
தேதி: January 12, 2016
எளிமையான துணி கைப்பிடி. சூடான பொருட்களை எடுப்பதற்கும், மைக்ரோவேவ் அவனில் இருந்து பொருட்களை எடுக்கவும் இதனை பயன்படுத்தலாம்.
சிவப்பு நிறத்தில் 9 அங்குல நீளம், 4 அங்குல அகலத்தில் இரண்டு இன்சுல்-பிரைட் அல்லது பேன்ட் துணி.
அதே அளவில் இரண்டு மஞ்சள் நிற துணிகள்.
அதற்கு பொருத்தமான அளவில் அரைவட்டமாக இரு துணிகள் மற்றும் அதற்கு லைனிங் துணிகள்.
வெட்டப்பட்ட துணிகள்.

சிவப்பு நிற துணி மற்றும் நடுவில் வைக்க எடுத்திருக்கும் பேன்ட் துணிகளை முட்டை வடிவில் வெட்டவும்.

மஞ்சள் துணியை அரை வட்டமாக வெட்டவும்.

அதேபோல் நீல நிற லைனிங் துணியையும் அரை வட்டமாக வெட்டவும். (பெருவிரல் நுழையும் இடத்தில் சற்று சிறியதாகவும், மற்ற விரல்கள் வைக்கும் பாகத்தை சற்றுப் பெரியதாகவும் வெட்டிக்கொள்ளவும்.)

மஞ்சள் துணியை நீல நிற லைனிங் துணி மேல் வைத்து தைக்கவும். தைத்ததை புரட்டி விடவும்

பேன்ட் துணி, மேலே சிவப்பு துணி, அதற்கு மேலே அரைவட்ட துண்டுகள், மீண்டும் இன்னுமொரு சிவப்பு துணி இப்படி அடுக்கி வைக்கவும்.

அதை அப்படியே தைக்கவும். ஒரு இன்ச் அளவிற்கு தைக்காமல் விட்டு அதன் வழியே புரட்டி எடுக்கவும்.

அந்த இடத்தையும் பின்னர் தைத்து முடிக்கவும்.

பானை பிடிக்கும் துணி ரெடி.

Comments
பாட் ஹோல்டர்
சூப்பர்! அறுசுவைக்கு ஏற்ற கைவினை. :-)
தைக்கப் போகிறேன். அடுத்த விடுமுறையில் தான் நேரம் கிடைக்கும். தைத்த பின் காட்டுகிறேன்.
- இமா க்றிஸ்
அன்பு இமா
பாராட்டுக்கு நன்றி.:)
அடுத்த விடுமுறைக்கு நானும் காத்திருக்கிறேன். படம் காட்டுவீங்கல்ல:))
நிகி அக்கா
நலமா..? ரொம்ப உபயோகமான பதிவு.. :-)
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
அன்பு கனி
நான் ரொம்ப நல்லா இருக்கேன்.:)
திருமணம் ஆனபின் ஆளையே காணோம். ரொம்ப பிசியா? வீட்டில் அனைவரும் நலம் தானே.
பாராட்டுக்கு நன்றி கனி:))
நிகி அக்கா
அம்மே.. திருமணம் ஆனபின்னா ...
நோ இன்னும் ஆகலையே உங்களுக்குலாம் சொல்லாம பண்ணுவேணா :-(.. வீட்டில் எல்லாரும் நலம்.. நீங்க குட்டிஸ்லாம் நலமா.?? அக்கா ரொம்ப ரொம்ப நாளாய்டுச்சு உங்க கிட்ட பேசி பேசணும் நு நினைப்பேன் அடிக்கடி.
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
அன்பு கனி
may month ......
fb varen kani
நிகிலா அக்கா
சூப்பர் சூப்பர். நேரமில்லைக்கா பதில் போடவே..பசங்க ளோட டைம் கரெக்ட்டா இருக்கு...பசங்க நல்லாயிருக்காங்களா?
அன்பு தோழி. தேவி
அன்பு தேவி
நன்றி. நன்றி.
பிசியா இருந்தால் தான் வாழ்க்கை ரசிக்கும். :))
பசங்க நல்ல இருக்காங்க தேவி.
உங்க வீட்டு குட்டிச் செல்லங்களை அன்புடன் விசாரிக்கிறேன்:))
நிகிலா
ஈசியா இருக்கு.சூப்பர்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
அன்பு முசி
மிக்க நன்றி. முயற்சித்து பாருங்கள்:))
வணக்கம் பெண்கள் உடை தைக்கும்
வணக்கம் பெண்கள் உடை தைக்கும் போது ஏற்படும் சந்தேகங்களுக்கு எளிய முறையில் விளக்கம் தருகிறேன்
vasugi akka
தையலில் நிறைய சந்தேகங்கள் இருக்கு...email I'd koduthinganna யூஷ்புல்லா இருக்கும்.அறுசுவையிலே கேட்கவா? பதில் போடுங்கள் ப்ளிஷ்
அன்பு தோழி. தேவி