மாதவிலக்கு பிரச்சனை.,....

ஹாய் ப்ரண்ட்ஸ்.....
எனக்கு குழந்தை பிறந்து எட்டு மாதங்கள் ஆகிறது இன்னும் எனக்கு மாசம் வரவே இல்ல.அம்மா சொன்னாங்க தாய்ப்பால் கொடுக்கறனால அப்படி தான் இருக்கும்னு சொன்னாங்க.அப்படி தான்.இருக்குமா ப்ரண்ட்ஸ். இல்ல டாக்டர்ட்ட.காமிக்கலாமா பதில் கூறுகள் தோழிகளே....

//தாய்ப்பால் கொடுக்கறனால அப்படி தான் இருக்கும்னு சொன்னாங்க.//அப்படித்தான் இருக்கணும் என்று இல்லை; அப்படியும் இருக்கலாம்.

//டாக்டர்ட்ட.காமிக்கலாமா// இது பிரச்சினையான விஷயம் அல்ல. பெரும்பாலானோர்க்கு இப்படி இருப்பது உண்டு.

நீங்கள் கர்ப்பம் இல்லை என்பது நிச்சயம் தெரியுமா!

‍- இமா க்றிஸ்

சிலருக்கு ஆறுமாதம் சிலருக்கு ஒருவருடம் வரை மாத விலகு வரமால் இருக்கும். ஒரு வருட மேல் ஆகியும் குழந்தைக்கு பால் கொடுப்பது நிறுத்தியும் தீட்டு படமால் இருந்தால் மருத்துவரை பாருங்கள்.

Sari pa thaks

எனக்குத் தெரிந்த இருவர்... முதல் குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டு இருக்கவே கருத்தரித்தார்கள். இரண்டு குழந்தைகளுக்கும் வயது ஒரு வருடத்தை விடக் குறைவான இடைவெளிதான். பத்திரம்.

‍- இமா க்றிஸ்

hai asma how are you & your baby? innum neenga baby birth ku apparam periods aagalaya? illa date maththi maththi varuma? innum aagalana doctor a poi paarunga, irregular na tips solren. exercise pannunga, karupatti sapidunga pappaly palam annasi sapidunga. feedinga la iruntha irregular aagum body la blood increase pannanum.

பெண்ணால் எதையும் சாதிக்க முடியும்

எனக்கு குழந்தை பிறந்து 9 மாதம் ஆகிறது..4வது மாதமே பீரியட் வந்துவிட்டது..இரு மாதம் 28 நாள்ல வந்தது..ஆனால் பின் 3 மாதமும் 20 நாளில் வந்து விட்டது.. எதனால் இப்படி.. எனக்கு எதுவூம் பிரச்சனையோன்னு பயமாருக்கு... யாராது சொல்லுங்கள்

பிரச்சினை ஒன்றும் இராது. ப்ளீடிங் அதிகமாக இருந்தால் டாக்டரைக் கலந்தாலோசிக்கலாம்.

உங்களுக்கு 28 நாள் சுழற்சி என்றால் அதற்கு மேல் தாமதமானால் கர்ப்பமாக இருக்கலாம். அப்படி ஆகாமல் கவனமாக இருங்கள்.

‍- இமா க்றிஸ்

நன்றி... imma மேடம்..என் கணவர் வெளியூரில் வேலை பார்க்கிறார்.....இப்படி 20 நாளில் வருவதனால் உடல் பலவீனம் ஆகுமோ...

//20 நாளில் வருவதனால் உடல் பலவீனம் ஆகுமோ...// ஆகாது. பொதுவாக மாதாந்தம் எம் உடல் இழப்பது... 50 மில்லிலீட்டரை விடக் குறைவான இரத்தம் தான். சிலருக்கு இதை விடக் குறைவாக இருக்கும். சிலருக்கு சற்று அதிகமாக இருக்கும். ஆனால் உடல் தானாக அடுத்த மாதவிலக்கு வரும் முன் இழந்த இரத்தத்தை ஈடுகட்டிவிடும். பிரசவத்தின் போது அதிக இரத்த இழப்பு ஏற்படும். அப்போது கூட உடல் பெரிதாக பலவீனமாவது இல்லை. யோசிக்க வேண்டாம். இரத்தப் போக்கு வெகு அதிகம் என்று தோன்றினால் போய்க் காட்டிருங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்