அன்புள்ள தோழிகளே!
எனக்கு ஒரு 2 வீலர் வாங்கவேண்டும். வெயிட் குறைவாக,ஷாப்பிங் திங்க்ஸ் வைக்க வசதியாக, எல்லாவிதத்தில்யும் நமக்கு ஏற்ற வண்டி எது என்று சொல்லவும்.
இன்டர்நெட் பூராவும் அலசி ஆராய்ச்சி பண்ணியாச்சு. இருந்தாலும் அனுபவசாலிகளின் மேலான ஆலோசனைகள் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
ஹோண்டா ஆக்டிவா வெயிட் அதிகம் என்று சொல்கிறார்கள். ஸ்கூட்டி பெப் + தான் வச்சிருக்கேன்.
ரீ சேல் வேல்யூ பற்றி கவலையில்லை. எனக்கு 35 வயது ஆகிறது. எளிதான வண்டி எது என்று ஆலோசனைகள் வழங்க வேண்டுகிறேன்.
நன்றி!
டூவிலர்
திவ்யா வெயிட் குறைவாக வேண்டும் என்றால் நிச்சயம் ஹோண்டா ஆக்டிவா பிடிக்காது உங்களுக்கு...நான் நாலு வருடமாக Yamaha ray யூஸ் பண்றேன்..
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.வெயிட்டும் அதிகம் இல்லை..இப்போ பெப் யூஸ் பண்றதா சொல்லிருக்கீங்க...நிச்சயம் உங்களால ஆக்டிவா யூஸ் பண்ண முடியாது..அது ரொம்ப வெயிட்..நான் 4,5 முறை ஆக்டிவா ஓட்டி பார்த்திருக்கேன். என்னால ஓட்ட முடியல..ஏன் சொல்ல நகர்த்த கூட முடியல...
Honda Dio நல்லா இருக்கிறதா கேள்விபட்டேன்..Mahindra Duro வும் நல்லா இருக்கும்..
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
டூவீலர்
நான் இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா தான் வைத்திருந்தேன்.. பழக ஆரம்பித்ததே அதில் தான்..வெயிட் ஜாஸ்தி தான்..பட் பழகி விட்டால் எளிதான வண்டி☺
அன்புடன்,
கவிதா.
anbe sivam