ஹைய்யா... ஜாலி...... வாங்க... அரட்டை அடிக்கலாம் ( பாகம் 19)

ஹாய் ஹாய் ஹாய் மாசங்கள் கழித்து உங்களோட கலாய்க்க வந்து இருக்கேன்

கலாய்க்க நான் ரெடி நீங்களாம் ரெடியா?

முந்தைய பதிவுகள் அதிகம் ஆகி விட்டதால் புதிதாக இதை தொடர்ந்துள்ளேன் யார் முதலில் ரிப்பன் கட் பண்ன போகிறீங்க?வாங்க சீக்கிரம்..

ஹாய் எல்லோருக்கும் எல்லோரும் நலம்தன்னே?

ஜெ.மாமி என்ன செய்ரேள்?பெருநாள் முதல் விசஸ் உங்க ளோடதுதான் ரொம்ப சந்தோசம்..

கதீ இன்சாப் போட்டோ அனுப்பு...

செல்விக்கா உடம்பு சரியாகிடா?போன் போடுகிறேன்?

ஹரி,ரஜினி,மேனகா,விஜி,ஓ சாதிகா சேச்சி(கோபம் வருதான் ஹா ஹா இதுதான் நேக்கு வேணும்) எப்படி இருக்கீங்க?உங்களைலாம் அடிக்கடி நினைப்பதுண்டு...

அதிரா உடம்பு சரியாகிட்டா?

விஜிமலை,தனிசா,சுகன்யா பிரகாஸ்,சுகைனா,சதாலஷ்மி,ஸ்ரீ,கவி,கவி எஸ்,விஜயா,மனிசாரா,ஆண்டாள்,ஜெயலஷ்மி எஸ்,ஸ்வேதா,ஹாஷினி,தமீழி,ஹர்ஷினி,அனைவருக்கும் ஒரு பெரிய ஹாய்..இதில் பலர் புது முகம் இருக்கீங்க அனைவருக்கு வெல்கம்..யாரோட ப்ர்யரையாவது விட்டு இருந்தால் பெரிய மனசு பண்ணி இந்த சின்ன சின்ன சின்னபொண்ணை மன்னிச்சுங்க :-)யாரும் தப்பா நினைக்க வேண்டாம் நினைக்காமல் இருப்பீங்கன்னு நம்புகிறேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

சார்தா போன் நம்பரை ஜெ.மாமி ஏன் அனுப்ப விஒல்லை?தீபாவளி பிஸியா?

என் நம்பரை அவங்களிடம் கொடுங்க!

மஹா பேசினாங்க..அருசுவையில் எப்படி சட சடன்னு பேசுவாங்களோ அதே போலதான் போனிலும் பேசுறாங்க மட மடன்னு ரொம்ப நல்லா பேசினாங்க...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

என்னப்பா உடம்பு எப்படி இருக்கு? இப்போ எல்லாம் நார்மல் ஆயிடிச்சா. மரியத்துக்கு இன்னைக்கு லீவுதானே. வயிற்றில் இருக்கும் குட்டிப்பாப்பா சுகமா. செக்கப் ஒழுங்கா போறீங்களா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஏன் மர்லியா ரிப்பன் கட் பண்ண நான் கிடையாதா?

இன்று தளியும், நீங்களுக்கு அருசுவைக்கு வந்தது ரொம்ப்வே சந்தோஷம்.
இனி அதிராவிற்கு போட்டி போட ஆள் வந்தாச்சு இனி அருசுவையே தலம் தாங்குமா/

ஏற்கனவே டல் அடித்து கிடந்த அருசுவையை சுஹைனா என்னும் கவிதை புயல் வுருவுப்பாக்கி கொண்டு இருக்கும்.
ஒரு பக்கம், மனோகரி அக்காவும், ஜே மாமியும் பட்டி மன்றம் அது சாலமன் பாப்பையா ரேஞ்சுக்கு வருமா?

