எனது பையனுக்கு 3 நாட்களாக உடம்பு மிகவும் குலிங்க்காக உள்ளது கை, கால் எல்லம் சில்லென்டு இருக்கிரது எப்போதுமே please யாரது சொல்லுங்க ஏன் இப்படி இருக்கிரது என்ரு. Anaal 3 days munpu varai udambu heat aka than irunthathu.. Ipa 3 naatkalaka than Ipadi ulathu. Please yarathu yen Ipadi irukirathu entru kurungal.. Please
அன்புள்ள திவ்யாபிரபாகரன்
அன்புள்ள திவ்யா கேள்வியைக் கேட்கும்போது குழந்தையின் வயதை
(இத்தனை வயது என்று குறிப்பிட்டால் பதில் சொல்ல வசதியாக இருக்கும். வயதுக்கு ஏற்றால் போல மருந்தும் அளவும் சில நேரங்களில் மாறும், இதை நினைவில் கொள்வது மிகவும் நல்லது.
எப்போதும் தெர்மாமீட்டர் கையில் (வீட்டில்) இருப்பது நல்லது. அவ்வப்போது குழந்தையில் உடல் சூட்டைக் கணிக்க உதவும்.
வேப்ப எண்ணெய் இருந்தால் இரண்டு சொட்டு உள்ளங்காலில் நன்கு
சூடு பறக்கத் தேய்த்து விடுங்கள். கைகளில் தடவினால் குழந்தை நக்குவதற்கு வாய்ப்பு உண்டு, அதனால் வாந்தி எடுக்கும், அதனால் காலில் மட்டுமே தடவுங்கள்.
நாட்டு மருந்து கடைகளில் மாந்த எண்ணெய் என்று கேட்டால் தருவார்கள் . அதையும் தடவலாம். பதிவிடும் போது பதற்றம் இல்லாமல் பதிவிட்டால் தெளிவாகப் புரியும்.
அன்புடன் பூங்கோதை கண்ணம்மாள்.
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
நன்றி அம்மா. 2 மாதம் ஆகின்றது
நன்றி அம்மா. 2 மாதம் ஆகின்றது பையன்க்கு கனமான துன்டு வைத்து பொத்தியிருந்தால் உடம்பு சூடாக உள்ளது சிறிது துன்டை எடுத்து விட்டாலும் உடனே சில் என்று ஆகி விடுகிறது அதுபோல் கையில் வைத்திருந்தால் மட்டுமே உறங்குகின்றான் தொட்டியில் போட்ட உடனே முழித்து விடுகிறான் ஏன் எழுந்து விடுகிறான் உடம்பு நொர்மல் அக இருக்க என்ன செய்ய வேண்டும்.. Please pathi kurungkal
அன்புள்ள திவ்யாபிரபாகரன்
அன்புள்ள திவ்யா, அறுபது நாள் குழந்தை மிக மிக மென்மையாகக்
கையாள வேண்டும். முகர்ந்தால் வாடிவிடும் அனிச்சமலர் போல.
டர்க்கி டவல் போல் மிக கனமாகப் போர்த்தாமல் நீங்கள் உடுத்தியிருந்த
காட்டன் புடவையைப் போர்வையாகப் போத்தவும். தாயின் புடவை வாசம் தன் மேல் இருப்பதால் தான் தாயின் மடியில் தான் இருக்கிறோம்
என்று நினைத்து குழந்தை அமைதியாகத் தூங்கும். முயன்று பாருங்கள். குழந்தை அமைதியானால் குழந்தையுடன் எப்போதும் உங்கள் புடவைத்துணி இருக்கும் படிப் பார்த்து கொள்ளவும், உங்களுடைய ப்ழைய காட்டன் புடவைகளைப் பயன படுத்தவும்.
நரிக்குறவர் தாய்மார்கள் குழந்தைகளை தங்கள் நெஞ்சோடு சேர்த்துக்
கட்டிக் கொண்டு இருப்பதைப் பார்த்து இருப்பீர்கள்,
குழந்தை தானாகத் தவழும் வரை கொஞ்சம் அன்புத் தொல்லை தான்
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
poongothaikannammal
poongothaikannammal அவர்களே...... தயவுகூர்ந்து என்னுடைய கேள்விக்கும் பதில்லலியுங்கள் ......
Pls......
