கர்ப்பகால முதுகுவலி

வணக்கம் தோழிகளே,
எனக்கு இப்பொழுது எட்டாவது மாதம். இது எனக்கு இரண்டாவது குழந்தை. முதல் குழந்தைக்கு ஆறு வயதாகிறது. எனக்கு 6 மாதத்தில் இருந்தே முதுகு வலி உள்ளது. முதலில் மாலை நேரங்களில் ஆரம்பித்த வலி இப்பொழுது பகல் 12 மணியிலேயே ஆரம்பித்து விடுகிறது. உட்காரும் போது குஷன் வைத்து தான் உட்காருகிறேன். கீரை, பால், பழங்கள், டாக்டர் கொடுத்த மருந்து மாத்திரைகள் என அனைத்தும் தவறாமல் அளவோடு சாப்பிடுகிறேன். இப்பொழுது மாலை நேரங்களில் இடுப்புக்கு சுடு தண்ணீர் ஊற்றுகிறேன். அப்படி ஊற்றினால் சிறிது நேரம் வலி இல்லாமல் உள்ளது. மறுபடியும் வலி வருகிறது. இதற்கு ஏதேனும் வேறு தீர்வுகள் இருக்கிறதா தோழிகளே?

எனக்கு யாராவது பதில் சொல்லுங்களேன்.. :-)

அவந்திகா

வயிற்றில் உள்ள குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்கும் போது முதுகுவலி வரும் என்று சொல்வார்கள். தாங்க‌ முடியாத‌ வலி என்றால் டாக்டரிடம் கேட்பதே நல்லது.

இதுவும் கடந்து போகும்

நன்றி அகிலா.. :-)

குழந்தை வளர்ச்சியால் தான் என எனக்கும் புரிகிறது.. ஆனால் முழு நேரமும் வலித்தால் என்ன செய்ய..

டாக்டரிடம் போன மாதமே கேட்டு விட்டேன்..வலி இருக்குமென்று தான் சொன்னார்கள்.. ஆனால் எதற்கும் வீட்டு வைத்தியம்/பாட்டிவைத்தியம் இருக்குமல்லவா? சுடு தண்ணீர் ஊற்றுவது போல.. அதற்காக தான் கேட்கிறேன்..

அவந்திகா

//வீட்டு வைத்தியம் / பாட்டி வைத்தியம்// எதையும் உள்ளே எடுக்காமலிப்பது பாதுகாப்பு. பூசும் மருந்துகளை வேண்டுமானால் முயற்சி செய்யலாம். அதுவும் தொடர்ந்து செய்ய முடியாது இல்லையா?

//வலி இருக்குமென்று தான் சொன்னார்கள்.// அதைத் தான் நானும் நினைத்தேன். அதனால் தான் பதில் சொல்லவில்லை. //முழு நேரமும் வலித்தால் என்ன செய்ய..// இன்னும் கொஞ்ச காலம் என்று (அப்படி இல்லாவிட்டாலும்) நினைத்துக் கொள்ளுங்கள். :-) வேலை எல்லாம் கூடுமான வரை காலையிலேயே செய்யப் பார்க்கலாம் ஹ்ம்! ஆனால், அப்படி ஆரம்பித்தால் இன்னும் நேரத்துக்கே வலி வர ஆரம்பிக்கலாம். ஒரே ஊரில் இருந்தால் வந்து உதவி செய்வேன். :-)

நீங்கள் சிரித்துக்கொண்டே சமாளிப்பீர்கள் என்று தோன்றுகிறது. :-)

‍- இமா க்றிஸ்

முதலில் மருந்து தடவினேன்.. அப்படியும் வலி விட்டபாடில்லை.. அதான் மருந்தை விட்டுட்டேன்..

நீங்கள் கூறுவது உண்மைதான்.. சீக்கிரம் வேலைகளை முடிக்க முயன்ற விளைவுதான் பகலிலேயே வலி ஆரம்பித்தது.நியூசியில் இருந்து கொண்டு உதவியா?? ஹா ஹா நன்றிம்மா..

அவந்திகா

இந்த முறை டாக்டரிடம் சென்ற போது போன மாதத்தை விட ஹீமோகுளோபின் அளவு குறைந்திருப்பதாக சொன்னார்கள்...

2 மாதங்களாக கருப்பு உலர் திராட்சை, அத்திப்பழம் சாப்பிடுகிறேன்.. வேறு ஏதாவது
சாப்பிடலாமா? வேறு என்ன சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம்? 10 நாளில் திரும்பவும் ப்ளட் டெஸ்ட் எடுக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார்கள்...

வேறு என்ன சாப்பிடலாம் தோழிகளே??

அவந்திகா

நீங்க‌ அசைவம் சாப்பிடுவீங்க‌. மீன் நல்லது. ரெட் மீட் மிகவும் நல்லது. ஈரல் (சுவரொட்டி), டோஃபு, கடும் பச்சை நிறக் கீரைகள், அவரை இனக் காய்கள் நல்லது.

தாவரப் புரங்களிலிருந்து உடல் உறிஞ்சும் இரும்புச் சத்தின் அளவு வெகு குறைவு. காய்கறிகளுடன் சிறிதளவு மீன் அல்லது மாமிசம் சேர்த்துச் சமைத்தால் உறிஞ்சும் தன்மை அதிகரிக்கும் என்கிறார்கள்.

‍- இமா க்றிஸ்

நன்றி மா.. இவை எல்லாமே சாப்பிடுவேன்..இதில் டோஃபு, சுவரொட்டி இரண்டும் என்னவோ சிறு வயதில் இருந்தே சுத்தமாக பிடிக்காது.. வெறும் ஈரல் சாப்பிடுவேன்.. இன்று கூட ஈரல்தான்.. :-)

அவந்திகா

எனக்கு இப்பொழுது ஒன்பது மாதம் ஆரம்பித்து உள்ளது.. சில நாட்களாகவே தொப்புளுக்கு மேலே வலி உள்ளது.. இன்று தொப்புள் உள்ளே இழுப்பது போல் வலி உள்ளது.. தினமும் இரவில் வயிற்றில் விளக்கெண்ணெய் தேய்த்து விட்டு படுக்கிறேன்.. (பக்கத்து வீட்டு பாட்டியின் ஆலோசனை) :-)

2 நாள் முன்னே டாக்டரிடம் போன் செய்து கேட்டு 3 டேப்லட்ஸ் கொடுத்தாங்க.. அது சாப்பிடும் போது வலி இல்லை.. இப்போ இரண்டு நாளாக வலி.. எதனால் வலி இருக்கிறது? வேறு ஏதாவது தீர்வு இருக்கா?

(இன்னும் 5, 6 நாளுக்கு என் டாக்டரை பார்க்க முடியாது) :(

அவந்திகா

Sister ippo unga health yeppadi irukku feel better?

மேலும் சில பதிவுகள்