இப்போது பழைய ஆட்கள் எல்லாம் வந்தாச்சு பாபு தம்பி தளத்தை பத்திராமா தூக்கி பிடித்து கொள்ளுங்கள்

ஹா ஹா ஹி ஹி

இதில் நான் உங்கள் அனைவரையும் ரசிக்கும் வெரும் பார்வை யாளர்தான் வர்டா///
ஜலீலா

Jaleelakamal

மர்ழி,வந்தாச்சா?மின்னல் மாதிரி வந்து விட்டு போக மாட்டீர்களே?நீங்கள் தான் காலில் சக்கரம் கட்டிக்கொண்டிருப்பவர் ஆயிற்றே.வாருங்கள் நீங்கள் இருந்தால் கலகலப்பு அதிகரிக்கும்.இனி மர்யமுக்கு தம்பி பிறந்து விட்டால் மறுபடியும் அறுசுவைக்கு லீவ் போடும் சூழ்நிலை வரும்.இப்போது தொடர்ந்து கலக்குங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

அப்படிச் சொல்லமாட்டேன்..... இடைக்கிடை வந்திடுவேன்..... ஜலீலாக்கா என்ன ஜெயந்திமாமி தலைப்புக் கொடுத்திட்டாவா? நான் இன்னும் பார்க்கவே இல்லை....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஓஹ் விஜிமலை உங்க தங்கைக்கா?பார்த்ததும் கஸ்டமாகிட்டு..இப்ப எப்படி இருக்காங்க?

தனிசா நல்மா?ஆமாம் தனிசா அல்லாஹ் உதவியால் நார்மல் ஆகிட்டு ஆனா லோ சுகர்,இரத்தம் இல்லைன்னு பயம் ஏற்படுத்தி விட்டுட்டாங்க..ஆனால் இதை தாங்கி கொள்லலாம்..முதலில் பட்ட வேதைனையை விட...

ஆமாம் யாருக்காவது மேனகா இப்ப எப்ப்டி இருக்காங்கனு தெரியுமா?அப்பவே 8 மாசம்ன்னு சொன்னாங்க இப்ப குழந்தை பெற்று இருப்பாங்களே?தெரிஞ்சவங்க சொல்லுங்க...ஜீவா இப்ப எப்படி இருக்காங்கன்னும் தெரிஞ்சவங்க சொல்லுங்க...

அக்கா,பிறகு மெயில் போடறேன் நான் ஒரு மறதிகாரி இப்ப மூட் அவுட்...ஆனாலும் அதிலும் ஒரு அர்த்தமிருக்கு என்ன ஒரே குழப்பமா?மெயிலை பாருங்க ஹி ஹி

சாதிகா லாத்தா முன்பு போல் வர முடியாது ஆனா அரட்டை பக்கம் வராமல் இருந்ததற்க்கு எட்டி பார்க்க வருவேன் அசர் தொழனும் பாங்கு சொல்லும் வரை பதிவு போடலாம்னு என் பொண்னு தூக்கம்..

அதிரா வாமா வா..என்னை கவனிக்க வில்லையா/>?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேனகாவிற்கு பெண் குழந்தை பிறந்து 15 நாள் ஆயிற்று. பொண்ணு பேரு ஷிவானி மர்யான்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மர்ழி ஜி டாக்கில் ஆஃப் லைன் மெசேஜ் கொடுத்து இருக்கின்
றேன்.பார்க்கவும்

arusuvai is a wonderful website

மர்ழியா!!
என்ன????? நான் உங்களைக் கண்டுகொள்ளவில்லையா? காணமாட்டேன் ஏன் தெரியுமா? கூவிக்கொண்டு வருவீங்க... வந்திட்டீங்களா என ஓடி வந்தால், திடீரென காணாமல் போயிடுவீங்க, அதிராவின் சின்ன இதயம் அப்படியே சுருங்கி மேலும் குட்டியாகிடும்... இதெல்லாம் எனக்குத் தேவையா?... இப்பகூட பாருங்க.... காணாமலே போயிட்டீங்க... தைரியம் இருந்தால் இப்ப, உடனேயே வாங்க பார்க்கலாம்.......

ஸாதிகா அக்கா! நீங்க செய்வது சரியா? மர்ழியாவும் நானும்.... இப்படி நெருக்கம்..., அப்படியிருக்க அங்க மட்டும் ஏதோ ரகசியம் அனுப்பினேன் பார்க்கவும் என்று சொன்னால் அது நல்லாவே இல்லை.

ஜலீலாக்கா லீவு முடிந்ததா?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்