குழந்தையை அடிக்கும் போது

எனக்கு 6 மாத‌ பெண் குழந்தை உள்ளது. குழந்தையை யாராவது அடித்தால் என்ன‌ செய்வது. என் கணவருடைய‌ மாமா ஒருமுறை என் குழந்தையை அடித்துவிட்டார். இனி என் குழந்தையை தூக்காதீர்கள் என்று கோபத்தில் அவரை திட்டி விட்டேன். அவர் என்னிடம் பேசுவதில்லை. நான் அவரிடம் பலமுறை மன்னிப்பும் கேட்டுவிட்டேன். என் மாமியாருக்கு தங்கை (சின்ன‌ மாமியார்). சமீப‌ காலத்தில் தான் என் குழந்தையை பார்த்தார். பார்த்த‌ உடனே தொடை, கன்னதில் கிள்ளி விட்டார். குழந்தை வீல் என்று அழுதது பொறுக்க‌ முடியாமல் நானும் அழுதேன். அதில் இருந்து அவரும் குழந்தையை தூக்குவது இல்லை.
குழந்தையை அடித்தால் நான் எப்படி ரியாக்ட் பண்ணுவது.

//குழந்தையை அடித்தால் நான் எப்படி ரியாக்ட் பண்ணுவது.// ரியாக்க்ஷன் தானாக வருவது. இப்படித் தான் ரியாக்ட் பண்ண வேண்டும் என்று நினைத்து, ப்ளான் பண்ணினால்... அது நடிப்பு இல்லையா! :-)

குழந்தையை யாராவது அடித்தால்... "ஆஹா! அதான் சரி நல்லா அடிங்க," என்று சொல்ல முடியுமா! ம்... அப்படிப் பெற்றோரையும் பார்த்திருக்கிறேன். "நல்..லா அடி குடுங்க டீச்சர்," என்பாங்க. :-)

உங்களை யாராவது நேசமாகக் கிள்ளினால் கூட வலித்தால் உங்கள் முகம் காட்டிக் கொடுத்துவிடும் இல்லையா! குழந்தைக்கு வலித்தால் மறைக்கத் தெரியாது. இது 'உங்கள்' குழந்தை. ஆனாலும், அடிப்பதற்கு உங்களுக்கு உரிமை கிடையாது. இங்கென்றால், சைல்ட் ஆப்யூஸ் - தண்டனைக்குரிய குற்றம்.

6 மாதக் குழந்தைக்கு ஏன் அடிக்கிறாங்க!!! அதற்கு குறும்பு கூடத் தெரியாதே!! ;(

குழந்தைக்கு இம்சை கொடுக்கும்படியான செய்கைகளை அன்பு என்பதாக எடுத்துக் கொள்ள இயலாது. இது குழந்தைகள் உடலை மட்டுமல்லாமல் மனதையும் அவர்கள் வளர்ச்சியையும் கூட பாதிக்கும் விடயம்.

ஒரு விஷயம் சொல்ல நினைக்கிறேன். ஆனால் நான் சொல்வது எதுவும் உங்களைத் தூண்டி விடுவதாகிவிடக் கூடாது என்கிற பயமும் இருக்கிறது. :-) குழந்தை படும் சிமத்தை ஒரு பக்கம் வைத்துவிடலாம். இப்போ பல்லைக் கடித்துக் கொண்டு நீங்கள் பொறுத்துக் கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். புரிய வேண்டியவர்களுக்கு எப்படிப் புரியப் போகிறது! குழந்தை வளர வளர அதன் குறும்புகள், நிலமையை இன்னும் மோசமாக்கலாம். உரிமையுடன் அவர்கள் தொடருவார்கள். 2 வயது ஆகிய பின் குழந்தையைப் பாதிக்கும் எந்த நிகழ்வும் அதன் மனதில் தங்கிவிடும். பிடிப்பின்மை தொந்தரவு செய்பவர்கள் மேல் மட்டும்தான் வரும் என்பதில்லை. எப்போதாவது, அம்மா தன்னைப் பாதுகாக்க வேண்டிய இடத்தில் கண்டுகொள்ளாமல் விட்டார்கள் என்கிற சிந்தனை, துக்கம் வரலாம். உங்களிடம் சொல்லியும் காட்டலாம்.

