
அனைவருக்கும் வணக்கம். வெள்ளையனே வெளியேறு... என்ற தலைப்பில் கூறி இருந்த மூன்று வெள்ளையர்களை போல் இன்னும் சில வெள்ளையர்கள் இருக்கிறார்கள். அதில் சில வெளியேற்ற வேண்டியவர்கள். சில குறைக்க வேண்டியவர்கள். அவர்களை இதில் பார்ப்போம்.
அரிசி
பால்
அஜினமோட்டோ
சோடா உப்பு
சேமியா, ரவை
முட்டை
முதலில் அரிசி:
முற்காலத்தில் வருடத்திற்கு இருமுறை நெல் விளைவித்து அறுவடை செய்தார்கள். அது பொருமையாக பூமியில் உள்ள சத்துகளை சேர்த்து நன்கு வளர்ந்தது. மிகுந்த சத்துடன் இருந்தது. ஆனால் இப்போது இரு மாதத்திற்கு ஒரு முறை ஏன் மாதம் ஒரு முறை கூட அறுவடை நடைபெறுகிறது. இதை உரம் போட்டு வளர்க்கிறார்கள். இந்த அரிசியில் சத்து என்பது மிக குறைவு. அரிசியில் கார்போ ஹைட்ரேட் மட்டுமே அதிகமாக உள்ளது. இது நம் உடலுக்கு அதிகம் தேவையில்லை. நாம் வேலை செய்ய கார்போ ஹைட்ரேட் அவசியம் தான். அதற்கு சிறிது எடுத்துக்கொண்டாலே போதுமானது. எனவே காய் சாப்பிடும் அளவு சாதம் எடுத்துக்கொண்டு சாதம் அளவுக்கு காய்கறிகளை சேர்த்துக்கொள்ளவும்.
பால்:
பசு மாட்டு பாலே சிறந்தது. ஆனால் பசுவிலே பல வகை உண்டு கீரை வகை போல. முழு மாடு, அரை மாடு, கால் மாடு. முழு மாடு என்பது வெள்ளை நிற நாட்டு பசு. இது எந்த வெயிலையும் தாங்கும். மழையையும் தாங்கும். ஆரோக்கியத்துடன் இருக்கும். இதன் பாலே நமக்கு சிறந்தது. அரை மாடு என்பது பசுவில் இன்னொரு வகை. இது பாதி வெயிலுக்கு மேல் நிழலை தேடும். இரவில் குளிரும் தாங்காது. இதன் பாலும் அரை சத்து மட்டுமே கொண்டு இருக்கும். கால் மாடு என்பது. அரை மாட்டை விடவும் சத்து குறைந்தது. இதன் பாலும் இதன் குணங்களையே தரும். ஆனால் இந்த பசு எதுவும் இப்போது இல்லை. எல்லாம் டெல்லி பசு வந்து விட்டது. இப்போது உள்ள பசுவில் பால் அதிகம் கறக்க ஊசி போடுகிறார்கள். அந்த மருந்தின் மூலம் பால் அதிகம் சுரப்பதால் அதில் சத்து சிறிதும் இருப்பது இல்லை. மாறாக நோய்களையே நமக்கு சேர்க்கும். பாக்கெட் பாலிலும் கூட திக்காக தெரிய யூரியா கலப்பதாக எனக்கு தெரிந்த ஊழியர் ஒருவர் கூறினார். எருமை பால் அறவே கூடாது. இது நம் மனித உடலுக்கு ஏற்றது அல்ல. பால் நாம் கால்சியம் சத்துக்காக குடிக்கிறோம். அந்த கால்சியம் சத்துக்காக கேழ்வரகு, ஆரஞ்சு, எள், கீரை ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
அஜினமோட்டோ:
இது சீனாவின் கண்டுபிடிப்பு. இது சுவைக்காக மட்டுமேயன்றி இதில் நல்லது எதுவும் கிடையாது. ஆனால் கெட்ட விஷயம் கொட்டி கிடக்கிறது. இது சிறிது சிறிதாக சேர்ந்து படிந்து உடலில் பல பாதிப்பை உண்டு பண்ணும். இதை உபயோகித்து உடலை கெடுத்துக்கொள்வதை விட உபயோகிக்காமல் இருப்பதே நலம்.
