ப்ரெட் ஆம்லெட்

தேதி: May 13, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.7 (3 votes)

 

ப்ரெட் - 6 துண்டுகள்
முட்டை - 2
பால் - கால் டம்ளர்
மிளகாய்த் தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - கால் தேக்கரண்டி
சர்க்கரை - 2 தேக்கரண்டி


 

முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும்.
முட்டையுடன் பாலை சேர்த்து நன்கு அடித்து கலக்கவும்.
இதனுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.
ப்ரெட்டை முட்டை கலவையில் இருபுறமும் லேசாக‌ முக்கி எடுக்கவும்.
முட்டையில் தோய்த்த ப்ரெட்டை தோசைகல்லில் போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றவும்.
ப்ரெட்டை மற்றொரு பக்கமும் திருப்பி போட்டு இரு புறமும் வெந்ததும் எடுக்கவும்.
சுவையான ப்ரெட் ஆம்லெட் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பாலா
இது காரமா இருக்குமா அல்லது இனிப்பாக‌ இருக்குமா?

ஈசியான ரெசிபி. நான் மிளகாய்தூள் சேர்க்கமாட்டேன்.நல்லாருக்கு

Be simple be sample

குறிப்பை அழகாக‌ வெளியிட்ட‌ அறுசுவை டீமிற்கு நன்றிகள் பல‌.

எல்லாம் சில‌ காலம்.....

இனிப்பாக‌ தான் இருக்கும் நிகி. லைட்டா காரம் தெரியும். செய்து பாருங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

நன்றி ரேவ்'ஸ். மிளகாய் தூள் சேர்த்தும் செய்து பாருங்களேன்.

எல்லாம் சில‌ காலம்.....

கலர்புல்ல ரெசிபி பாலா.. இதே முறையில் நானும் செய்வேன்.. 50 50 டேஸ்ட்.. இனிப்பு காரம் சூப்பரா இருக்கும்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

தேங்க்ஸ் ரேவா.

எல்லாம் சில‌ காலம்.....

நான் காரம் சேர்த்து செய்ததில்லை பாலா. கலர்ஃபுல்லா இருக்கு.

Supera tasty iruku. kulanthaikaluku rompa pidikum.

நன்றி வாணி.

எல்லாம் சில‌ காலம்.....

ஆமாம் கல்யாணி. என் வீட்டு வாண்டு கூட‌ விரும்பி சாப்பிடும்.

எல்லாம் சில‌ காலம்.....

Bala akka ithe mathiri easyana tasetyana receipes ethavathu iruntha enaku sollunka.

என்னோட‌ ரெசிபி எல்லாமே ஈஸி அன்ட் டேஸ்டி தான். ஏனா பேஸிகலி நான் ஒரு சோம்பேறி. அதனால‌ எல்லாமே ஈஸியா செய்றதா மட்டும் தான் செய்வ‌.

எல்லாம் சில‌ காலம்.....