எனக்கு இப்போ 3ஆவது மாதம் அடிக்கடி அடி வயிறு வலிக்குது. இப்போ கூட வலி இருக்கு அதான் விடி காலை என்றும் பாராமல் பதிவிடுறேன்.என்னோட ஸ்கேன் ரிப்போட் நார்மல். அதனால் கொஞ்சம் திருப்தி ஆனாலும் வயிறு ஏன் வலிக்கிறது என்று குழப்பமாக உள்ளது. தயவு செய்து உதவுங்கள்..
divya
வழக்கத்துக்கு மாறா நீங்கள் உணவுகளில் மாற்றம் செய்றதாலயும் தலைக்கு குளிக்கிறதை குறைத்து கொள்ளுறதாலயும் பிறக்னன்சியால உடம்பில ஏற்படுற ஹார்மோன் சேஞ் எல்லாம் சேந்து உடம்பில சூடு தங்கி இருந்தாலும் இதே மாதிரி செய்யும்.ஆனா இதுதான் காரணம் என்பதற்கில்லை.உங்கள் வீட்டு பெரியவர்களிடமும் கேட்டுக்கொள்ளுங்கள்.
தயிர் சாப்பிட்டு பாருங்கோ
surejini
ரொம்ப நன்றி Sister.... எனக்கு முதல் குழந்தைக்கு Vomiting இருந்துச்சு இந்த குழந்தைக்கு அப்படிலாம் இல்லை நார்மலா இருக்கேன் ஆனால் கொஞ்ச நேரம் வேலை பார்த்தாலே நெஞ்ச இருக்கி பிடிச்ச மாறி பட படன்னு மூச்சு வாங்கிகிட்டு கண்ண மறைக்குது. இதையும் தாங்கிட்டு வேலையை பார்க்கும் போது தலை சுத்தி கீழ தள்ளுர மாறி இருக்கு இது நார்லா இல்ல டாக்டர பார்க்கலாமா... pls suggest me
divyaselvam
divya ungalukku adi vaiyuru illuththu pudikira mathiri valicha vilakennai ya thadavunga, dailyum night vendhayam ooravechudu padunga morning verum vaiyuthula sapidunga.
haseen
Thank u sister.. கண்டிப்பாக செய்கிறேன்....
தோழிகள் உதவுங்கள்
நேற்று மாலை படுத்துருந்து எழுந்திருக்கும் போது எப்படி எழுந்தேன் என்று தெரியலை எழுந்ததும் அடி வயிற்றில் இடது பக்கமாக சட்டென வலித்தது இன்று வரை வலி அப்பப்போ இருக்குது அதும் உட்காரும் போது குனியும் போது இப்படி அந்த இடத்தில் அழுத்தம் ஏற்படும் போதுலாம் வலிக்கிறது. இப்போ எனக்கு 3வது மாதம் தொடங்கியுள்ளது. எனக்கு நான் ஏடாகூடாமாக. எழுந்ததால் குழந்தைக்கு எதும் ஆகிருக்குமோன்னு பயமா இருக்கு Pls. இதனால் எதும் பிரச்சனை வருமா.சொல்லுங்க Pls
frnds
தோழிகளிடம் ஒன்று கேட்கிறேன் பதில் தாருங்கள். தவறு இருந்தால் யாரும் திட்டிராதிங்க சரியா தவறா என்று தெரியாமல் கேட்கிறேன்.. எனக்கு இப்போ 4மாதம் நான் தையல் மெஷின்ல தைக்கலாமா... தைக்க ஆசையாக உள்ளது ஆனால் செய்யலாமா கூடாதான்னு தெரிலை அதான் கேட்கிறேன்... pls பதில் சொல்லுங்க.....
Hi dhivya selvam
Good news ah, super. Romba sandhosham. Strain panikadhinga. Help ku yarayachum vechukanga pa. Papa epdi iruka?
தையல்
//தவறு இருந்தால் யாரும் திட்டிராதிங்க// கர்ர்ர்.. ;)) //சரியா தவறா என்று தெரியாமல் கேட்கிறேன்.// கேட்காமல் இருந்தால்தான் தப்பு.
//எனக்கு இப்போ 4மாதம் நான் தையல் மெஷின்ல தைக்கலாமா.// இப்போ எல்லா மெஷினுமே மோட்டர் கூட வருது. அதுல தைக்கிறது எவ்வளவு வேணுமானாலும் தைக்கலாம், அதிக நேரம் உட்கார முடிஞ்சா. மிதிக்கிற மெஷினானால்கூட கொஞ்சமா தைக்கிறதுல ஒன்றும் ஆகாது. இடைல இடைல கொஞ்சம் நேரம் ஓய்வெ எடுத்துக்கலாம்.
//ஆனால் செய்யலாமா கூடாதா// ஆம், என்று சொல்லப் பயமா இருக்கு எனக்கு. நான் தைச்சு இருக்கிறேன். இப்போ சிகிச்சையின் பின்தான் குழந்தை என்று இருக்கிற காலமா இருக்கு. உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாம குழந்தை தங்கியிருந்தால் & இதுவரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருந்திருந்தால் இதனால் பிரச்சினை எதுவும் இருக்கக் கூடாது. பயமில்லாமல் எதைச் செய்தாலும் ஒன்றும் ஆவதில்லை. விருப்பமான மாதிரி இருங்க. சந்தோஷமா இருங்க.
ம்... பாப்பாவுக்கு துணியா! :-) கலக்குங்க. நான் ஒரே டிசைன்ல நாலைஞ்சு கலர்ல துணி எடுத்து எனக்கு பெட் ஜாக்கட் தைச்சிருந்தேன். எல்லாம் ஒரே கட்டிங், ஒரே லேஸ். ஹாஸ்பிட்டல்ல எல்லோரும் கேட்டாங்க, எந்தக் கடைல இப்பிடி விக்குது என்று. :-) சின்னவர் பிறக்க முன் கரண்ட் தினமும் ஒன்றிரண்டு மணி நேரம்தான் கிடைச்சுது. அப்போ தைச்சது எல்லாம் மிதித்தேதான். இத்தனைக்கும் கருவைச் சுமந்த காலம் முழுக்க பிரச்சினையோடுதான் கடந்தேன். ஆனாலும் ரசித்துச் செய்த தையலை விடவில்லை. பெரியவருக்கு அப்போ 3 வயது. குளிக்கப் போகும் முன் மெஷின் அருகே வந்து நிற்பார். ;-) உடனே ஜட்டி தைத்துக் கொடுத்தாக வேண்டும். குட்டிக் குட்டித் துணியெல்லாம் டிசைனாகப் பொருத்தித் தைத்துக் கொடுப்பேன். :-) பழசையெல்லாம் நினைக்க வைச்சீங்க. தாங்க்ஸ் திவ்யா. :-)
- இமா க்றிஸ்
imma
அய்யோ..!!உங்க அளவுக்கு எனக்கு தையலில் அனுபவம் அஇல்லை... மெஷின் அடிக்க தெரியும். எனக்கு மட்டும் சட்டை தைப்பேன்.அதும் பக்கத்து வீட்டு Auntyta கேட்டு தான் தெரிஞ்சுகிட்டேன். பாப்பாக்கு பட்டு பாவாடை ட்ரை பன்னி பார்த்தே ஏதோ ஓரளவு வந்தது அவளுக்கு போட்டும் அழகு பார்த்துட்டேன். பாப்பா School போனதும் தையல் பயிற்சிக்கு போகலாம்னு நினைத்தேன். இப்போ இன்னும் 2வருடம் கழித்து தான் போக முடியும்.சும்மா நெட்ல பார்த்து ட்ரை பன்னாலாம்னு தான் தைக்கலாமான்னு கேட்டேன். எனக்கு தைக்க தெரிலைன்னாலும் எனக்கு அதில் ஆர்வம் அதிகம். முடிந்த வரை முயற்சி செய்து அதில் முழுமையாக இல்லைன்னாலும் ஏதோ கொஞ்சம் வெற்றி கண்டு சந்தோசம் பட்டுக்குவேன். நீங்க சொன்னதுக்கு அப்பரம் தான் எனக்கும் குழந்தைக்காக ஏதேனும் தைக்கனும்னு ஆசை வந்துருச்சு. கண்டிப்பா தைப்பேன்... ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி இம்மா sister.
poorani sister
Thanks sister....Pappa fine pa.. helpku aal irukanga.. na careful ah than iruken.. unga pappa epadi irukanga..