சோடா உப்பு:
இது சாஃப்டாக இருக்க பல உணவுகளில் சேர்க்கப்படுகிறது. சில ஹோட்டலில் சாதம் வெள்ளையாக தெரிய இதை சாதத்தில் சேர்க்கிறார்கள். இந்த சாதத்தை சாப்பிட்டால் சிறிது நேரத்தில் வயிறு உப்பி சாப்பிட தோணாது. அவ்வளவு கேஸ் இது. இதுவும் உடலுக்கு மோசமான விளைவை உண்டாக்க கூடியது. இதை தவிர்ப்பது நல்லது.
முட்டை:
இதில வெள்ளை கரு நல்லதே. ஒரு முட்டையின் மஞ்சள் கரு கால் கிலோ கோழி கறிக்கு சமமான கொழுப்பைக் கொண்டது. குழந்தைக்கு மஞ்சள் கரு கொடுத்து விட்டு நாம் வெள்ளை கரு சாப்பிடலாம். இந்த முட்டையின் ஓட்டில் சிறிது கீறலோ அல்லது எந்த வித ஓட்டையோ இருந்தால் அதன் மூலம் பல கிருமிகள் உள்ளே செல்லும் வாய்ப்பு உள்ளது. இதனால் பல நோய்கள் வரும். எனவே உடைந்த முட்டையை உடைந்த உடனே உபயோகித்து விடவும். சில நாள் வைத்து உபயோகிப்பது நெருப்பை அள்ளி நாமே நம் தலையில் போட்டுக் கொள்வது போல்.
சேமியா, ரவை:
இவையும் கூட கோதுமையில் செய்ததாக பார்த்துக்கொள்ளவும். மைதாவில் செய்த சேமியா ரவையை தவிர்க்கவும்.

இதுவரை சில வெள்ளையர்களை பார்த்தோம். இப்போது சில கலரானவர்களை பார்ப்போம்.
முதலில் ஃபுட் கலர்:
எல்லாவற்றிலும் வெள்ளையை விரும்பும் நாம் சிலவற்றில் ஏனோ கலரை விருப்புகிறோம். இதற்காக முக்கியமாக மஞ்சள், சிவப்பு, பிங்க், பச்சை, ஆரஞ்ச், என பல நிற கலர் பௌடரை நாம் சேர்க்கிறோம். முக்கியமாக குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில். இது உடலுக்கு மிக மிக கெடுதி. சிறிது சிறிதாக உடலில் சேர்ந்து பெரிய தீய விளைவை ஒரு நாள் தரும். இதை முற்றிலும் ஒழித்தல் நலம். கலர் இல்லாமல் சாப்பிடுவோமே.
புளி:
இது உடலில் இரத்தத்தை வற்ற வைக்கும் சக்தி கொண்டது. மிக சூடு. இதை அதிகம் சேர்த்துக்கொள்ளும் போது இதனால் வயிறு சம்பந்தமான உபாதைகள், மலசிக்கல், கண் சம்பந்தமான் ப்ரச்சனை வர வாய்ப்பு உள்ளது. இரத்ததில் அமில தன்மை, கார தன்மை என இரு வகை உண்டு. கார தன்மை நல்லது. அமிலத்தன்மை கெட்டது. இந்த புளி அமிலத்தன்மை அதிகம் கொண்டது.