நீங்க அம்மா. இன்னொருவர் சொல்லிக் கொடுக்காமலே உங்கள் குழந்தைக்கு எது நல்லது, எது நல்லதல்ல என்பது தெரியும். உறவுகளும் முக்கியம்; குழந்தையும் முக்கியம். சந்தர்ப்பத்தைப் பொறுத்து நடந்துகொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

பொதுவாக‌ உங்களில் சிலர் தங்களின் தற்போதைய‌ வசிப்பிடம் பற்றிக் கூட‌ தெரிவிப்பதில்லை. தங்கள் குழந்தைகளுக்கான‌ உணவு, மருத்துவம், வேறுவிதமான தேவைகள் குறித்து நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு (எங்களுக்கு பதில் தெரிந்தாலும் அவை அனைத்தும் நீங்கள் வ்சிக்கும் இடத்தில் கிடைக்குமா கிடைக்காதா என்று தெரியாமல்) எப்படி உடனே பதில் தரமுடியும் என்று தெரியவில்லை.
ஒரு அனுமானமாகத்தான் பதில் தரவேண்டியுள்ளது.
முதலில் குழந்தையை யாராவது தூக்கிக் கொஞ்ச‌ விரும்பினால்
நீங்கள் முன் ஜாக்கிரதையாக‌ குழந்தையிடம் அந்த‌ மாமா போல‌ இந்த‌ மாமா உன்னை கிள்ளமாட்டார் அடிக்க‌ மாட்டார் தைரியமாகப் போடா
கண்ணு என்று சொல்லிக் கொடுங்கள் அப்புறம் ஏன் அவர்கள் அடிக்கிறார்கள்.
இது இன்னொரு அம்மாவிற்கு என் குழந்தையைச் சோனி என்கிறார்களே, இன்னும் பேசவில்லையே சாடை தானே காட்டுகிறான்
இதெல்லாம் என்ன கவலை புரியவில்லை. குழந்தை என்ன‌ சாவியைத்
திருகினால் ஆடிப் பாடும் பொம்மையா, ஒன்பது மாதக் குழந்தைக்கும் பதினோரு மாதக் குழந்தைக்கும் ஏறக்குறைய‌ இரண்டு
மாதங்கள் இடையே உள்ளன‌.
நீங்கள், உங்கள் இருவரின் பெற்றோர் நீங்கள் யாரோடு ஒப்பிட்டுப்
பார்க்கீறீர்களோ அவர்கள் அவர்கள் பெற்றோர் இத்தனை பேரின்
பாரம்பரியத்தின் வாரிசுகள் உங்கள் குழந்தைகள் (தற்காலத்தில் இதை
ஜீன்ஸ் என்கிறோம்). இதை மறக்கக்கூடாது. பாலூட்டும் தாய்களானால் பாலூட்டும்போது அணுவளவுகூட‌ பிறகுழந்தைகளோடு
தன் குழந்தையை ஒப்பிட்டு எண்ணுவதே கூடாது என்பதே என்கருத்து.
நீங்களும் உங்கள் குழந்தையும் ஒரு தனி உலகம் என்பதை மறக்கக் கூடாது, வாய்விட்டு உங்கள் குழந்தையோடு பேசுங்கள். பிறகு????????
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Hi Saranya... Yentha oru thaaikum avanga baby a yaarum adichalo thitinalo kovam vara dhan seiyum ithu dhan iyarkai.. Aana kovathla vaarthaikala paarthu use pannanum.. Unga kanavaroda mama ta kuzhanthaiya adikathinga nu sollirukalam..kuzhanthaiya adichi athu valila azharatha panrathu la yena iruku avangalkum..solli paarunga yaara irunthalum.. Apdiyum purinjikala vitrunga.. Yethum important o athuku 1st priority kodunga.. Avanga paesnum nu kuzhanthaiya adi vanga vitda kudathu.. Avanga purinjikalana pogatum.. Unga husband purinjikitar la unga situation yena nu..

ithuvum kadanthu pogum

மேலும் சில பதிவுகள்