தோழிகளுக்கு காலைவணக்கம். நாங்கள்1 1/2 வருடமா இரண்டாவது குழந்தைக்காக முயற்சி செய்கிறோம் ஆனால் பலன் ஏதும் இல்லை. கடைசி 10 நாள் ஓய்வு எடுக்க சொல்லுராங்க ஆனால் என்னால் அப்படி இருக்க முடில வீட்டுல எல்லாம் நான் பார்த்து தான் ஆ வேண்டும். எல்லாருக்கும் ஓய்வு எடுக்க சந்தர்ப்பம் அமையாதுதானே. அப்படி இருக்கும் வேலையில் கர்பப்பைக்கு அழுத்தம் கொடுக்காத வேலைகளை கட்டுப்படுத்திக்களாம் அல்லவா.. கர்பப்பைக்கு அழுத்தம் கொடுக்கும் வேலைகள் என்னென்னவென்று சொல்லுங்கள்... இது எனக்கு மட்டுமல்ல குழந்தை எதிர்ப்பார்க்கும் அனைவருக்கும் உதவும்.. உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் தோழிகளே.....
divya
Thanks divya same doubts enakum eruku,nanum apadithan enakum work eruku pa,friends please help me this problem
Divya
பாரம் தூக்குறது .எக்சர்சைஸ் செய்யுறது ,அதிகம் பரபரப்போட டென்சனா இருக்கிறது ,மூச்சை பிடிச்சுக்கொண்டு எதையாவது புல் பண்ணுறது அதாவது இழுக்கிறது .இதெல்லாம் அழுத்தம் குடுக்கும் . நல்லதில்ல .
surejini
படி கட்டு ஏறுவது வீடு துடைப்பது இதெலாம் செய்யலாமா
திவ்யா
இப்ப பண்ண வேண்டாம். அது எல்லாமே கடின வேலைகள் தான் பக்கெட் ல தண்ணி தூக்குறது எவ்ளோ ரிஸ்க் தெரியுமா?
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
திவ்யா
உங்களுக்கு நேற்று மதியம் இருந்து அறுசுவை Open ஆச்சா?
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
abirajasekar
Enakum open ahala..
Jennisha
ஆமாம் பா. எனக்கும் Open ஆகல. பாபு அண்ணா வந்து சொன்னாதான் என்னனு தெரியும்.
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
எனக்கும் ஓபன் ஆகல :-)
நேற்று இரவுதான் எனக்கு தெரிய வந்தது. பிறகு எங்களது சர்வர் மெயிண்டைன் செய்யும் நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது, பிரச்சனை அங்கே இருப்பது தெரிய வந்தது. 12 மணி நேரத்திற்குள் சரியாகும் என்றார்கள். கிட்டத்திட்ட 20 மணி நேரம் ஆயிற்று. சில மணி நேரங்களில் சரியாகும் என்று அவர்கள் உறுதியளித்ததால், ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கவில்லை. ஆனால், அது நீண்ட நேரம் எடுத்துவிட்டது.
சிரமத்திற்கு வருந்துகின்றோம்.