காய்ந்த மிளகாய்:
இதற்கு பதிலாக பச்சை மிளகாய் உபயோகிக்கலாம். இன்னும் சொல்லப் போனால் காரத்திற்கு மிளகு சேர்ப்பது மிக்க நல்லது. காய்ந்த மிளகாயை குறைத்துக்கொள்வது மிகவும் சிறந்த ஒன்று.
இதனுடன் உங்களுக்கு தெரிந்த சிலவற்றையும் பகிர்ந்து கொள்ளலாமே.....
Comments
பால்
//அந்த மருந்தின் மூலம் பால் அதிகம் சுரப்பதால் அதில் சத்து சிறிதும் இருப்பது இல்லை.// மன்னிக்க வேண்டும் பாலநாயகி. சிறிதும் சத்து இருப்பது இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை சகோதரி. அப்படியானால் அது வெறும் நீராக அல்லவா இருக்க வேண்டும்!! பெண்கள் கூடத்தான் பால் சுரப்புப் போதாமலிருக்கும் போது மாத்திரைகள் எடுக்கிறார்கள். அப்படியானால் அவர்கள் குழந்தைகளும் வெறும் நீரை மட்டும் குடிப்பதாக ஆகிறதே! அவர்கள் சாதாரணமாக வளரத்தானே செய்கிறார்கள்! கறந்த பசுவின் கன்று வளரப் போதுமானதாக சத்துக்கள் எல்லாமே அதன் பாலில் இருந்தாக வேண்டுமே!
எங்கிருந்து தகவலைப் பெற்றுக்கொண்டீர்கள் என்பதைச் சொல்லி உதவ முடியுமா? (லிங்க் வேண்டாம். பெயரை மட்டும் குறிப்பிடுங்கள். அல்லது புத்தகத்தின் பெயரைச் சொன்னால் தேடிப் படித்துக்கொள்வேன்.) நான் அறியாத தகவலாக இருக்கிறது. தேடிப் படிக்க விரும்புகிறேன். இப்பொழுதே நன்றி.
- இமா க்றிஸ்
அன்புள்ள இமாவிற்கு
நலம் நலமே நாடுவோம்.
பொதுவாக சில மாடுகள் தன்னை வளர்ப்பவர் தவிர வேறு யாராவது பால் கறக்கும் போது பக்கத்தில் நின்றால் பாலை எக்கிக் கொள்ளும், பால் தராது.
மனிதர்களுக்கு (பெண்களுக்குப் பால் கட்டிக் கொண்டால் அதை வெளியேற்ற
ஒரு மருந்தை ஊசி மூலம் செலுத்துவார்கள், அதனால் கட்டிக்கொண்ட பால்
முழுவதுமாக வெளியேற்றப் படும்) செலுத்தும் அந்த ஊசியை ஒவ்வொரு
வேளையும் மாட்டின் கழுத்தில் (பால் கறக்கும் ஒவ்வொரு தடவையும்)
நறுக் நறுக்கென்று குத்துவார்கள். மருந்தின் பேர் எனக்குத் தெரியாது. அதைக்
குத்திய பின் மாட்டுக்குப் பைத்தியமா என்ன. கன்றுக்காகக் கூட சொட்டுப்பாலையும் வைத்துக் கொள்ளாமல் எஜமானனுக்கு விசுவாசியாகக்
கடைசிச் சொட்டுப் பாலையும் தந்துவிடும்.மருந்து வாசத்தோடு அருமையான
பால் ரெடி வினியோகத்திற்கு. வைக்கோலாலே கன்னுக்குட்டி மாடு (எப்ப)
போட்டுது அப்போ, இப்போ கையிலே ஊசி இருந்தாலே போதும். அதைப்'
பார்த்ததும் மாடு துடிக்கும் துடிக்கும் துடிப்பு நேரில் பார்த்தால் தான் தெரியும்.
அந்தப் பாலைக் குடிக்கும் காரணத்தால் மனிதர்களுக்கு குழந்தைப் பேற்றுக்கான வாய்ப்பு மிக மோசமாகக் குறைந்து விட்டது என்று அறியப்
படுகிறது. இன்றைய சென்னையில் எங்கு நோக்கினும் இதைக் காணலாம்.
பால் குடிக்கும் கன்றா, கிடாரி ஆனால் உயிரோடு காளையானால் கசாப்புக்கடை.தான், இது தான் இன்றைய மேழிச் செல்வத்தின் நிலைமை.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
பாலா
நல்ல உபயோகமான பதிவு பாலா. இமா சொல்வது போல பாலில் சத்து இல்லாமல் போவதில்லை, ஆனால் பக்க விளைவுகள் உண்டு என சொல்கிறார்கள். எனக்கு பால் உண்டாக கொடுத்த மாத்திரையால் நான் என் மகளும் 2 நாட்கள் உணவு உண்ண கூட கண் விழிக்க முடியாமல் தூங்கினோம்... தூக்கம் என்பதை விட அது ஒரு வகை மயக்கம் போல இருந்தது. மருந்தை விட்டு 2 நாள் கழித்தே அதன் தாக்கம் குறைந்தது. இது போல மாட்டுக்கு போடப்படும் ஊசியால் பல நோய்கள் வர வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க. படிச்சது தான்... எதையும் நம்ப முடியல, என்ன பண்ண, நம்ம இன்னைக்கு சாப்பிடும் எதை பார்த்தாலும் பயம். முட்டைகோஸ், காலிஃப்ளவர் எல்லாத்துலையும் மருந்து இருக்குன்னு சொல்றாங்க, ரொம்ப நாள் கெடாம இருக்க. நான் பஜ்ஜி மிளகாய் வாங்கி ஃப்ரிட்ஜ்ல வெச்சு 2 மாசம் ஆகுது... சொன்னா நம்ப மாட்டீங்க, இன்னும் அது நல்லா இருக்கு :( சந்தோஷப்படுறதுக்கு பதிலா அதை கண்டா எனக்கு பயமா இருக்கு. இப்போது நான் கடையில் எந்த ரெடிமேட் ஐட்டமும் வாங்குறதில்லை. எதை கண்டாலும் யோசனையா கெடக்கு.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
காய்ந்த மிளகாய் உபயோகிக்க
காய்ந்த மிளகாய் உபயோகிக்க வேண்டாம் என்கிறிர்கள்.ஆனால் நான் ஒரு ஆர்டிக்களில் படித்தேன்,காய்ந்த மிளகாய் உபயோகித்தால் heart attach வரும் வாய்ப்பு குறைவுனு research பன்னி முடிவு கண்டதாக குறிப்பிடபட்டிருந்தது.எனக்கு மருத்துவர் கூறியிருக்கிறார் பச்சை மிள்காய் தான் ஆபத்தாம்.காய்ந்த மிளகாய்யும் அப்படியே காய வைத்ததாக இருந்தால் பச்சை மிள்காயின் குணம் தான் இருக்குமாம் எனவே வேகவைத்து காயவைத்த மிளகாய் உபயோகிக்க வேண்டும் என சொன்னார்.எதை பயன்படுத்தனு தெரில பேசாம மிளகு பயன்படுத்திக்கலாம்.மிளகு காரமா இருந்தாலும் அது இனிப்பு சுவை கொன்டது.அதாது 6 சுவைகளில் மிளகை இனிப்பு சுவையின் கீள் வகைபடுத்தி உள்ளனர் நம் முன்னோர்கள்.
அதே போல் தேன் கார சுவையின் கீள் வகைபடுத்தி உள்ளனர்
புளி நான் சிறு வயதில் அதிகம் எடுத்துக்கொண்டேன்,அதனால் என் ரத்தத்தில் ஹுமோகுளோபின் அளவு குறைந்து பிரச்சனை ஆகி விட்டது.
