
பிரிவும் சுகமானது
உன்
நினைவுடன் வாழ்வதால்..
நிஜம் விட நிழல் அழகானது
பிரிவு இல்லாமல்
போகுமே ...
நிஜங்கள் தேவையில்லை
உன்
நினைவுகள் மட்டும் போதும்
நம் அன்பு வளர...!!!
@@@@@@@
எப்போதும் கோபம் கொள்கிறேன்
உன்னுடன்
என் தவறுகளுக்காக...
மன்னிப்பாயா!!!
@@@@@@
மெலிதாய் தீண்டும்
தென்றலை போல்
உன்
கவிதை
என்
நினைவவை
தீண்டுகிறது...
உன்
அன்பும் கவிதையும்
எப்போதும்
என்னுள்ளே...
நீ
எனை மறந்து சென்றாலும்....
@@@@@@@
நித்தமும் சண்டையிடுகிறேன்
உன்னுடன்..
உன் கோபங்கள் அழகானதால்...
கவிதைகள்
எழுதிய காகிதம்
படபடக்கிறது
என் இதயம் போல்...
உன்னிடம் வந்து சேர தவிக்கிறது
என்னை போலவே...
தொடும் தூரம் நீ இல்லை
நினைவுகளை அனுப்புகிறேன்
தூதாக
ஏற்று கொள்வாயா...
@@@@@@
Comments
கவிதை
வாவ்! கவிதைகள் அனைத்துமே அருமை ரேவ்ஸ். பாராட்டுக்கள். இன்னும் நிறைய எழுதணும் நீங்க.
- இமா க்றிஸ்
வாழ்த்துக்கள்
ரேவதி மேடம்
கவிதை நல்லாயிருக்கு இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்
immama
தான்க்யூ இமாம்மா. என் கிறுக்கல்களையும் கவிதையாக பார்த்து பாராட்டியதற்கு.;)
Be simple be sample
அபி
தான்க்யூ அபி. ரசித்து பாராட்டியதற்கு :)
Be simple be sample
அன்பு ரேவா
ஒவ்வொரு கவிதையும் தென்றலெனெ வருடும் வண்ணம் உள்ளது. அற்புதமான படைப்பு வாழ்த்துக்கள்:))
ரேவ்ஸ்
!! ஆ!! கவித கவித கவித ;) ஹஹஹா... சும்மா சொல்லக்கூடாது ரேவ்ஸ் கவித அழகாத்தான் எழுதுறாங்க அவங்கள போலவே.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Niki
தான்க்யூ நிகி. ரசித்து பாராட்டியதற்கு.
Be simple be sample
வனி
ஏம்மா ஏன் ஏன் இப்படி. 3:-) தான்க்யூ.
Be simple be sample
ரேவதி கவிதை
கவிதை மிக அழகாக உள்ளது தோழி வாழ்த்துகள்
ரேவ்'ஸ்
கவிதைலாம் சூப்பரா இருக்கு. ஆனால் உங்கள் முதல் கவிதை கொஞ்சம் இடிக்கிறது. பிரிஞ்சி இருக்க அப்போ அது அழகா தெரியறது இல்ல. கஷ்டம் தான். உங்கள மாறி பிரிவை என்னால் ரசிக்க முடியல. என்ன தான் நினைவோடு வாழ்ந்தாலும் எவ்ளோ நாள் தான் அதை ரசிக்க முடியும். எனக்கு பிரிவு சுகமானதா இல்ல.
மத்தபடி அடடா கவித கவித!!!
எல்லாம் சில காலம்.....
@reva
அடிப்பாவி நீ இதெல்லாம் எழுதியிருக்க எனக்குதான் தெரியல ,,, எல்லாமே அருமை அருமை..நீ எழுதியது இன்ப அதிர்ச்சி.
நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..