"மாற்றம் ஒன்று மட்டுமே என்றும் மாறாதது"
அன்புள்ள லோகேஷ்க்கு
அன்புள்ள லோகேஷுக்கு வாழ்த்துக்கள் (தந்தையானதற்கு). முதலில் குழந்தையின் வயிற்றுப் பொருமலுக்கு(மொத்த வயிற்றுக் கோளாறுகளுக்கும்) ஓமம் (அஜ்வைன்) இதை ஒரு 25 கிராம் அளவு
எடுத்து மண் சட்டி இருந்தால் நல்லது, இல்லையானால் இரும்புக் கடாயில் போட்டு நன்கு வறுக்கவும். நன்கு பொரிந்து பொரிந்து கரியாகி
தீப் பிடிப்பது போல் பிடித்து கரி கரியாக கரியும். கீழே இறக்கி இடிக்கும் குழவி இருந்தால் அல்லது அம்மி இருந்தாலும் அதில் வைத்து
நுணுக்கி பொடியாக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு
சிட்டிகை அளவு எடுத்து தேனில் கண்ணாடிக் கிண்ணம் அல்லது நல்ல வெற்றிலையில் வைத்து குழைத்து குழந்தையின் நாக்கில் தடவி விடவும். கரிந்த ஓமம் கசக்கும். அதனால் தான் தேனோடு சேர்த்துத் தருவது. பாலாடை இருந்தால் ஆறிய சுடு தண்ணீருடன் தேனையும்,
கருக்கின ஓமப் பொடியையும் நன்கு கரைத்து ஊற்றி விடவும்.
உங்களுக்கு வசதி இருந்தால் ஒரு சின்ன வெள்ளிப் பாலாடை வாங்கி
அதில் மருந்துகளை குழந்தைக்குப் புகட்டுங்கள். இல்லையானால்,
சங்கு, நல்ல பீங்கான் பாலாடை நல்லது. மற்ற உலோகங்கள்
மருந்துகளை முறித்து விடும், வெற்றிலை இல்லை என்று வாழை இலையைப் பயன்படுத்த வேண்டாம், அல்லது சின்ன குழிவான சந்தனக் கல், மருந்து உரைக்கும் உரைகல், அல்லது மார்பிள் கல்
படகு போலவும் இப்போது கிடைக்கிறது இவற்றில் எது கிடைக்கிறதோ
அதைப் பயன் படுத்திக் கொள்ளவும், சில பல நேரங்களில் குழந்தைகள் மருந்து குடிக்க பால் குடிக்க மறுத்து அடம் பிடிக்கும்.
அப்போது குடிக்க வைக்க உதவுவது பாலாடை தான். அதன் ஓரங்களைக் கையால் நன்கு தடவி மழுமழுப்பாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும் (இல்லையானால் குழந்தையின் உதடுகளையும் நாக்கையும் காயப் படுத்தி விடும். கூடுமானவரை ஸ்பூனைப் ப்யன் படுத்தாதீர்கள், உணவு ஊட்டும் காலங்களில் கூடுமானவரை தாய் தன் கையால் ஊட்டுவதே சிறந்தது, தாய்க்கும் சேய்க்கும் நல்ல பாசம்
உருவாகும். அதே ஓமத்தை நன்கு வறுத்து (கருகாமல் வறுக்கவும்)
தாய் குடிக்கும் வெந்நீரில் போட்டு நன்கு கொதித்த பின் குடி நீராகப்
பயன் பயன்படுத்தவும். அது பொதுவாக காற்று, தண்ணீர், கெட்டுப் போன உணவுகள், உடல் உஷ்ணம் இவற்றால் ஏற்படும் வயிற்றுக்
கோளாறுகளை 90 % நீக்கி விடும், குழந்தையின் ஆசன வாயில்
தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் இரண்டு சொட்டுக்களை அவ்வப்போது தடவி விடவும், சிவப்பு மாறும்.
முக்கி மலம் கழிப்பதால் ஆசன வாயில் ஏற்படும் ரத்தக் காயம் ஆறும்.
விளகெண்ணெய் உங்கள் வீட்டில் ப்யன்படுத்தும் வழக்கம் இருந்தால்
கை கால் இடுக்குகள் அக்குள், கால் கை மடிப்புகள், உச்சித் தலைக்
குழிவு எலும்பு மூடாத பகுதி தினமும் காலையில் இந்த இடங்களில்
ஒவ்வொரு சொட்டு தடவி விடவும். சூடு குறையும் பாலின் வாசத்திற்கு
பூச்சிகள் குழந்தையின் அருகே கூட வராது.
மேலும் மற்ற ஐய்ங்களுக்கு குழந்தைகள் தலைப்பிலேயே சென்று
பொறுமையாகப் பாருங்கள், குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள்.

Poongothai amma fever
Poongothai amma fever paiyanuku pls reply pannuga missagirumonu tha inga keta amma thapa ninaigathiga.