ஓட்ஸ்:
நாம் எல்லோரும் ஓட்ஸ் நல்லதுனு அதிகம் பயன்படுதுறோம். ஆனால் ஓட்ஸ்யை அதிகம் பயன்படுத்த கூடாது.ஓல்டு பேஷண்டு கோல்ட் மற்றும் ஸீல்ட் கட் இதுதான் ஆரோக்கியமானது.அதும் தினமும் 1 ஸ்பூன் அளவு தான் எடுக்கனும்.இது கொழுப்பை கரைக்காது,ஓட்ஸ்க்கு பசியை கட்டுபடுத்தும் தன்மை உள்ளது எனவே உடல் எடை குறைய விரும்புவோர்க்கு இது பரிந்துரைக்கபடுது.
இமா
மன்னிக்கவும் இமா.
சத்து சிறிதும் இல்லை என நான் குறிபிட்டிருப்பதன் பொருள் சத்தை விட பக்க விளைவுகள் அதிகம் என்பது தான். அப்படியானால் பக்கவிளைவை விட சத்து குறைவு தானே. இந்த பக்க விளைவுகள் உடனே தெரிவதில்லை. சிறிது சிறிதாக உடலில் படிந்து பெரிய விளைவை ஏற்படுத்தும். அதனால் தான் சத்து சிறிதும் இல்லை என குறிப்பிட்டேன். நாம் கால்சியம் சத்துக்காக தான் பாலை குடிக்கிறோம். அதை நாம் மற்ற பொருளிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாமே என்பதே என் நோக்கம்.
இந்த தகவலை நான் ஒரு மாத இதழிலிருந்து பெற்றேன் இமா. நம் மற்ற வாசகியரும் கூட இதை ஒத்துக்கொண்டுள்ளனர்.
நான் ஒரு லிங்கில் படித்தேன். is cows milk nature’s perfect food? Yes. If you’re a calf. என்று. இது என்னுடைய அடுத்த வலைபதிவு. வீகன் டயட் என்பது.
எல்லாம் சில காலம்.....
பூங்கோதை அம்மா
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. அந்த டாக்ஸின் என்ற மருந்தின் மூலமே மாடுகள் அதிக பால் கறக்கின்றது. இந்த பாலில் சத்தை விட பக்க விளைவே அதிகம்.
எல்லாம் சில காலம்.....
வனி அக்கா
ஃப்ரிட்ஜ் பற்றி நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. உதாரணமாக நாம் இறந்த உடலை ஃப்ரீஸரில் வைத்தால் அது 10 நாட்கள் கூட கெடாமல் இருக்கும். உயிருடன் ஒருவரை ஃப்ரீஸரில் வைத்தால் அவரது உயிர் இருக்காது ஆனால் உடல் ஃப்ரெஷாக இருக்கும். நாம் வைக்கும் காய் கறிகளும் அப்படித்தான். 1 நாளுக்கு மேல் ஆனால் அந்த காய் கறியில் உயிர் (சத்து) இருப்பது இல்லை. ஆனால் ப்ரெஷாக இருக்கும். இதுவே உண்மை. இப்போது களிமண்ணினால் ஆன குளிர்பெட்டிகள் மார்கெட்டில் வந்துள்ளன. இன்னும் பல மாற்றங்களை எதிர்பார்ப்போம். அறிவியலின் சில கண்டுபிடிப்புகள் நன்மைக்காக இருந்தாலும், சில அழிவுக்கே வழிவகுக்கின்றன. (autom bomb போல)
எல்லாம் சில காலம்.....
திவ்யா
மிளகாயில் மருத்துவ குணம் இருந்தாலும் அதன் விளைவு சில எதிர் மறையாக இருக்கின்றன. நான் படித்த புத்தகத்தில் காய்ந்த மிளகாயை விட பச்சை மிளகாய் சிறந்தது என்று கூறப்பட்டு இருந்தது. எது எப்படியோ மிளகு இருக்க பயமேன்?
