண்றிங்களா உங்க தாத்தா,பாட்டி உறவுவை.//
நிறையவே மிஸ் பண்றோம்ங்க.. அப்பாவழி தாத்தா அப்பா சிறுவயதிலிருக்கும் போதே இறந்துவிட்டார். பாட்டி மட்டும் இருக்காங்க.. அம்மாவழி தாத்தா எனக்கு 4 வயதிருக்கும்போதே இறந்துட்டார். சிறுவயதில் அவருடன் சுற்றிய ஞாபகங்களும் அவர் இறந்த நாளன்று அழுத ஞாபகமும் இருக்குங்க ..

நட்புடன்
குணா

அன்பு ரேவதி,

உறவுகள் இருக்கும்போது அதன் அருமை தெரிவதில்லை என்ற வரிகள் உண்மை உண்மை முற்றிலும் உண்மை.

எல்லோருக்கும் மலரும் நினைவுகள் வந்திருக்கும்.

சுருக்கமாகவும் உருக்கமாகவும் எழுதியிருக்கீங்க. ரொம்ப நல்லா இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி