கர்ப்பமாகும் போது ஏற்படும் சந்தேகம்

அனைவருக்கும் வணக்கம்,
எனக்கு மாதவிடாய் 28-30 நாட்களுக்கு உட்பட்டது தான். திருமணமாகி 2 மாதங்கள். சில வாரங்களுக்கு முன் முதல் தடவையாக கருவுற்றேன் வீட்டில் சிறுநீர் பரிசோதனையில் 1-2 வாரங்கள் என காட்டியது, இரத்தப் பரிசோதனையிலும் அப்படித்தான், ஆனால் கருவுற்ற நாளில் இருந்து வயிற்று நோவாகவே இருந்தது, திடீர்னு வயிற்று நோவு அதிகரித்து மாதவிடாய் வந்துவிட்டது,
*எதனால் எனக்கு இப்படி ஆகியிருக்கும்?
*கருவுற்றிருக்கும் போது வயிற்று நோவு இருப்பது சகஜமா?
*இன்னும் இப்படித்தான் எனக்கு நடக்குமா?
*அடுத்தமுறை கருவுற்றிருக்கும் போது எவ்வாறான உணவுகள் உட்கொள்ள வேண்டும்,&எந்தவகையான உணவுகள் தவிர்க்க வேண்டும்?
தயவு செய்து யாராவது விளக்கம் அளிபீர்களா???..........

1. கரு சரியாக பதியம் பண்ணாமல் விட்டிருக்கும் .சரியாக பதியம் பண்ணாத கரு 3 வாரத்துக்குள் தானே கலையும் இயல்புடையது .அதானால்தான் 3 வாரத்துக்குள் கலைந்த கருவை அபோஷன் என்பதை விட பீரியட் போல் எடுத்துக்கொள்கிறார்கள் மருத்துவர்கள்.

2.எல்லோருக்கும் இல்ல கருவுறுதல் நடக்கும்போது சிலருக்கு இருக்கும்.பலருக்கு உணர்ந்து கொள்ளுமளவு அதிகமாக இருக்காது.

3.தவறான சிந்தனை.

4.வழக்கம் போல சாதாரணமா இருந்தால் போதும்.பயம் இருந்தால் உங்கள் வீட்டு பெரியவர்கள் தவிர்க்க சொல்லும் உணவுகளை கண்ணை மூடிக்கொண்டு தவிர்க்கலாம்.எந்த உணவும் இந்த உலகத்தை விட்டு அழியாது அந்தத்த நேரத்துக்கு எது அவசியமோ அதை எடுத்துக்கொள்ளலாம்.

எல்லாருக்கும் தெரிந்திருக்கும்னு நினைக்கேன் நாள் தள்ளிருக்கும் போது Contact வைத்துக்கொள்ள கூடாது. அப்போது கூட Abort ஆக வாய்ப்பு உள்ளது

@surejini விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி

@dhivyaselvam 28 நாள் இடைவெளியில் மாதவிடாய் வருமெனில் மாதவிடாய் வந்து 28 நாள் நெருங்கும் நாட்களில் இருந்து உறவு வைத்து கொள்ளக் கூடாதா?
சரியான விளக்கம் தரமுடியுமா,,,

hm..amam periodsdate varuvathrku 5 days munna contact vaithu kolla kudathu thozhi....

மாதவிடாய் வருவதற்கு 5 நாட்கள் முன்னாடி Contact வைக்க கூடாது. அதே போல் மாதவிடாய் தள்ளிருக்கும் காலங்களிலும் கர்பமாக இருக்கும் முதல் 3 மாதங்களிலும் உறவு வைத்துக்கொள்ள கூடாது.

Ramyaviji ,dhivyaselvam விளக்கம் அளித்ததற்கு இருவருக்கும் மிக்க நன்றி

mail anupiruken. pathutu reply pannunga sis

karpagamnishok தயவு செய்து எதுவாக இருந்தாலும் இங்கு கூறமுடியுமா

sis mail panniruken paarunga and yenakku therinjadha solliruken but mattra arusuvai thozhigal kitta kelunga sis adha paththi therinjavanga ungalukku help pannuvanga...

SUCCESS When our SIGNATURE changes to AUTOGRAPH, this marks the SUCCESS. - Dr. A.P. J. Abdul Kalam.

மேலும் சில பதிவுகள்