எல்லாம் சில காலம்.....
பாலநயகி
ஆரோக்கியமான பதிவு :))
முட்டை பற்றிய ஒரு முக்கியமான தெளிவு
\\ஒரு முட்டையின் மஞ்சள் கரு கால் கிலோ கோழி கறிக்கு சமமான கொழுப்பைக் கொண்டது.\\
முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள கொழுப்பு சத்தினால் அதை தவிர்க்கலாம் என எழுதியிருக்கீங்க. முட்டையின் மஞ்சள் கருவில் உடலுக்கு தேவையான மற்ற சத்துக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் A, D, B12 , மற்றும் கால்சியம், பொட்டாசியம், செலேனியம் மிக முக்கியமாக இதயத்திற்க்கு அவசியமான ஒமேகா- 3 உள்ளன.பிராய்லர் கோழியில் ஒமேகா- 3 இல்லை.Free Range chicken-ல் மட்டுமே Omega-3 உள்ளது. ஒரு நாளைக்கு தாராளமாக ஒரு முட்டை மஞ்சள் கருவுடன் (Hard Boiled Egg) உண்ணலாம். கொழுப்பை கருத்தில் கொள்ளும் பட்சத்தில் முட்டை உண்ணும் நாளில் மற்ற கொழுப்புள்ள உணவை தவிர்க்க வேண்டும். இது முட்டைக்கு மட்டுமல்ல எல்லா வித கொழுப்புள்ள பதார்த்தங்களுக்கும் பொருந்தும்.
நாம் ஒரெ நாளில் முட்டை, கோழி, மட்டன், மீன், சீஸ் என்று எல்லாவற்றையும் உண்பதில்லை. ஒவ்வோரு நாளும் ஏதாவது ஒன்றை நம் உடலுக்கு அவசியமான அளவில் தானே உட்கொள்கிறோம். ஆகவே ""ஒரு முட்டை எடுத்துக் கொள்வது எவ்விதத்திலும் கெடுதல் இல்லை.""
எந்த உணவை உட்கொள்ளும் போதும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம் "அளவு". நம் உடலுக்கு ஒவ்வோரு சத்துக்களும் சரிவிகிதத்தில் கிடைப்பதுதான் நல்லது :)
\\இதற்கு பதிலாக பச்சை மிளகாய் உபயோகிக்கலாம்\\ என் கணவர் அடிக்கடி குறிப்பிடும் ஒரு விஷயம் மிளகாய்த் தூளுக்குப் பதில் பச்சை மிளகாய் பயன் படுத்து என்பது. பச்சை மிளகாய் காய் கறி குடும்பம் என்பதால். எங்க வீட்ல விதை நீக்கிய பச்சை மிளகாய் சமயலில் இடம் பெறும்.
\\இதனுடன் உங்களுக்கு தெரிந்த சிலவற்றையும் பகிர்ந்து கொள்ளலாமே.....\\
வெண்ணெய், நெய், உடலுக்கு மிகவும் கெடுதி
புளிக்குப் பதில் எலுமிச்சை சாறு சேர்க்கலாம். மீன் குழம்பில் கூட வேறுபாடு தெரிவதில்லை.
bala
நல்ல பதிவு பாலா. இதெல்லாம் தவிர்க்க நினைத்தாலும் முடியாது என்பதுதான் உண்மை. வேண்டும்னா குறைத்துக்கொள்ளலாம். உங்கள் கருத்துடன் தோழிகள் கருத்தும் நல்ல உபயோகமான தகவல்.
Be simple be sample
வேறு தளங்களின் லிங்க்
அன்பு பாலநாயகிக்கு,
ஒரு தடவை அறுசுவை விதிகளைப் படிச்சுப் பார்க்கணும் நீங்க. வேறு தளங்களின் லிங்க் இங்கு கொடுக்கக் கூடாது என்று அட்மின் சொல்லியிருக்கிறாங்க என்பதாக நினைவு. நான் லிங்க் கொடுங்க என்று கேட்கவில்லை சகோதரி. நினைவாக //லிங்க் வேண்டாம்.// என்று சொல்லியிருந்தேன்.
- இமா க்றிஸ்
வாணி
அருமையான கருத்து வாணி. முட்டை தவிர்க்க சொல்லவில்லை. குறைக்க வேண்டிய ஒன்று. சிறு வயதில் மஞ்சள் கரு சாப்பிடலாம். பெரியவர்களாகும் போது மஞ்சள் கருவை தினமும் எடுத்துக்கொள்ளாமல் குறைத்துக்கொள்வது நல்லது.
உங்களின் நெய் வெண்ணெய் குறிப்பு அருமை.
எலுமிச்சை ஐடியா சூப்பர் ட்ரை செய்து பார்க்கிறேன்.
எல்லாம் சில காலம்.....
ரேவ்'ஸ்
சூப்பரா சொல்லிட்டீங்க ரேவ்'ஸ். சிலவற்றை நானும் தவிர்க்க நினைத்து முடியவில்லை. இப்போது தான் குறைத்துக்கொள்ள ஆரம்பித்து இருக்கிறேன். இப்படியே சிறிது சிறிதாக குறைத்து தவிர்க்கவும் முயல்வேன்.
எல்லாம் சில காலம்.....
இமா
மன்னிக்கவும் இமா. நாம தான் கொஞ்சம் ஆர்வ கோளாறாச்சே. ஆர்வ கோளாறில் மறந்து விட்டேன். நீங்கள் பதிலளி தட்டாமல் இருந்தாலாவது மாற்றி இருப்பேன். அதும் முடியவில்லை.
எல்லாம் சில காலம்.....
பாசத்திற்குரிய பாலா
முதல்ல அரிசிசிக்கு மாற்றாக சிறுதான்யத்தை எடுத்துக்கலாம்.
பாலைப் பற்றியும் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன். பாலின் உபயோகத்தை குறைத்துவிட்டேன்.
அஜினோமோட்டோ, சோடா ரெண்டும் வயிற்றில் புண்ணை உருவாக்கும்.
மைதாவுக்கு பதில் கோதுமை மாவு எடுக்கலாம்.
அழகுக்காக கலர் சேர்ப்பதை தவிர்க்கலாம்.
புளி இதிலே கொடம்புளின்னு ஒண்ணு இருக்கு. கேரளாவில் உபயோகிக்காங்க. அது பாதிப்பு இல்லைன்னு சொல்லுவாங்க.
மற்றபடி எல்லாம் நீங்களே சொல்லிப்புட்டீங்களே!!! நாங்க பகிர்ந்து கொள்ள பாக்கி ஏதும் இல்லியே.:))
நல்ல பதிவு பாலா
நிகி
நன்றி நிகிலா. அழகா எல்லாம் சொல்லிபுட்டீங்க. குடம்புளி பத்தி கூட இன்னிக்கு தான் நான் படித்தேன். உங்க கருத்து பதிவு கலக்கலா இருக்கு. நிகி எப்பவும் கலக்கல் தான்
எல்லாம் சில காலம்.....
பாலநாயகி...
//நீங்கள் பதிலளி தட்டாமல் இருந்தாலாவது // :-)) ஹை! :-) நான் தான் தட்டினேன் என்று கண்டுபிடிச்சிட்டீங்க!! :-) இப்படி வேற யார்ட்டயும் கேட்காதீங்க. யார் வேணுமானாலும் தட்டி இருக்கலாம் இல்லையா! :-)
ம்.. நன்றி பாலநாயகி. படிச்சுப் பார்த்தேன். போற போக்கைப் பார்த்தால்.. பேசாம வேலை விட்டுட்டு எங்காவது கிராமப் பக்கம் சின்னதா ஒரு நிலம் வாங்கி நமக்குத் தேவையானதை நாமே உற்பத்தி செய்து பயன்படுத்துறதுதான் நல்லது போல இருக்கு. சின்னதா அப்பிடி ஒரு ஐடியா இருக்கு. இன்னும் கொஞ்ச காலம் வேலை பார்த்துவிட்டு ஓய்வு பெறும் சமயம் பார்க்க வேண்டும். ஒரு பசு, நாலு கோழி இருந்தால் கூட தேவைக்கு மேலேயே கிடைக்கும். உற்றார் உறவினர் எல்லோரோடும் பகிர்ந்துகொள்ளலாம். ஹ்ம்! இப்போதான் ஊரை ரொம்..ப மிஸ் பண்ணுகிறேன். ;(
ஒட்டுமொத்தமாக எதையும் தவிர்ப்பது... சிரமம். தெரியாமலே உள்ளே போய்விடும். எதுவானாலும் கொஞ்சமாக மட்டும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு சுழற்சி போல ஒரு நாள் எதையாவது சாப்பிட்டால் 2 வாரம் கழித்துத்தான் மீண்டும் அந்த உணவு என்று வைத்துக் கொள்ளலாம்.
- இமா க்றிஸ்
இமா
சூப்பர் இமா. நல்ல ஐடியா. நாங்களும் இதை தான் யோசித்து இருக்கிறோம். நான் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக இது போன்றவற்றை குறைக்க ஆரம்பித்திருக்கிறேன். முடிந்த வரை கூடிய விரைவில் இவற்றை தவிர்த்து இணை உணவு எடுத்து கொள்ள முயல்வேன்.
//நான் தான் தட்டினேன் என்று கண்டுபிடிச்சிட்டீங்க!! :-) இப்படி வேற யார்ட்டயும் கேட்காதீங்க. யார் வேணுமானாலும் தட்டி இருக்கலாம் இல்லையா!//
சிம்பிள் லாஜிக். எப்டி இமா அம்மா உங்களுக்கு நான் கொடுத்த பதிலுக்கு உங்களை தவிர வேறு யாரும் பதிலளி தட்ட முடியாது. அதிலும் என் பதில் கண்டு உங்களின் பதில் அங்கே இருக்கும் போது. நீங்கள் தான் தட்டி இருக்க முடியும் என்று யூகிப்பது எளிது.
எல்லாம் சில காலம்.....
பாலா ;))
//அதிலும் என் பதில் கண்டு உங்களின் பதில் அங்கே இருக்கும் போது. நீங்கள் தான் தட்டி இருக்க முடியும் என்று யூகிப்பது எளிது.// ஆஹா! :-) நான் நிறைய இடங்களில் எனக்கு வராத பதில்களிலெல்லாம் பதிலளி தட்டி இருக்கிறேனே! ;D லாஜிக் எல்லாச் சமயமும் வேலை செய்யாது பாலா. :-) மேலே... நிச்சயம் இமாதான். :-) உங்கள் ஊகம் சரி. :-) இனிமேல் லிங்க் கொடுக்கவே மாட்டீங்க. ;)))
தூங்கப் போகும் முன் கடைசியாக ஒரு பார்வை பார்க்க வந்தேன். உங்கள் பதில் இருக்கிறது. :-) இமாவிற்கு நல்லிரவு. உங்களுக்கு இன்றைய மீதி நாள் இனிமையானதாகக் கடக்கட்டும். இடுகையின் அடுத்த பாகத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
- இமா க்றிஸ்
பாலநாயகி
இப்பல்லாம் உணவுக்கு நாம சாப்பிடும் பலவும் விஷத்தன்மை உடையதாதான் இருக்கு. முடிந்த வரை பாக்கெட் உணவுகளை தவிர்ப்பது நல்லது. நல்ல பதிவு பாலா.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!